துருப்பிடித்து நிற்கும் விஜயகாந்த் பிரச்சார வேன்! பட்டி டிங்கரின் பார்த்து பெயிண்ட் அடிக்க ஏற்பாடு?
சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிரச்சார வேன், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் துருப்பிடித்து நிற்கும் நிலையில் அதனை பட்டி டிங்கரிங் பார்த்து பெயிண்ட் அடிக்கவே பல லட்சம் செலவாகும் எனத் தெரிகிறது.
விஜயகாந்த் மறைவதற்கு முன்னர் ஆக்டிவாக இருந்த வரை தமிழகமெங்கும் அடிக்கடி சுற்றுப்பயணம் சென்று கட்சி நிகழ்ச்சிகள், பொதுமக்கள் சந்திப்பு, கட்சி நிர்வாகிகள் இல்ல விழாக்களில் கலந்துகொள்வது என எப்போதும் பரபரப்பாகவே இயங்கி வந்தார். கடந்த 2017ஆம் ஆண்டுக்கு பிறகு தான் தனது சுற்றுப்பயணங்களை மெல்ல குறைக்க ஆரம்பித்தார்.

2018ஆம் ஆண்டிலிருந்து அவர் சுற்றுப்பயணம் செல்வதை முற்றிலும் நிறுத்திவிட்டு வீட்டில் முழுநேர ஓய்வில் இருந்து வந்தார். 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் சிறிது நேரம் பிரச்சாரத்துக்கு வந்துவிட்டு சென்றார். ஆனால் அப்போது அவர் எதுவும் பேசவில்லை.
விஜயகாந்த் வந்து பிரச்சாரத்தில் முகத்தை காட்டினால் போதும் என கூட்டணிக் கட்சி பிரமுகர்கள் கேட்டுக்கொண்டதால் அப்போது வந்து சென்றார். அதைத் தொடர்ந்து தமிழகமெங்கும் கட்சி நிர்வாகிகள் இல்ல விழாக்கள், கட்சி நடத்திய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் என எல்லாவற்றுக்கும் பிரேமலதா விஜயகாந்தும், அவரது மூத்த மகன் விஜய பிரபாகரனும் தான் சென்று வருகிறார்கள். அவ்வாறு செல்கிற அவர்கள் பிரச்சார வேனை தவிர்த்து சிவப்பு நிற ஃபோர்டு எண்டேவர் காரில் தான் பயணிக்கிறார்கள்.
இதனால் பிரச்சார வேனிற்கு வேலையே இல்லாமல் பராமரிப்பின்றி துருப்பிடித்த நிலையில் நிற்கிறது. இதனிடையே நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே இருப்பதால் அதற்குள் இந்த வேனை பட்டி, டிங்கரிங் , பெயிண்ட் வேலைகளை எல்லாம் பார்த்து ரெடி செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரிகிறது.
இதனிடையே விஜயகாந்தின் பிரச்சார வேன் முன் நின்று அவரது கட்சி தொண்டர்களும், ரசிகர்களும் செல்ஃபி எடுத்து இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் பெருமிதத்துடன் பதிவு வெளியிட்டு வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications