இப்படி ஒருவரை கட்சி கைவிட்டு விட்டதே.. பாஜக நிர்வாகி பற்றி வேதனையுடன் ஜெ. உதவியாளர் பூங்குன்றன்!
சென்னை: லியோ என். சுந்தரத்தின் பணிகளை பார்த்து பார்த்து என் நெஞ்சம் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறது. இப்படி ஒரு ஆற்றல்மிகு உடன்பிறப்பை கழகம் கைவிட்டதே என ஜெயலலிதாவின் உதவியாளராகப் பணியாற்றிய பூங்குன்றன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி வார்டு கவுன்சிலர், மண்டலக்குழு தலைவர் என பல பொறுப்புகளை வகித்தவர் அதிமுக மூத்த நிர்வாகியாக இருந்த லியோ என்.சுந்தரம். தனது பகுதி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர். கடந்த 2016 சட்டசபை தேர்தலில், ஏற்கனவே எம்.எல்.ஏவாக இருந்த கந்தன் மீதிருந்த அதிருப்தி காரணமாக, லியோ என் சுந்தரத்தை வேட்பாளர் ஆக்கினார் ஜெயலலிதா. ஆனால், அவர் தேர்தலில் தோல்வியடைந்தார்.

பின்னர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 198வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட சீட் வழங்கப்படாததால் கட்சியில் இருந்து விலகி சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற லியோ என் சுந்தரம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தன்னை பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிலையில், அவர் தனது பகுதி மக்களுக்காக பல்வேறு நலத் திட்ட உதவிகளை மேற்கொண்டு வரும் நிலையில், நல்ல நிர்வாகியை இழந்து விட்டதாக ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராகப் பணியாற்றிய பூங்குன்றன் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், "தலைமை பிடிக்காமல் சிலர் கட்சியை விட்டு பிரிந்து போவார்கள். மாவட்டத்தை பிடிக்காத சிலர் கட்சியை விட்டு பிரிந்து செல்வார்கள். பலர் இரட்டை இலையை மறக்கமுடியாமல் வேறு வழியின்றி நிர்வாகிகளால் ஒதுக்கப்பட்டதன் காரணமாக வேதனையோடு விலகிச் செல்வார்கள். பதவி கிடைக்காத கோபத்தில் சிலர் பிரிந்து செல்வார்கள்.
உழைத்தவருக்கு பதவி கிடைக்காமல் நடிப்பவர்களுக்கு பதவி கிடைத்துவிட்டதே என்ற மனவருத்தத்தோடு சிலர் விலகிச் செல்வார்கள். இப்படி பிரிந்து போனவர்கள் பலர். அதை யாரும் பெரிதாகவும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதே நேரத்தில் சிலரை, ஏன் இந்தக் கட்சி கைவிட்டது? ஏன் இவர்கள் பிரிந்து போனார்கள்? என்ற கேள்விகள் எல்லோரும் மனதிலும் எழாமல் இருக்காது. அத்தகைய ஒருவர்தான் சென்னை 198 வது வார்டின் கவுன்சிலர் லியோ N சுந்தரம்.
எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் தெய்வமாக வணங்கி, இரட்டை இலையை நெஞ்சில் சுமந்து, கட்சிக்காக பாடுபட்ட நல்லவர், ஆன்மீக வள்ளல் லியோ என் சுந்தரம் அவர்கள் இப்போது பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து மக்கள் தொண்டாற்றி வருகிறார். ஃபேஸ்புக்கில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஒருவர் தொடர்ந்து மக்களுக்கு உதவியும், ஆன்மீக நற்பணிகளும் செய்து வருகிறார் என்றால், அடித்து சொல்லலாம் அது ஐயா லியோ என் சுந்தரம் அவர்கள் என்று! முகநூலில் அவரது பணிகளை பார்த்துப் பார்த்து என் நெஞ்சம் ஆனந்த கண்ணீர் வடிக்கிறது. இப்படி ஒரு ஆற்றல்மிகு உடன்பிறப்பை கழகம் கைவிட்டதே.
ஜெயலலிதா அவர்கள், லியோ என் சுந்தரம் போன்றவர்கள் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பை வழங்கினார். நல்லவர்களை இந்த மக்கள் புறக்கணிப்பார்கள் என்பதற்கு இவரும் ஒரு எடுத்துக்காட்டு. ஆனால் நன்றி மறவாத வார்டு மக்கள் இவரை இதயத்தில் வைத்து வெற்றி பெறச் செய்து கொண்டிருக்கிறார்கள். மனப்பூர்வமாக மக்கள் பணியாற்றும் என் பாசத்திற்குரிய, அன்பிற்கினிய லியோ என் சுந்தரம் அவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி உயர்வைக் கொடுத்து, பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே எனது ஆசை" எனத் தெரிவித்துள்ளார்.
-
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்!












Click it and Unblock the Notifications