கிரைய பத்திரம்.. பத்திரத்தில் பெயர் மாற்றம் செய்யணுமா.. அந்த மிஸ்டேக் வந்துவிட்டதா.. கவலையை விடுங்க
சென்னை: பத்திரத்தில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? பத்திரத்தில் பிழை ஏற்பட்டுவிட்டால், அதை திருத்த முடியுமா?
பொதுமக்களின் வசதிக்காக, பத்திரப்பதிவு துறையானது, பல்வேறு வசதிகளையும், அறிவிப்புகளையும் செய்து வருகிறது... குறிப்பாக, தமிழகத்திலுள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகப் பணிகள் அனைத்தும் தற்போது ஆன்லைன் மயமாகிவிட்டதால், பத்திரப்பதிவிற்காக வரும் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்க தேவையில்லை.

ஜஸ்ட் 15 நிமிடத்திற்குள்ளேயே பதிவு பணிகள் முடிவடைந்து செல்லும் வழியாக சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.. பத்திரப்பதிவிற்கு வரும்போது, பொதுமக்கள் கையில் பணம் எடுத்துவரவும் தேவையில்லை என்றெல்லாம் அறிவிப்புகள் வெளியாகின.
எழுத்தர்கள்: அதேபோல, ஆவண எழுத்தர்கள், இடைத்தரகர்கள் ஆகியோர் சார்-பதிவாளர், பதிவாளர் அலுவலகங்களுக்குள் உள்ளே வரக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
காரணம், எல்லாமே இப்போது ஆன்லைன் பதிவு செய்யப்படுவதால், இடத்தை வாங்குபவரும், விற்பவரும் பணத்தை பத்திரப்பதிவு அலுவலத்திற்கு கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை. மற்றொருபுறம், பத்திரப்பதிவு துறையால் வழங்கப்படும் ஆவணங்களில் மாற்றங்களை செய்து பலர் மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.. இதனால் இவைகளுக்கெல்லாம் ஒரு கடிவாளம் போடவே, இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது..
சரி, பத்திரத்தில் உள்ள பெயரை நம்மால் மாற்ற முடியுமா? இந்த பெயர் மாற்றம் செய்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? முதலில் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். அல்லது எண் 1,2 இணைய சார் பதிவாளர் அலுவலத்துக்கு செல்ல வேண்டும். அதாவது சொத்தின் உரிமையாளர் யாரோ, அவர்தான் நேரில் செல்ல வேண்டுடும்.. எந்த முறையில் பெயர் மாற்றம் செய்ய போகிறீர்கள் என்பதை தெரிவிக்க வேண்டும்..
பத்திரப்பதிவு: சொத்தின் உரிமையாளர் பெயரில் பட்டா மற்றும் பத்திரம் ஏதாவது இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பிறகு, நிலப்பதிவேடு அலுவலகத்திற்கு சென்று, இதற்குரிய கட்டணத்தை செலுத்தவேண்டும்..
இதற்கு முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணங்கள் கட்டினால் போதும். பிறகு, புதிய பெயரை பற்றின சுயசான்றளிக்கப்பட்ட சான்றுகளை அந்த அலுவலகத்தில் தர வேண்டும். நீங்கள் தந்த அத்தனை சான்றுகளையும் சரிபார்த்த பிறகு, நிலப்பதிவேடு அலுவலகத்தின் உரிமை துறையானது, பத்திரத்தில் பெயர் மாற்றுவதற்கான முன்மொழிவு குறித்து விசாரணையை தொடங்கும்..
மோசடிகள்: இது எதற்காகவென்றால், இந்த பெயர் மாற்றத்தின் பெயரில், மோசடி எதுவும் நடந்துவிடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அனைத்துமே சட்டரீதியாக சரிபார்த்த பிறகே, பத்திர பதிவுகளில் பெயர் புதுப்பிக்கப்படும்.. இறுதியில், பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்கள், சம்பந்தப்பட்டவருக்கு வழங்கப்பட்டுவிடும்.
அதேபோல, பத்திரத்தில் ஏதாவது பிழை இருந்தாலும் திருத்திக்கொள்ளலாம்.. ஆவணங்களை தயார் செய்யும்போது, இப்படியான பிழைகள் தெரியாமல்வந்துவிடும்.. தட்டச்சு செய்யும்போதும் பிழை வரலாம்.. அல்லது, பழைய எண், புதிய எண் போன்ற நம்பர் சம்பந்தப்பட்ட விவரங்களை குறிப்பிடும்போதும் பிழை வரலாம். ஆனால், எந்த பிழையாக இருந்தாலும், அதை உடனே சரி செய்து கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால், பத்திரத்தின் சொத்து விவரமானது, பட்டாவுடன் பக்காவாக பொருந்தாது. மாறுபாடுடன் காணப்பட்டால், சொத்தை எப்போதாவது விற்க நேர்ந்தாலும் சிக்கல் வந்துவிடும்.
பிழை திருத்தம்: அதனால், பிழையை திருத்தம் செய்ய பிழைகளை திருத்த சார் - பதிவாளர் அலுவலகத்தை அணுகினால், சொத்து மாறாத நிலையில், குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கப்படும். உங்களுக்கு விற்பனை செய்து, ஆவணம் ஏற்படுத்தி தரும் அதே நபரால், பிழை திருத்தப்பட்டு தரப்படும் ஆவணம்தான் "பிழை திருத்தல் பத்திரம்" (Rectification Deed) என்பார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications