கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்! ரூ.1000 பெறுவதற்கு கடைசி வாய்ப்பு! விண்ணப்பிக்க லாஸ்ட் சான்ஸ் இதுதான்
சென்னை: உங்களுடன் ஸ்டாலின் முகாம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த முகாமின் கீழ் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய கடைசி வாய்ப்பு பெண்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த முகாம்களில், மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் விரைவாகப் பரிசீலிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்குப் பத்து நிமிடங்களுக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

உங்களுடன் ஸ்டாலின் - மகளிர் உரிமை தொகை
இந்த முகாம்களில் விண்ணப்பிக்க ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, கைபேசி எண், வங்கி கணக்கு பாஸ்புக் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானவை. வேறு எந்த கூடுதல் ஆவணங்களும் கேட்கப்படுவதில்லை. மகளிர் உரிமைத் தொகைக்குத் தகுதி இருந்தும் பெறாதவர்கள், தங்கள் பகுதியில் நடைபெறும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் விண்ணப்பிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தகுதியான அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
'உங்களுடன் ஸ்டாலின்' என்ற பெயரில் நகர்ப்புறங்களில் 3,768 இடங்களிலும், கிராமப்புறங்களில் 6,232 இடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் கடந்த ஒரு மாதமாகப் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்களும் படிப்படியாக ஆய்வு செய்யப்படுகின்றன. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் விண்ணப்பம் செய்தவர்களின் விண்ணப்பங்கள் பகுதி பகுதியாக பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
இத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் மனுவின் நிலையை https://kmut.tn.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் தெரிந்துகொள்ளலாம். உங்கள் விண்ணப்பத்தின் விலையை நீங்கள் ஆன்லைனிலேயே அறிந்து கொள்ள முடியும்.
மகளிர் உரிமை தொகை கடைசி வாய்ப்பு
இந்த முகாமின் கீழ் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய கடைசி வாய்ப்பு பெண்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. நவம்பர் 15ம் தேதி வரை இந்த முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம் அதன்பின் நீட்டிக்கப்பட வாய்ப்புகள் குறைவு. இதனால் நவம்பர் 15ம் தேதிக்குள் இந்த முகாமின் கீழ் இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம். நவம்பர் 15ம் தேதி முகாம் முடியும் முன் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம்.
யாருக்கெல்லாம் மகளிர் உரிமை தொகை கிடைக்கும்?
விடுப்பட்டோர் எல்லோருக்கும் கண்டிப்பாக மகளிர் உரிமை தொகை வழங்கப்படும், கடும் பொருட்செலவிலும் கூட மகளிர் உரிமை தொகை கண்டிப்பாக வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டையில் நேற்று நடந்த நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் 44 லட்சம் பெண்கள் உதவித்தொகை கோரி விண்ணப்பித்துள்ளனர். இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்படும் என்று முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
புதிய விண்ணப்பங்களை ஆய்வு செய்ய வருவாய் துறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் துணை முதல்வர் தெரிவித்தார். நவம்பர் வரை உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நடக்கிறது. உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமை தொகை மனுக்கள் எல்லாம் பெறப்பட்ட பின்பே இதில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் பயன்பெறுகிறார்கள். , காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 73 ஆயிரம் பெண்கள் இத்திட்டத்தில் பயனடைந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications