100% பணிகள் ஓவர்! மக்கள் பார்த்ததும் வியக்கும்! பிரம்மாண்ட பேருந்து நிலையம்! சென்னையில் எங்கே வருது?
சென்னை: சென்னையில் கட்டப்பட்டு வந்த புதிய குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பணிகள் 100% முடிந்துவிட்டன.
இனி உள்ளே போர்ட் வைக்கும் பணிகள், டிஜிட்டல் ஸ்கிரீன் அமைக்கும் பணிகள் மட்டும் மீதம் உள்ளன. இந்த பணிகள், அதன் சோதனைகள் அடுத்த 15 நாட்கள் நடக்கும். அதன்பின் பேருந்துகள் அங்கே சோதனை செய்யப்படும். இதையடுத்து ஆகஸ்ட் 1ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 427 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் இந்த பேருந்து நிலையம் தயாராகி வருகிறது.

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு
குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 98% நிறைவடைந்துள்ளன. அழகுபடுத்தும் பணிகள் மற்றும் மின்சார இணைப்பு போன்ற எஞ்சிய 10% பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த பேருந்து நிலையம் ஜூன் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டு, ஜூலை மாதம் முழுவதும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, ஆகஸ்ட் 1ஆம் தேதி திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அம்பத்தூர் மற்றும் தண்டையார்பேட்டை பேருந்து நிலையங்கள் முறையே 57 மற்றும் 52 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. தற்போது, அவற்றின் சீரமைப்புப் பணிகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளன. மேலும், செங்கல்பட்டு மற்றும் மாமல்லபுரத்தில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சென்னை முழுவதும் உள்ள ஒன்பது பெருநகர பேருந்து நிலையங்களையும் நவீனமயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பயணிகளின் போக்குவரத்து வசதிகள் மேம்படும்.
பூந்தமல்லி பேருந்து நிலையம் இடமாற்றம்
பூந்தமல்லியில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் குத்தம்பாக்கத்திற்கு மாற்றப்பட உள்ளன. சென்னையின் உள்ளூர் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து 150 பேருந்துகளை குத்தம்பாக்கத்திற்கு மாற்றி, அதன் மூலம் இணைப்பு அதிகரிக்கப்படும். பூந்தமல்லி டெப்போவில் 120 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து நிலையம், சென்னையில் இருந்து மேற்கு நோக்கி செல்லும் பேருந்துகளுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக பெங்களூர், தர்மபுரி மற்றும் வட தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் திருமழிசை அருகே உள்ள குத்தம்பாக்கத்திற்கு மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) வரவிருக்கும் பேருந்து நிலையங்களில் பயன்படுத்தப்படாத அரசு வாகனங்களை நிறுத்துவதற்கும் முடிவு செய்துள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படுவதால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஏற்படும் கூட்ட நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. இதற்கிடையில், முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளுக்கான தனி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் மொத்தத்தில் நெரிசல் குறையும்.
கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட் பகுதியில் குடியிருப்புகள், ஐடி நிறுவனங்கள் மற்றும் விளையாட்டு சம்பந்தப்பட்ட திட்டங்கள் வரவுள்ளன. விளையாட்டு அரங்கம் மற்றும் உயரமான கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. கோயம்பேடு மார்க்கெட் ஏற்கனவே காலியாகிவிட்டது. விரைவில் கோயம்பேடு பேருந்து நிலையமும் மூடப்பட உள்ளது. பெங்களூர், தர்மபுரி மற்றும் வட தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் திருமழிசை அருகே குத்தம்பாக்கத்திற்கு மாற்றப்பட உள்ளதால் பயணிகளுக்கு கூடுதல் வசதி கிடைக்கும்.
கோயம்பேட்டில் புதிய ஐடி பூங்கா
கோயம்பேடு பகுதியில் பிரம்மாண்டமான ஐடி நிறுவனம் அமைக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் இரண்டு மாதங்களில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நில ஆய்வு தொடர்பான சோதனைகள் விரைவில் மேற்கொள்ளப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆகஸ்ட் மாதம் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படுவதன் மூலம், சென்னையின் போக்குவரத்து infrastructure ஒரு புதிய கட்டத்தை எட்டும். இதன் மூலம் நகரின் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், பயணிகளின் பயண அனுபவமும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications