கலக்குறாங்களே லத்திகா சரண்.. சென்னையில் ரோட்டோரத்தில் ஒரே ஆச்சரியம்.. கசியும் தாய்மை.. மலைத்த மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லத்திகா சரண் நினைவிருக்கிறதா? மீண்டும் லைம் லைட்டில் வந்துள்ளார் லத்திகா.. இவரது சேவையை கண்டு சென்னையே பூரித்து போயுள்ளது.

யாரிந்த லத்திகா சரண்? தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி லத்திகா சரண். 36 ஆண்டுகளாக காவல் துறையில் பல்வேறு பதவிகளை வகித்தவர்.. கடந்த 1952ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி கேரள மாநிலம் இடுக்கியில் பிறந்தவர் லத்திகா சரண்.

Lathika saran and Ex DGP Letika Saran says about Chennai Food bank for Night hungers of Street Children

அவர் 1976ம் வருடம் ஐபிஎஸ் முடித்துவிட்டு, ஏடிஜிபி, தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் பயிற்சி மற்றும் திட்ட இயக்குனர், லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் போன்ற பதவிகளை வகித்தவர். கடந்த 2006ம் ஆண்டு கிரேட்டர் சென்னை மாநகர கமிஷனராக நியமிக்கப்பட்டார்...

சிபிசிஐடி: 2010ம் ஆண்டு, தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் அவர் இந்தியாவின் 2வது பெண் டிஜிபி மற்றும் தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி என்ற பெருமையையும் பெற்றார். சிபிஐ மற்றும் சிபிசிஐடி துறைகளிலும் பணியாற்றியவர் இவர் பணியாற்றியவர்..

லத்திகா சரண், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பதவியில் இருந்தபோது, ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்தவர்.. அந்த நேரத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போதும், டிஜிபி பதவிக்கு நியமிக்கப்பட்டபோதும், சர்ச்சைகளுக்கு உள்ளானார் லத்திகா சரண்.. அதனால், பரபரப்புக்குரிய அதிகாரியாகவே வலம்வந்தார்.. இப்படி சர்ச்சைகளில் சிக்கினாலும் கூட, நேர்மையான அதிகாரி என்ற பெயரைப் பெற்ற பெருமைக்குரியவர் லத்திகா சரண் என்பதை மறுக்க முடியாது.

ஆதரவற்றோர்கள்: கடந்த 2012-ம் ஆண்டு, தன் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார் லத்திகா சரண்.. தற்போது, பரபரப்பாக பேசப்பட்டு வரும் கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக விசாரணையை நடத்த, முன்னாள் டிஜிபி லத்திகா சரண் தலைமையில்தான் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், பதவி ஓய்வுக்குபிறகு, பல்வேறு சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார் லத்திகா.. இப்போது, சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார்.

வழக்கமாக, சாலையோரங்களில், வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட விசேஷமான தினங்களில் சாப்பாடு வாங்கிகொடுக்கும் பழக்கத்தை பலர் வைத்திருக்கிறார்கள். இப்படி வழங்கப்படும் உணவுகளும் பெரும்பாலும், காலை மற்றும் மதிய உணவாகத்தான் இருந்து வருகிறது. இவர்களுக்கு இரவு உணவுகள் அவ்வளவாக கிடைப்பதில்லை.

ரொட்டி பேங்க்: அதனால்தான், சென்னையில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற சிறுவர்கள், முதியவர்களின் பசியை போக்கும் வகையில் லத்திகா சரண், சென்னை ரொட்டி பேங்க்" என்ற அமைப்பை தொடங்கி, தினமும் இரவு உணவை வழங்கி வருகிறார். கடந்த 2021-ல் தன்னுடைய நண்பர்கள், சுஜாதா விஸ்வநாத், மகாதேவன், நிசாத் பசீர், ராஜீவ் ஆகிய 4 பேருடன் சேர்ந்து இந்த அமைப்பை நடத்தி வருகிறார்.

சென்னையில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் மெண்டல் ஹெல்த் (ஐ.எம்.எச்) மையத்தில் சேர்த்து சிகிச்சை பெறும் பெரும்பாலானோர் வறுமையில் உள்ளார்கள்.. இவர்களை சிகிச்சைக்காக அழைத்து வருபவர்களும் கூலி வேலையை விட்டுவிட்டே அவர்களோடு வந்து தங்குகிறார்கள். அதனால்தான், ஐஎம்எச்சில் இரவில் தங்குபவர்களுக்கு இரவு உணவை வழங்க வேண்டும் என்ற எண்ணமே வந்ததாம். இந்த திட்டம்தான், பிறகு மெல்ல மெல்ல விரிவடைந்துள்ளது.

பசியாற்றும் பண்பு: தினமும் 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கி வருகிறாராம் லத்திகா சரண்.. இரவில் பசியுடன் தூங்க செல்பவர்களின் பசியை போக்கும் விதத்திலேயே, இந்த திட்டத்தை செயல்படுத்தி வருவது, காண்போரை திரும்பி பார்க்க வைத்து வருகிறது. தன்னுடைய பணி காலத்திலேயே, பல்வேறு நபர்களுக்கு, பல்வேறு உதவிகளை செய்தவர் லத்திகா சரண்.. ஓய்வுக்கு பிறகும், பலரது பசியை போக்கி வருவதில் வியப்பில்லை என்றாலும், காலத்துக்கும் போற்றுதலுக்குரிய இந்த தாய்மை உணர்ச்சி..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+