Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை திரைப்பட நகரம்.. 152 ஏக்கரில் தமிழக அரசு மாஸ்டர் பிளான்.. என்னென்ன வசதிகள்.. முழு விபரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவீன தொழில் நுட்ப எல்இடி சுவர்கள் அனைத்து வசதிகளுடன் கூடிய சர்வதேச தரத்தில் சென்னையில் புதிய திரைப்பட நகரம் பூந்தமல்லி அருகே குத்தம்பாக்கத்தில் உருவாக உள்ளது. ரூ.500கோடி மதிப்பீட்டில் 152 ஏக்கரில் நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக உள்ள புதிய திரைப்பட நகரத்தில் என்னென்ன வசரிகள் உள்ளன என்று பார்க்கலாம்.

சினிமா படப்பிடிப்பு என்றாலே சென்னைதான் என்று முன்பு இருந்தது. எத்தனையோ படப்பிடிப்பு தளங்கள் சென்னையில் இருந்தன. பிரம்மாண்டமான படங்களின் படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெற்றுள்ளன. நாளடைவில் வெளிநாடுகள், வெளி மாநிலங்களுக்கு சென்று படப்பிடிப்புகள் நடத்தப்படுவதால் சென்னையில் உள்ள பல படப்பிடிப்பு தளங்கள் வேறு வடிவம் எடுத்து வருகின்றன.

Kuthambakkam film city Modern technology in 152 acres what are the facilities chech

சென்னையில் முதலில் கட்டப்பட்ட எம்ஜிஆர் திரைப்பட நகரம் பாழடைந்து வனம் போல காட்சி தருவதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 2023 - 24ம் ஆண்டுக்கான செய்தித் துறை மானியக் கோரிக்கையின் போது, அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் சென்னை அருகே அதி நவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

திரைப்பட நகரம் அமைப்பது குறித்தும், திரைப்பட நகரம் அமையும் இடத்தில் அதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்வது தொடர்பாக பல கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின், பூந்தமல்லி அருகில் 140 ஏக்கரில் 500 கோடி செலவில் திரைப்படம் நகரம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

இதனையடுத்து திரைப்பட நகரம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பூந்தமல்லியில் தேசிய நெடுஞ்சாலை அருகே குத்தம்பாக்கத்தில் 152 ஏக்கரில் அதி நவீன திரைப்பட நகரம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. திரைப்பட நகரம் அமைக்க மாஸ்டர் பிளான் தயாரிக்க தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

திரைப்பட நகரத்தில் பெரிய அளவிலான ஸ்டுடியோ, படப்பிடிப்பு அறைகள் விசுவல் எபெக்ட்ஸ் ஸ்டுடியோ அமையவுள்ளது. பணிமனை, உணவகம், அலுவலகங்கள், டப்பிங், எடிட்டிங், கூட்ட அரங்கம், முதலுதவி அறை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், நீதிமன்றங்கள், தெருக்கள் மற்றும் தயாரிப்புக்குப் பிந்தைய ஸ்டுடியோக்களின் மெகா அளவிலான தொகுப்புகள் மட்டுமின்றி, பட தயாரிப்பு நேரத்தையும் செலவையும் குறைக்க நவீன தொழில் நுட்ப -எல்இடி சுவர்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இது வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், தொலைதூர இடங்களை மெய்நிகரில் உருவாக்கப்பட்டு, பெரிய 270 டிகிரி வளைந்த எல்இடி திரைகளுக்கு முன் நேரில் இருப்பது போல வைத்து படப்பிடித்து நடத்த முடியும் என திரைத்துறையினர் கூறுகின்றனர். தி மாண்டலோரியன் மற்றும் 1899 போன்ற வெற்றிகரமான வலைத் தொடர்களை உருவாக்க இந்த தொழில்நுடபம் பயன்படுத்தப்பட்டது

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திரைப்படத்துறையினர், இது வளர்ந்து வரும் தொழில்நுட்பம், இந்தியாவில் மெதுவாக முக்கியத்துவம் பெறுகிறது. தற்போது சென்னையிலும், மும்பை, ஹைதராபாத், டெல்லி போன்ற நகரங்களிலும் உள்ள தனியார் ஸ்டுடியோக்கள் நாளொன்றுக்கு ரூ.5 லட்சம் வசூலிக்கின்றன. தற்போது, ​​இந்த கருவியை உத்தேசித்துள்ள திரைப்பட நகரத்தில் வழங்க தமிழகம் திட்டமிட்டுள்ளதால், செலவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது அபாயங்களைக் குறைத்து நடிகர்கள் சிறப்பாக செயல்பட உதவும். உதாரணமாக, வெடிகுண்டு வெடிக்கும் காட்சிகள், சண்டைக்காட்சிகள் ஆபத்தானவை. குண்டுவெடிப்பு மற்றும் ஆபத்தான சண்டை காட்சிகளை தனித்தனியாக பச்சை மேட்டில் படமாக்குவதும், பின்னர் புரொடக்ஷன் ஸ்டுடியோக்களில் அவற்றை முழுமையாகப் பொருத்துவதும் கடினம். இப்போது இந்தப் புதிய நுட்பத்தைப் பயன்படுத்தினால் காட்சிகளை எல்இடி சுவர்களில் இயக்க முடியும், மேலும் நடிகர் எப்போது குதிக்க வேண்டும் என்பது சரியாகத் தெரியும்.

இது தவிர, சஹாரா பாலைவனத்திலிருந்து நியூயார்க் தெருக்கள் வரை எல்இடி சுவர்களில் லட்சக்கணக்கான காட்சிகள் கிடைக்கும். திரைப்படத் தயாரிப்பாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப ஒருவர் விளக்குகளை பகலில் இருந்து நள்ளிரவு வரை கூட மாற்றலாம். படப்பிடிப்பு நடைபெறும் இடத்தைத் தேடுவதற்குப் பதிலாக, துணை நடிகர்கள் உட்பட மொத்தக் குழுவையும் அழைத்து செல்வதற்கு பதிலாக, இந்த அமைப்பு படப்பிடிப்புக்கு எடுக்கும் நேரத்தைக் குறைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இந்தச் செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக உயர்மட்ட அதிகாரிகளுடன் இந்த வாரம் கூட்டம் நடத்தப்பட்டு விரிவான திட்ட அறிக்கை விரைவில் வெளியிடப்படும். உள்ளூர், பிராந்திய மற்றும் தேசிய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன் கூடிய திரைப்பட நகரத்தை உருவாக்க வேண்டும் என்பதே நோக்கம் என்றார்.

20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் புகழ்பெற்ற படப்பிடிப்பு மையமாக இருந்த சென்னை நகரம், தற்போது குறைந்த அளவிலான படப்பிடிப்பு தளங்கள் மற்றும் ஸ்டுடியோக்களை கொண்டுள்ளது, இதனால் தயாரிப்பாளர்கள் ஹைதராபாத், புதுச்சேரி அல்லது பெங்களூரு ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தற்போது இந்த திரைப்பட நகரம் அமைந்தால் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று திரைப்படத்துறையினர் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+