தி லெஜண்ட் சரவணன் அருளை தொடர்ந்து.. ஹீரோவாகிறாரா பிரபல நகைக் கடை உரிமையாளர்?
சென்னை: தி லெஜண்ட் சரவணனை தொடர்ந்து பிரபல நகைக் கடை உரிமையாளரும் ஹீரோவாக நடிக்க வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன். இவருக்கு 51 வயதாகிறது என்றால் நம்ப முடிகிறதா? இவர் துணிக்கடை, பர்னிச்சர், நகைக் கடை உள்ளிட்டவைகளை நடத்தி வருகிறார்.
இவரது சொத்துக்களின் மதிப்பு 100- 150 கோடி வரை என கணக்கிடப்பட்டுள்ளது. தனது தொழிலில் மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய சரவணன் அருள், அண்மைக்காலமாக அவருடைய துணிக் கடை விளம்பரங்களில் மாடல்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார்.

மாடல்கள்
பொதுவாக மாடல்கள், பிரபலங்களை வைத்தே நகைக் கடை, துணிக்கடை, பர்னிச்சர் கடை, போன் கடை உள்ளிட்டவைகளுக்கு விளம்பரங்கள் செய்யப்படும். ஆனால் சரவணன் அருள் மாடல்கள், ஹிரோயின்களுடன் ஜோடி போட்டுக் கொண்டு நடனம் ஆடினார். இவரது இந்த அசாத்திய தைரியத்தை பாராட்டியவர்கள் இருந்தாலும் கிண்டல் செய்தவர்கள்தான் நிறைய பேர்.

விளம்பரம் வேண்டாம்
"யப்பா நீங்கள் விளம்பரத்தில் நடிக்காதீர்கள், நாங்கள் கடனை வாங்கியாவது உங்கள் கடையில் துணி எடுக்குறோம்"னு நிறைய பேர் கிண்டல் செய்தார்கள். இந்த நிலையில் அவர் அதையெல்லாம் புறம்தள்ளிவிட்டு சினிமாவில் ஹீரோவானார். தானே தயாரித்த தி லெஜன்ட் என்ற படத்தில் அவர் நடித்துள்ளார்.

ஆக்ஷன் படம்
இந்த படத்தில் ஆக்ஷன், டான்ஸ், காமெடி என அனைத்திலும் சரவணன் கலக்கியுள்ளார். அவரது வயதிற்கு, அனுபவம் இல்லாத ஒருவர் எப்படி கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு இந்த படத்தை கொடுத்துள்ளார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மட்டும் 7.7.கோடி வசூலானது தெரியவந்தது.
Recommended Video

லலிதா ஜுவல்லர்ஸ்
இந்த நிலையில் சரவணன் அருளை போன்று பிரபல நகைக் கடை உரிமையாளர் கிரண்குமாரும் விரைவில் ஹீரோவாக நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, அப்படி ஒரு எண்ணமெல்லாம் எனக்கு இல்லை என கூறி மறுத்துவிட்டாராம். கிரண்குமார் தனது நகைக் கடை விளம்பரங்களில் தானே நடித்துள்ளவர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications