உயிருக்கு மதிப்பளியுங்கள்.. ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம்..சொல்வது எல்.முருகன்
சென்னை: மக்களின் உயிருக்கு மதிப்பளித்து ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறந்து பயன்படுத்தலாம் என்று தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை தி. நகரில் உள்ள தமிழ்நாடு பா.ஜ.க தலைமையகமான கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது.இதில் இருந்து மக்களைக் காப்பதற்காக தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் 'கொரோனா சேவை இயக்கம் ' என்பது மக்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது.

முன்கள பணியாளர்கள் அர்ப்பணிப்பு
பொதுமக்கள் 044 43114061 மற்றும் 044 42691836 ஆகிய எண்களை தொடர்புகொண்டு கொரோனா பற்றிய ஆலோசனைகளை பெறலாம்.மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் இந்த இயக்கத்தின் மூலம் செய்யப்படும். இந்த கொரோனா காலத்தில் முன்கள பணியாளர்களின் அர்ப்பணிப்பையும் அவர்களின் உழைப்பையும் நிச்சயமாக நாம் மதிக்க வேண்டும்.

ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை
ஆகஸ்ட் மாதத்துக்குள் 30 கோடி பேருக்கு தடுப்பு செலுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியது. இதுவரை 13 கோடியே 55 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதே சராசரியில் சென்றால் 45 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்படும். ஆக்ஸிஜனை பொறுத்தவரையில் உற்பத்திக்கான தட்டுப்பாடு இல்லை. ஆனால் வெகு தொலைவிற்கு அதனை எடுத்துச் செல்வதே சவாலான விஷயமாக உள்ளது.

உண்மைக்கு புறம்பான செய்திகள்
உலகத்திலேயே முதன் முறையாக இந்தியாவில்தான் ரயில்களிலும், இராணுவ விமானங்களிலும் ஆக்சிஜன்எடுத்து செல்லப்படுகிறது. மேலும் இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கலன்கள் அமைக்கப்பட உள்ளன. ஆனால் எதிர்க்கட்சிகள் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருந்து பற்றாக்குறை என உண்மைக்குப் புறம்பான செய்திகளை கூறி வருகின்றன.

ஸ்டெர்லைட் ஆலை திறக்கலாம்
குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் அதிகப்படியான ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் அந்த ஆக்சிஜனை கொண்டு செல்வது சவாலாக உள்ளது. ஆனாலும் டெல்லியில் ஆக்சிஐன் இல்லாத குறிப்பிட்ட சில மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு விட்டது. மக்களின் உயிருக்கு மதிப்பளித்து ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறந்து பயன்படுத்தலாம். அங்குள்ள மக்களுக்கும் நிச்சயமாக ஆக்ஸிஜன் தேவைப்படும் என்று எல்.முருகன் தெரிவித்தார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications