நிலத்தை வைத்திருப்போருக்கு அறிவிப்பு.. துண்டு நிலங்களை மொத்தமாக பெற புதிய சட்டம்.. இதுதான் விதிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிக முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு திட்டங்களை செயல்படுத்த தேவையான நிலங்களை, ஒருங்கிணைப்பு முறையில் பெறும் சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.. இந்த விதிகளை, வருவாய் துறை அறிவிப்பாக வெளியிட்டுள்ளது.

நில உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு, நியாயமான இழப்பீடு, மறுவாழ்வு ஆகியவற்றை உத்தரவாதம் செய்யும் வகையில், கடந்த 2013ல் நிலம் கையகப்படுத்துதல் சட்டம் கொண்டுவரப்பட்டது.

land acquisition tamil nadu government

நில உரிமை: பல திட்டங்களுக்கு மாநில அரசுகள் மற்ற சட்டங்களைப் பயன்படுத்தி நிலங்களை கையகப்படுத்தும் நிலைமை தொடர்ந்தபடியே உள்ளது.. அதாவது, அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு, பல்வேறு மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதில், பழைய வழிமுறைகளுக்கு தீர்வாகத்தான் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை செயல்படுத்த, நிலங்களை ஒருங்கிணைப்பதற்கு வழிவகை செய்யும் சட்டம் இதுவாகும்.. அரசு துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை தேவை என்று கருதினால், ஒருங்கிணைத்து கையகப்படுத்திக் கொள்ள அரசுக்கு அதிகாரம் வழங்கும் சட்டம் இதுவாகும். 250 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு தேவைப்படும் திட்டங்களுக்கு இந்த சட்டம் பொருந்தும்.

புதிய சட்டம்: பொதுப் பணித் துறை, நீர்ப்பாசனத் துறை, கால்நடைத் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, கல்வித் துறை, நகராட்சி நிர்வாகம், மருத்துவத் துறை எனப் பல துறை களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை - தேவை என்று அரசு கருதினால் - ஒருங்கிணைத்து கையகப்படுத்திக் கொள்வதற்கு அரசுக்கு இந்தப் புதிய சட்டம் அதிகாரம் அளிக்கிறது. 250 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு தேவைப்படும் திட்டங்களுக்கு இச்சட்டம் பொருந்தும்.

எனவே, தேவைப்படும் நிலங்களை, நேரடியாக உரிமையாளர்களிடமிருந்து கையகப்படுத்தாமல், ஒருங்கிணைப்பு முறையில் பெற வழிவகை செய்யப்படுகிறது...

துண்டு நிலம்: இதனால், ஒரு குறிப்பிட்ட பகுதியில், பல்வேறு நபர்களிடம் துண்டு துண்டாக நிலம் எடுக்காமல், அனைத்து உரிமையாளர்களிடமும் பேசி, சிறிய அளவில் நிலம் உள்ளவர்களுக்கு மாற்று இடம் தந்து, திட்டத்துக்கு தேவையான நிலத்தை மொத்தமாக பெறுவதே, இதன் அடிப்படை நோக்கமாகும்.

காலி நிலங்களை உரிமையாளர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதால், வளர்ச்சி திட்டத்துக்கு தேவைப்படும் நிலத்தை மொத்தமாக கையகப்படுத்த முடியும்.. சிறப்பு திட்டங்களுக்கான நில ஒருங்கிணைப்பு சட்டம், அக்டோபர் 18ல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இதற்கான நடைமுறை விதிகளைதான் தற்போது வருவாய் துறை வகுத்துள்ளது. இந்த விதிமுறைகள் அடங்கிய அரசாணையை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலர் அமுதா பிறப்பித்துள்ளார்.

விதிமுறைகள் இவைகள்தான்:

- ஒரு திட்டம், எதன் அடிப்படையில் சிறப்பு திட்டமாக கருதப்பட வேண்டும் என்பதற்கான ஆதாரங்களுடன், சம்பந்தப்பட்ட துறையினர் அரசிடம் விண்ணப்பிக்க வேண்டும்

- நீரியல் திட்டம், நில உரிமை திட்டம், நில பயன்பாட்டு திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில், சிறப்பு திட்டங்களின் தகுதி ஆராயப்படும்

- நீர்நிலை, நீர் வழித்திட்டம், நீர்ப்பாசன அமைப்பு போன்றவற்றை பாதிக்கவில்லை என்பதை, சம்பந்தப்பட்ட துறை உறுதிப்படுத்த வேண்டும்

- சம்பந்தப்பட்ட துறை அளிக்கும் விபரங்கள் திருப்தி அளிக்கும் நிலையில், அத்திட்டத்தை சிறப்பு திட்டமாக அரசு அங்கீகரிக்கும்

- இந்த திட்டத்துக்கு தேவையான நிலம் தொடர்பான விபரங்களையும், அதை பெறுவதற்கான வழிமுறைகளையும் ஆராய்ந்து முடிவு செய்ய, கோட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர், உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் அடங்கிய வல்லுனர் குழு அமைக்கப்படும்

- சிறப்பு திட்டத்தை தயாரித்த நிறுவன அதிகாரி, வல்லுனர் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார்

- இந்த குழுவினர் நில ஒருங்கிணைப்பு வரைவு திட்டத்தை இறுதி செய்வர். இதன் அடிப்படையில் சிறப்பு திட்டம் குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்படும். இதில் யாருக்காவது ஆட்சேபனை இருந்தால், அவர்கள் மேல்முறையீடு செய்யலாம்

- நீர் நிலைகளுக்கு பாதிப்பு இல்லை என்பது உறுதியாகும் நிலையில், வல்லுனர் குழு பரிந்துரை அடிப்படையில் இறுதி ஆணை வெளியிடப்படும்" என்று விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+