சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெண்கலத்தில் மின்னிய சூரியன்.. அறிவாலயத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா!

சென்னை திமுக நிறுவனர் அண்ணா அறிவாலயத்தில் அண்ணா மற்றும் மறைத்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை தற்போது திறக்கப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அறிவாலயத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா!

    சென்னை திமுக நிறுவனர் அண்ணா அறிவாலயத்தில் அண்ணா மற்றும் மறைத்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை தற்போது திறக்கப்பட்டு இருக்கிறது.

    டெல்லி: சென்னை திமுக நிறுவனர் அண்ணா அறிவாலயத்தில் அண்ணா மற்றும் மறைத்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை தற்போது திறக்கப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி சிலைகளை திறந்து வைத்தார்.

    அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதிக்கு பிரமாண்டமான முழு உருவ சிலை அமைக்கப்பட்டு உள்ளது. கருணாநிதி சிலையுடன் தி.மு.க. நிறுவனர் அண்ணாவுக்கும் அவருக்கு அருகே சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த விழாவில் பல முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

    கருணாநிதி

    கருணாநிதி

    கருணாநிதி சிலை முழுக்க முழுக்க வெண்கலத்தால் செய்யப்பட்டது. இதை மிகவும் தத்ரூபமாக வடிவமைத்து இருக்கிறார்கள். இந்த சிலையை வடிவமைக்க இரண்டு வாரம் ஆனது. பார்க்க அப்படியே தத்ரூபமாக கருணாநிதி போலவே இந்த சிலை வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

    யார் செய்தது

    யார் செய்தது

    இந்த சிலையை திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரைச் சேர்ந்த சிற்பி தீனதயாளன் வடிவமைத்தார். இவர் இதற்கு முன்பே தலைவர்களுக்கு சிலை வடிவமைத்துக் கொடுத்தவர். சில கோவில் சிலைகளையும் வடிவமைத்துள்ளார். இவரின் கைவண்ணத்தில்தான் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

    பல தலைவர்கள்

    பல தலைவர்கள்

    அகில இந்திய கட்சித் தலைவர்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்.

    பலர் கலந்து கொண்டனர்

    நடிகர்கள் ரஜினிகாந்த், வடிவேலு, நாசர், பிரபு, இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹா உள்ளிட்டோர் விழா விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இதனால் விழா நடக்கும் ஓய்.எம்.சி.ஏ மைதானம் களைகட்டியது. அங்கு இதனால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    காங்கிரஸ் தலைவர்

    காங்கிரஸ் தலைவர்

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் சோனியா காந்தி விழாவில் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார். காங்கிரஸ் தலைவர் ராகுலும் விழாவில் கலந்து கொண்டார். அதேபோல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

    ஆயிரக்கணக்கான தொண்டர்கள்

    ஆயிரக்கணக்கான தொண்டர்கள்

    இந்த விழாவில் ஆயிரக்கணக்காக திமுக தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். காலையில் இருந்து கருணாநிதியின் சிலையை பார்க்க வேண்டும் என்று இவர்கள் அண்ணா அறிவாலயம் முன் காத்திருந்தும் குறிப்பிடத்தக்கது.

    சிலை திறக்கப்பட்டது

    சிலை திறக்கப்பட்டது

    சோனியா காந்தி இரண்டு சிலைகளையும் திறந்து வைத்தார். இந்த சிலை திறக்கப்பட்ட போது அங்கிருந்த திமுக தொண்டர்கள் திமுக, கலைஞர், கருணாநிதி என்று கோஷம் எழுப்பினார்கள். இந்த தலைவர்கள் எல்லோரும் கலந்து கொள்ளும் விழா இன்னும் சற்று நேரத்தில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கிறது.

    English summary
    Late DMK Supremo Karunanidhi's statue opening ceremony will be held today in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X