ரேகிங் கொடுமை.. ஊருக்கே வந்துடறேன்ப்பான்னு சொன்ன சட்டக் கல்லூரி மாணவி தற்கொலை
செங்கல்பட்டு: தஞ்சாவூரில் தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்த சட்டக் கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
செங்கல்பட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு சட்டக் கல்லூரியில் வெளி மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் 2-ம் ஆண்டு பயின்று வரும் தஞ்சாவூர் மாவட்டம், திருவாதூர் கிராமத்தை சேர்ந்த சிவபிரகாசம் என்பரவது மகள் கவிப்பிரியா (19) என்பவர் சட்டக்கல்லூரி விடுதியில் தனது அறையில் தங்கியிருந்தார்.

விடுதி
இந்த நிலையில் அவருடன் விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் கவிப்பிரியாவை தொடர்ந்து ராகிங் செய்து வந்ததாக தெரிகிறது. இதை சகித்துக் கொள்ள முடியாத கவிப்பிரியா தனது தந்தைக்கு போன் செய்துள்ளார். அப்போது தன்னை மாணவிகள் ராகிங் செய்கிறார்கள்.

ஊருக்கு வருகிறேன்
எனக்கு இங்கு படிக்க பிடிக்கவில்லை. அதனால் நான் ஊருக்கு வந்துவிடுகிறேன் என கூறிவிட்டு ஊருக்கு புறப்பட ஆயத்தமாகினார். ஆனால் இவர் ஊருக்கு செல்வதை அறிந்த மாணவி ஒருவர், இன்னும் ஓரிரு நாட்களில் தேர்வு நடக்கவுள்ளது. தேர்வு முடிந்ததும் ஊருக்கும் செல்லலாம் என சமாதானம் செய்துள்ளார்.

கவிப்பிரியா
அவரது பேச்சை கேட்ட கவிப்பிரியா மீண்டும் விடுதிக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்திருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவிகள் அவரை உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

உடல் பிரேத பரிசோதனை
அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் கவிப்பிரியா இறந்தார். மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது அதனை தொடர்ந்து கவி பிரியாவின் உடலை பெற்றோர்களிடம் ஒப்படைக்க உள்ளனர். மேலும் தற்கொலை முயற்சி குறித்து செங்கல்பட்டு தாலுகா போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணை
மாணவியின் தற்கொலைக்கு ரேகிங்தான் காரணமா இல்லை வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகிறார்கள். மேலும் ரேகிங் செய்வது குற்றம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து மாணவி கல்லூரி நிர்வாகத்தில் புகார் தெரிவித்தாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. தற்கொலை எண்ணம் வந்தால் உடனடியாக 104 எனும் உதவி எண்ணுக்கு அழையுங்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த எண்ணில் தொடர்பு கொள்வோருக்கு கவுன்சலிங் கொடுக்கப்படுகிறது. அவர்கள் தற்கொலை முடிவை தூக்கி எறிந்துவிடுவர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications