ஒரேயொரு பதிவு தான்.. 3 அமைச்சர்களின் பதவியை பறித்து மாலத்தீவை முடக்கிய இந்தியர்! யார் இந்த சின்ஹா
சென்னை: இந்தியா-மாலத்தீவு இடையே மோதல் நடந்து வருகிறது. பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய 3 மாலத்தீவு அமைச்சர்களின் பதவி என்பது பறிக்கப்பட்டுள்ளது. அதோடு மாலத்தீவுக்கு சுற்றுலா திட்டத்தை இந்தியர்கள் கேன்சல் செய்து வருகின்றனர். இதனால் அந்த நாட்டின் வருமானம் சரிவை சந்திக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் இந்தியாவில் இருந்தபடியே இதனை செய்து முடித்த மிஸ்டர் சின்ஹா குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
நம் நாட்டின் அண்டை நாடாக தீவுத்தேசமான மாலத்தீவு உள்ளது. இந்தியாவை ஒப்பிடும்போது மிகவும் சிறிய நாடு தான் மாலத்தீவு. இங்குள்ள மக்கள் தொகை என்பது மிகவும் குறைவாகும். 2023ம் ஆண்டு நிலவரப்படி மாலத்தீவு மக்கள் தொகை என்பது 5 லட்சத்து 21 ஆயிரம் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாலத்தீவின் முக்கிய வருவாய் என்பது சுற்றுலாத்துறையை சார்ந்து உள்ளது. இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள இந்த தீவுத்தேசத்துக்கு இந்தியா மட்டுமின்றி பல நாடுகளை சேர்ந்த மக்கள் சென்று வருகின்றனர். குறிப்பாக ஆண்டுதோறும் இந்தியர்கள் அதிகளவில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். இதனால் மாலத்தீவின் வருமானத்தில் இந்தியர்களுக்கு அதிக பங்கு உள்ளது.
What a great move! It's a big setback to the new Chinese puppet gvt of Maldives.
— Mr Sinha (@MrSinha_) January 4, 2024
Also, it will boost tourism in #Lakshadweep 🔥 pic.twitter.com/gsUX9KrNSB
மோதல்: இந்நிலையில் தான் தற்போது மாலத்தீவுக்கும், இந்தியாவுக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. இதனால் இந்தியர்கள் தற்போது மாலத்தீவுக்கு செல்வதை நிறுத்தி வருகின்றனர். மாலத்தீவுக்கு சுற்றுலா செல்ல செய்யப்பட்ட முன்பதிவுகளை இந்தியர்கள் கேன்சல் செய்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் மாலத்தீவின் அரசியல்வாதிகளின் தரக்குறைவான விமர்சனம் தான். இந்தியா குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் அவர்கள் தெரிவித்த கருத்து தான் மாலத்தீவு மீது இந்தியர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
3 அமைச்சர்கள் நீக்கம்: இதனால் சுற்றுலா வருமானம் சரிவதை பார்த்ததும் மாலத்தீவு அதிபர் முகமது முயிசு இந்தியா பற்றியும், பிரதமர் மோடி குறித்தும் தரக்குறைவாக விமர்சனம் செய்த 3 அமைச்சர்களை அதிரடியாக நீக்கி உள்ளார். அதன்படி மாலத்தீவு அமைச்சர்களான அப்துல்லா மஹ்சூம் மஜித், மரியம் ஷியுனா, மால்ஷா ஷெரீப் ஆகியோர் அமைச்சர் பதவிகளை இழந்துள்ளனர். சரி இது இருக்கட்டும். இது அனைத்தும் நாம் அறிந்ததே. ஆனால் இந்தியா-மாலத்தீவு இடையேயான மோதல் எப்படி வந்தது? ஒரேயொரு எக்ஸ் பதிவு மூலம் மாலத்தீவின் 3 அமைச்சர்களின் பதவி இழக்க வைத்ததோடு மட்டுமின்றி அந்நாட்டின் வருவாயை முடக்கம் செய்த இந்திய நபர் பற்றிய விபரங்கள் உங்களுக்கு தெரியுமா?
மிஸ்டர் சின்ஹா: ஆம், அந்த நபரின் பெயர் மிஸ்டர் சின்ஹா. இந்த பெயரில் தான் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் செயல்பட்டு வருகிறார். பீகாரை சேர்ந்த இவர் தற்போது குஜராத்தில் வசித்து வருகிறார். இந்து சார்பு நிலைப்பாடு கொண்டவராக அறியப்படும் இவர் அரசியல் பார்வையாளராக இவர் உள்ளார். இதனால் அவரை ஏராளமானவர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இவரது முந்தைய ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டபோதும் கூட தற்போது அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது அவரை 172.9K பேர் பாலோ செய்கின்றனர். எக்ஸ் உள்ளிட்ட வலைதள பக்கங்களில் அரசியல் சார்ந்த கருத்துகளை தொடர்ந்து அவர் பதிவிட்டு வருகிறார்.
பிரதமர் மோடி வீடியோ: சமீபத்தில் லட்சத்தீவுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்தார். அதன்பிறகு பிரதமர் மோடி மாலத்தீவு பீச்சில் நடைப்பயிற்சி சென்ற வீடியோ மற்றும் ஸ்நோர்கெலிங் முறையில் கடலில் நீந்திய போட்டோவை கடந்த 3ம் தேதி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில் அவர், ‛‛லட்சத்தீவு மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்குள்ள தீவின் வியக்க வைக்கும் அழகு மற்றும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பை பார்த்து நான் பிரமிப்பில் இருக்கிறேன். அகத்தி, பங்காரம், கவரத்தி போன்ற பகுதிகளில் உள்ள மக்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த மக்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன்'' என தெரிவித்து இருந்தார்.
சின்ஹா கூறிய வார்த்தை: இதனை பார்த்த சின்ஹா பிரதமர் மோடி பீச்சில் நடந்து செல்லும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் கடந்த 4ம் தேதி பகிர்ந்தார். அதில ‛‛ என்ன ஒரு பெரிய மூவ்.. இது சீனாவின் கைப்பாவையாக இருக்கும் மாலத்தீவுக்கான பெரிய பின்னடைவு. அதோடு லட்சத்தீவின் சுற்றுலா மேம்பாட்டுக்கு இது பெரிய பூஸ்ட்டாக அமையும்'' என தெரிவித்து இருந்தார்.
எதிர்த்த ஜாஹித் ரமீஸ்: இதனை பார்த்த மாலத்தீவின் பிபிஎம் கட்சியின் கவுன்சில் உறுப்பினர் ஜாஹித் ரமீஸ் இந்தியர்கள் பற்றி தரக்குறைவான கருத்தை பதிவிட்டார். அவர், ‛‛இந்தியா எங்கள் மாலத்தீவுடன் போட்டியிட முடியாது. அப்படி போட்டியிட முடியும் என நினைத்தால் அது மாயையாக தான் அமையும். இந்தியர்களின் அறைகளில் இருந்து கெட்ட நறுமணம் வரும் என தரக்குறைவாக விமர்சனம் செய்தார்'' என தெரிவித்தார். இதற்கு இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே மாலத்தீவின் அடுத்தடுத்து அமைச்சர்கள் இந்தியா மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.
வெடித்த பிரச்சனை: இது எக்ஸ் பக்கத்தில் கூடுதல் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்தியர்கள் பலரும் மாலத்தீவுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக இந்தியாவில் உள்ள தீவுகளுக்கு செல்ல வேண்டும் என கருத்து தெரிவிக்க தொடங்கினர். கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் உள்பட பல விளையாட்டு வீரர்களும், சல்மான்கான், அக்சய் குமார், கங்கனா ரனாவத் உள்பட பல பாலிவுட் பிரபலங்களும் மாலத்தீவை விமர்சனம் செய்து இந்தியா மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்துகளை பதிவு செய்தனர். இதுதான் பூதாகரமான நிலையில் மாலத்தீவு அதிபர் 3 அமைச்சர்களை நீக்கி உள்ளார். மேலும் இந்தியர்கள் தொடர்ந்து மாலத்தீவு சுற்றுலா பயணத்தை ரத்து செய்யும் நிலையில் அவர் சீனாவில் இருந்து அதிகமான சுற்றுலா பயணிகளை மாலத்தீவுக்கு அனுப்பி வைக்க அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
கவனம் பெறும் இந்தியா: இன்னும் கூட தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில் மாலத்தீவுக்கு எதிராக இந்தியர்கள் பதிவிட்டு வருகின்றனர். இதனால் உலகளவில் மாலத்தீவு மீதான பார்வை மாறிப்போய் உள்ளது. அதேபோல் ஏராளமானவர்கள் இந்தியாவில் உள்ள லட்சத்தீவு உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் குறித்த போட்டோ வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். இது இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டினர் மத்தியில் இந்தியாவின் பெருமையை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது. இப்படி ஒரே திடீரென்று மாலத்தீவை மொத்தமாக டேமேஜ் செய்து இந்தியாவின் சுற்றுலா தலங்களை புகழை பரப்ப காரணமாக அமைந்தது என்பது இந்த மிஸ்டர் சின்ஹாவின் ஒரேயோரு எக்ஸ் பதிவு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications