உழைப்பாளர் தினம்.. இன்று தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு லீவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகம் முழுவதும் இன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டிருக்கிறது.

காந்தி ஜெயந்தி உள்ளிட்ட சிறப்பு நாட்களை போல உழைப்பாளர் தினமான இன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டிருக்கிறது.

TASMAC Tamil Nadu chennai

இது தொடர்பாக விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "டாஸ்மாக் விற்பனை மதுபானக்கடைகள், அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள், தனியாருக்கு சொந்தமான மதுபான கூடங்கள், நட்சத்திர விடுதிகளில் உள்ள மதுபான கூடங்கள் என அனைத்து வகையான மதுபான கூடங்களும் இன்று மூடப்பட்டிருக்கும். இந்த உத்தரவை மீறி மதுபானங்களை விற்பனை செய்யும் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்று மதுபான கூடங்களில் மது விற்பனை நடைபெறுவது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட மதுபான கூடங்களுக்கான உரிமம் ரத்து செய்தல், அல்லது நிறுத்தி வைத்தல் போன்ற போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்திருக்கின்றனர்.

உலகம் முழுவதும் இன்று தொழிலாளர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த உலகம் முழுவதும், அதாவது நாம் பார்க்கும் கட்டிடங்கள் தொடங்கி, மிகப்பெரிய உலக அதிசயங்கள் வரை அனைத்தும் தொழிலாளர்களால் உருவானதுதான். ஆனால் உலகையே உருவாக்கிய தொழிலாளர்களுக்கு இன்று இருக்க இடமில்லை. எனவே அவர்களின் உரிமைக்காக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. சோகம் என்னவெனில் இன்று அரசு விடுமுறை நாளாக இருந்தும் கூட பல தனியார் நிறுவனங்கள் தொழிலாளர்களை வேலைக்கு வர சொல்லியிருக்கிறார்கள் என்பதுதான்.

முன்னதாக தொழிலாளர் தினத்தையொட்டி அரசியல் தலைவர்கள் விடுத்திருந்த வாழ்த்து அறிவிப்பு பின்வருமாறு,

எடப்பாடி பழனிச்சாமி(அதிமுக): உழைப்பும் அர்ப்பணிப்புமே நம் நாட்டைக் கட்டமைக்கிறது. உழைப்பே உயர்வு தரும்; மனநிறைவு தரும்; ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு, தளர்வறியா உழைப்பின் மூலம் நம் நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் 'மே' தின நல்வாழ்த்துகள்.

முத்தரசன்(கம்யூனிஸ்ட்): பெரும்பான்மை மத பாசிசத்தை முறியடித்து, ஜனநாயகத்தை பாதுகாக்க மேதின நாளில் உறுதி ஏற்போம்.

செல்வப்பெருந்தகை(காங்கிரஸ்): பணமதிப்பிழப்பு, பொருத்தமற்ற சரக்கு மற்றும் சேவை வரி, பணவீக்கம் போன்ற காரணங்களால் தொழில் வளர்ச்சி இல்லாத நிலையில், பொருளாதார பேரழிவு காரணமாக தொழிலாளர்கள் வாழ்வில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறார்கள். அவர்கள் தங்களது உரிமைகளை பாதுகாக்கின்ற வகையில், குரல் எழுப்பும் நாளாக மே 1ம் தேதி அமைய வேண்டும்.

ராமதாஸ்(பாமக): அமைப்புசாரா தொழிலாளர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நியாயமாக வழங்கப்பட வேண்டிய உரிமைகளும், அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும். அதை உறுதி செய்வதற்காக போராடுவதற்கு இந்நாளில் பாட்டாளிகள் அனைவரும் உறுதியேற்போம்.

அன்புமணி (பாமக): தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நியாயமான ஊதியம், விடுமுறை, 8 மணி நேர பணிக்காலம், ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புகள் என அனைத்தும் வழங்கப்படுவதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

ஜி.கே.வாசன்(தமாகா): தொழிலாளர்களின் பங்களிப்பை நினைவு கூர்ந்து அவர்களின் நலன் காக்க அனைவரும் அவர்களுக்கு துணை நிற்க வேண்டும்.

ஜவாஹிருல்லா(மமக): தியாகம் செய்து பெற்ற உரிமைகளைப் பேணிப் பாதுகாக்கவும், தொழிலாளர் வர்க்கம் ஓரணியில் நின்று உரிமைகளைப் பெற்றுக் கொள்ள இந்த மே நாளில் உறுதியை மேற்கொள்வோம்.

வைகோ(மதிமுக): போராடினார்கள். தியாகம் செய்து பெற்ற உரிமையைப் பேணிப் பாதுகாக்கவும், தொழிலாளர் வர்க்கம் ஓரணியில் நின்று போராடவும் இந்த மே நாளில் உறுதியை மேற்கொள்வோம். என தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+