நில வழிகாட்டி மதிப்பு.. நிலத்தின் வழிகாட்டி மதிப்பு உயர்கிறதா? சர்வே எண் குறித்து பதிவுத்துறை அதிரடி
சென்னை: தமிழக மக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் பல்வேறு அதிரடிகளை பத்திரப்பதிவு செய்து வரும்நிலையில், குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்புகள் குறித்து தற்போது ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. என்ன அது?
சில நாட்களுக்கு முன்பு, பதிவுத்துறை சார்பில், பதிவு நடைமுறைகள் குறித்து, சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது..

இதில், பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பதிவுத்துறை செயலர் ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
அப்போது அமைச்சர் மூர்த்தி பேசும்போது, "பெங்களூரு போன்ற இடங்களுக்கெல்லாம் போய் பாருங்கள். அங்கே, இப்போதைக்கு சந்தை மதிப்புக்கு ஏற்ப பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. ஆனால் இங்கே அப்படியில்லை. வழிகாட்டி மதிப்பை கொண்டு பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. சென்னையில் சந்தை மதிப்பை விட வழிகாட்டி மதிப்பு குறைவாக இருக்கிறது. சதுர அடி ரூ.50 ஆயிரம் என்பது ரூ.15 ஆயிரமாக இருக்கிறது. அதனால், நில வழிகாட்டி மதிப்பு குறித்து பேச வேண்டும்.
வீடு விற்பனை: விரைவில் வழிகாட்டி மதிப்பு மற்றும் அடுக்குமாடி திட்டங்களில் வீடு விற்பனை பதிவுக்கான நடைமுறையில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்த இருக்கிறோம். சென்னை, கோவை நகரங்களில், 10 சதவீதம் வரை உயர்த்தலாம். பிற நகரங்களில், 3, 5, 7 சதவீதங்களில் வழிகாட்டி மதிப்பை உயர்த்த ஆராய்ந்து வருகிறோம்" என கூறியிருந்தார்.
இந்நிலையில், அனைத்து தெரு மற்றும் சர்வே எண்களுக்கும், வழிகாட்டி மதிப்பு மாற்றி அமைக்கப்படவில்லை என்றும், குறைந்தபட்ச மதிப்பை விட குறைவாக உள்ள தெரு மற்றும் சர்வே எண்களுக்கு மட்டுமே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்றும் பதிவுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்த, பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் உள்ளதாவது:
கோரிக்கைகள்: "கடந்த மாதம் 27ம் தேதி, பதிவுத்துறை கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில், மனை வழிகாட்டி மதிப்பு மிகக்குறைவாக இருந்ததால், வங்கிகளில் சொத்தின் மதிப்பிற்கு ஏற்ப கடன் பெற முடியவில்லை என்று கட்டடம் கட்டி விற்போர், மனைப்பிரிவு ஏற்படுத்தி விற்போர் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். மனையிடங்களின் வழிகாட்டி மதிப்பை உயர்த்தவும் கோரிக்கை வைத்தனர். மேலும், விளை நில மதிப்பும், சில இடங்களில் மிக மிக குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, வழிகாட்டி மதிப்பை சீரமைக்க, மைய மதிப்பீட்டுக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு, கடந்த 16 தேதி கூடி விவாதித்தது. அதில், அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, கிராமப் பகுதிகளில் உள்ள மனையிடங்களுக்கு, குறைந்தபட்ச மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டது. வழிகாட்டி மதிப்பு குறைவாக உள்ள தெரு மற்றும் சர்வே எண்களுக்கு மட்டுமே, மதிப்புகள் மாற்றி அமைக்கப்பட்டன.
பதிவுத்துறை: அனைத்து தெரு மற்றும் சர்வே எண்களுக்கும் மாற்றி அமைக்கப்படவில்லை.. முன்னறிவிப்பின்றி வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்படவில்லை. தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்புகள், tnreginet.gov.in என்ற பதிவுத் துறை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications