நன்றி..மீண்டும் வராதீங்க! திடீரென ராஜினாமா செய்த எல்.முருகன்! செய்தாரா? செய்ய வைக்கப்பட்டரா? பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது மத்திய இணை அமைச்சர் பதவியையும், ராஜ்யசபா எம்பி பதவியும் ராஜினாமா செய்துவிட்டு கட்சி தொண்டருடன் இணைந்து கட்சியை விரிவுபடுத்த விரும்புவதாக திடீரென அறிவித்திருக்கிறார் பாஜகவின் எல்.முருகன்.இந்த நிலையில் முருகனின் பதவி விலகலுக்கான காரணம் குறித்து பாஜக வட்டாரங்கள் சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளன.

தமிழக பாஜக தலைவர்களில் பிரபலமானவர் எல்.முருகன். நாமக்கல் மாவட்டம் பரமத்தியைச் சேர்ந்த வழக்கறிஞரான இவர் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியில் இருந்து பாஜகவில் பயணித்து வருகிறார். 2011 சட்டமன்ற தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

தொடர்ந்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவராக பதவி வகித்தார். 2017 முதல் 2019 வரை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவராக பதவி வைத்த அவர், 2020ல் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.

L Murugan BJP Narendra Modi

எல்.முருகன்

2021 வரை அந்த பதவியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 2021 தமிழக சட்டசபை தேர்தலில் தாராபுரத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த பிறகு அதே ஆண்டில் மத்திய அமைச்சராக பதவி ஏற்றார். இதற்கிடையே தமிழக பாஜகவில் புதிதாக இணைந்த அண்ணாமலைக்கு துணைத் தலைவர் பதவியும், பின்னர் மாநில தலைவர் பதவியும் தரப்பட்டது. மாநில தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய பிரதேசம் மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டு மத்திய ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சரவை இலாக்காக்களை கவனித்து வந்தார்.

நரேந்திர மோடி

இந்த நிலையில் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் எல் முருகன். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் தான் பணியாற்றியது மிகப்பெரிய கௌரவம் என்றும், எளிய குடும்பத்தைச் சேர்ந்த தன்னை தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராகவும் இருமுறை எம்பி ஆகவும் அமைச்சரவையிலும் பணியாற்ற வாய்ப்பு வழங்கியது தன் மீது வைத்திருந்த நம்பிக்கையின் வெளிப்பாடு என கூறியுள்ளார்.

மத்திய இணை அமைச்சர்

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு, பார்லிமென்ட் விவகாரங்கள், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு ஆகிய அமைச்சகஙக்ளில் பணியாற்றிய வாய்ப்பு நாட்டு மக்களை பற்றிய புரிதலை தனக்கு உறுதிப்படுத்தியது என கூறியுள்ளார். மேலும் கட்சியை வலுப்படுத்துவதில் முழு நேரமாக ஈடுபட ஏதுவாக மத்திய இணை அமைச்சர் பொறுப்பில் இருந்தும் ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்ய அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.

ராஜினாமா

மேலும் ஒவ்வொரு கிராமமாக சென்று மக்களை சந்தித்து பாஜகவை விரிவுபடுத்த விரும்புவதாகவும் எல்.முருகன் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த நிலையில் உண்மையை நிலவரம் என்ன என விசாரித்த போது பாஜகவின் சில மூத்த நிர்வாகிகள் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

தமிழக பாஜக

தமிழக பாஜக தலைவராக இருந்த போதும் மத்திய அமைச்சராக இருந்த போதும் எல்.முருகன் தமிழகத்தில் பாஜகவை வளர்க்க பெரிய அளவில் பங்களிக்கவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. 2021க்கு முன்னதாகவும் 2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னும் மத்திய அமைச்சரவில் பங்கு வைத்தும், தமிழக அளவில் பெரிய தாக்கத்தை எல் முருகன் ஏற்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தது.

தமிழிசை சௌந்தரராஜன்

ஏற்கனவே தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநராக இருந்து தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு கட்சி பணிகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில் எல்.முருகனையும் அதேபோல பணியாற்ற வேண்டுமென தலைமை கேட்டுக் கொண்டதாம். நாங்களாக நீக்குவதை விட நீங்களாகவே உங்கள் மாநிலத்திற்கு செல்லுங்கள் என 'மத்திய அரசு' வலியுறுத்திய நிலையில் தனது பதவியை முருகன் ராஜினாமா செய்து விட்டார் என்கின்றனர். மேலும் தமிழக பாஜக தலைவராக தான் நியமிக்கப்படலாம் என்ற நம்பிக்கையிலும் அவர் இருப்பதாக சொல்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+