குத்தம்பாக்கம் பேருந்து நிலையம்... எல்லாம் ஏசிதான்.. எப்போது திறப்பு.. சேகர்பாபு சொன்ன அப்டேட்
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த பேருந்து நிலையம் முழுவதும் ஏசி வசதி செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்தியாவிலேயே மிகப் பெரிய பேருந்து முனையமான கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், 6 இலட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து கிளாம்பாக்கம் வரை மாநகரப் பேருந்துக் கழகப் பேருந்துகளை இயக்குவதற்கென 7 ஏக்கர் பரப்பளவில் 60 பேருந்துகள் நிறுத்தும் வசதியுடன், மாநகரப் பேருந்துக் கழக முனையம், ஜி.எஸ்.டி. சாலையையொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
மாநகரப் பேருந்துக் கழக முனையத்திலிருந்து (MTC) பிரதான முனையத்திற்குச் செல்லும் பயணிகளுக்கு, இயங்குபடிகள் மற்றும் மின்தூக்கிகளுடன் கூடிய சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டிட அறைகள், தரை தளத்தில் 53 கடைகள் மற்றும் 2 உணவகங்கள் / துரித உணவு மையம் மற்றும் முதல் தளத்தில் 47 கடைகள் மற்றும் 2 உணவகங்கள் / துரித உணவு மையம், ஏடிஎம் வசதி அமைக்கப்பட்டுள்ளது.
தனி மருத்துவமனை மற்றும் இலவச மருத்துவ மையம், போக்குவரத்து அலுவலகம், நேரக் குறிப்பாளர் அலுவலகம், ஆண்கள், பெண்கள், மற்றும் திருநங்கைகளுக்கான கழிவறைகள், குடிநீர் வசதி, மின்விசிறிகள், இருக்கைகள், சூழல் வரைபடங்கள் வசதியுடன் பேருந்து நிறுத்துமிட அமைப்பு போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் போன்று குத்தம்பாக்கம் பேருந்து நிலையமும் இந்த ஆண்டு இறுதிக்குள் திறக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் சேகர்பாபு, "கிளாம்பாக்கம் போன்று பூவிருந்தவல்லி அருகே குத்தம்பாக்கம் பேருந்து நிலையமும் இந்த ஆண்டு இறுதிக்குள் திறக்கப்படும்.
அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பணியாற்றிய அனுபவத்தை பயன்படுத்தி குத்தம்பாக்கத்தில் பயணிகளுக்கு கூடுதல் வசதி செய்து தர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குத்தம்பாக்கத்தில் கூடுதலாக குளிர்சாதன வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications