தமிழை பற்றி பேச ராகுல் காந்தி யார்? ஒரு திருக்குறளாவது சொல்ல முடியுமா? எல். முருகன் கேள்வி
சென்னை: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் ஒரு திருக்குறளை சொல்ல முடியுமா? என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் அவரது உருவப்படத்துக்கு, எல்.முருகன், பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
அப்போது செய்தியாளர்களிடம் எல். முருகன் கூறியதாவது:
கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும், தடுப்பூசி வழங்குவதிலும் உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக, பிரதமர் மோடி திகழ்ந்து வருகிறார். இதுவரை 96 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.

பூத் கமிட்டிகளை வலுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் 27-ந் தேதி பழனியில் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, நான் ஆகியோர் காவடி எடுக்க உள்ளோம்.
காங்கிரஸ் கட்சி இந்தியாவில் இருந்தே அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியால் ஓரிடத்திலாவது தனித்து போட்டியிட முடியுமா? தமிழைப் பற்றிப் பேச ராகுல் காந்திக்கு அருகதை இல்லை. அவரால் ஒரு திருக்குறளை சொல்ல முடியுமா?
பாஜகவில் எந்த ரவுடியையும் சேர்ப்பதில்லை. டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் தூண்டிவிடப்பட்ட ஒன்று. விவசாயிகளின் பெயரில் அர்பன் நக்சல்கள்தான் தான் போராடுகிறார்கள். சசிகலா விரைவில் குணமடைய வேண்டும். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு முருகன் கூறினார்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications