நேரம் நெருங்குதே! வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் பண்ணிடீங்களா? மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஜூலை 31க்கு பின் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று அரசு கூறியுள்ளது.
ஜூலை 31 காலக்கெடுவை நீட்டிக்க நிதி அமைச்சகம் பரிசீலிக்காததால், வருமான வரி செலுத்துவோர் விரைவில் கணக்கு தாக்கல் செய்யுமாறு வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வரை சுமார் 5.83 கோடி வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு அதை விட அதிக பேர் வருமான வரி தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். பட்ஜெட் 2023-24ன் படி, நடப்பு நிதியாண்டில் 33.61 லட்சம் கோடி ரூபாய் மொத்த வரி வரவு இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஒவ்வொரு வருடமும் 10 சதவிகிதம் வரை வரி வருவாய் உயரும் என்று எதிர்பார்க்கிறோம் என்று அவர் கூறி உள்ளார். இன்னொரு பக்கம் ஆதார் கார்டு - பான் கார்டை இணைக்காதவர்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வது மிக கடினம் ஆகும் என்றும் மத்திய அரசு கூறி உள்ளது.
இந்த மாதம் இறுதிவரை வருமான வரித்துறை ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய முடியும். இதற்கு பான் அட்டை அவசியம். ஆனால் ஆதாருடன் பான் அட்டையை இணைக்கத்தவர்களுக்கு வருமான வரி தாக்கல் செய்ய முடியாது. இதனால் அவர்கள் பான் அட்டையை ஆக்டிவேட் செய்ய மனு கொடுக்க வேண்டும். இன்று மனு கொடுத்தால் கூட பான் அட்டை ஆக்டிவேட் ஆக ஒரு மாதம் வரை எடுக்கும்.
இதற்கு ஒரு அபராதம் கட்ட வேண்டும். பான் அட்டை ஆக்டிவேட் ஆகும் முன் வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் முடியும். அதன்பின் 6 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்திதான் வருமான வரி தாக்கல் செய்ய முடியும். இதனால் மொத்தமாக இரண்டு அபராதம் கட்ட வேண்டி இருக்கும். மொத்த அபராதம் 6 ஆயிரத்திற்கும் மேல் செல்லும் வாய்ப்புகள் உள்ளன.

பாதிப்புகள்: பான் அட்டை ஆதார் அட்டையை இணைக்காதவர்களுக்கு உங்கள் பான் செயலற்றதாகி விடும். அதாவது அந்த எண் டீ ஆக்டிவேட் ஆகிவிடும். அப்படி ஆகும் பட்சத்தில் நீங்கள் பணம் அனுப்புவது தொடங்கி லோன் எடுப்பது, வருமான வரி தாக்கல் செய்வது வரை எல்லாம் சிக்கலாகும். சிக்கலாகும் என்பதை விட மொத்தமாக இந்த பணிகளை செய்வது இயலாத காரியம்.
இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்படுமா, வங்கி கணக்கு முடங்குமா என்று இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இது தொடர்பாக ஆர்பிஐ விரைவில் விளக்கம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு வட்டார தகவல்களின்படி இனிமேல் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று கூறப்படுகிறது.
ஆதார் கார்ட் தற்போது நாட்டில் முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. பல சேவைகளுக்கு இந்தியாவில் ஆதார் கார்ட் முக்கியம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது.மத்திய அரசு சேவைகள், மாநில அரசு சேவைகளை பெற ஆதார் கார்ட் முக்கியம் ஆகி உள்ளது.












Click it and Unblock the Notifications