6000 கோடி லீமா ரோஸ் சொத்து.. ஆனா மச்சான் செஞ்சது சதி! ஆதவ் அர்ஜுனா முகத்திரையை கிழித்தெறிந்த மகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருச்சி மாவட்டத்தின் லால்குடி தொகுதி தேர்தல் களம் இப்போது அரசியல் கொள்கைகளைத் தாண்டி, குடும்ப உறவுகளுக்கு இடையிலான மோதல் களமாக மாறியுள்ளது.. அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் சொத்துகணக்கு குறித்த விமர்சனங்களுக்கு அவரது மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் விளக்கமளித்துள்ள நிலையில், ஆதவ் அர்ஜுனா பெயர் மாற்றம் தொடர்பான புகார்களும் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. சொந்த குடும்ப உறுப்பினர்களுக்குள்ளேயே அரங்கேறும் இந்த தனிநபர் விமர்சனங்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது மிகக்கடுமையான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.

Leema Rose lalkudi Jose Lalgudi Election Trichy Politics AIADMK News TVK News Assets Disclosure Tamil Nadu Assembly election 2026 Tamil Nadu Election 2026 2026

திமுக தீய சக்தி - ஜோஸ் சொல்வது என்ன

நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசும்போது, திமுகவை தீயசக்தி என்கிறாரே விஜய், ஏன் ஸ்டாலின் அல்லது உதயநிதியை எதிர்த்துப் போட்டியிடவில்லை? அவர்களின் தொகுதிகளில் ஏன் பிரச்சாரம் செய்யவில்லை? ஆதவ் அர்ஜுனா இல்லையென்றால் தவெக-வே இல்லை என்கிற நிலைதான் உள்ளது. கூட்டத்தைக் கூட்டக்கூட அவரிடம்தான் கையேந்துகிறார்கள்..

லால்குடி தொகுதி த.வெ.க. வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனுக்கும் இவர்களுக்கும் இடையிலான மோதல் முற்றியுள்ளது.. கு.ப.கிருஷ்ணன் தங்களுக்கு விவசாய பாடம் எடுக்கத் தேவையில்லை என்றும், பதவி ஆசைக்காக அதிமுகவுக்கு துரோகம் செய்துவிட்டு சென்றவர் என்றும் ஜோஸ் விமர்சித்திருக்கிறார்.

நாங்கள் இன்னும் பூர்வீக தொழிலான விவசாயத்தைத்தான் செய்து வருகிறோம். இதுவரை அரசியலில் 200 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளோம். லால்குடி தொகுதிக்கு மட்டும் சொந்தப் பணம் 50 கோடி ரூபாய் வரை செலவிட்டு நல்ல திட்டங்களைக் கொண்டு வருவோம். என்னுடைய அம்மா லீமா ரோஸ் விதிகளுக்கு உட்பட்டே சொத்து விவரங்களை காட்டியிருக்கிறார்.. திமுகவினர்தான் பினாமி பெயரில் சொத்து சேர்த்திருக்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.

ஆதவ் அர்ஜுனா பெயர்

இந்த பரபரப்பே அடங்காத நிலையில் நேற்றைய தினம் மீண்டும் மற்றொரு பரபரப்பை செய்தியாளர்களிடம் பேசும்போது உண்டு பண்ணியிருக்கிறார்..

"என்னுடைய மச்சான் ஆதவ் அர்ஜுனாவின் நடவடிக்கைகள் சமீபகாலமாக சரியாக இல்லை. அவர் என்னுடைய மாமியாரான லீமா ரோஸை தோற்கடிக்க சதி செய்கிறார். அதுவும், ஆதவ் அர்ஜுனா என்பது அவரது உண்மையான பெயரே கிடையாது. அவரது பெயர் செந்தில்குமார்.. பெயரில் கூட ஊழல் செய்தவர் அவர்.

திருமண உறவை தாண்டி ஆதவ் அர்ஜுனாவுக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. அவர்களுக்கு கார்களை கிப்ட் ஆக வாங்கி தந்துள்ளார்.. குடும்பத்தை ஒழுங்காக பார்க்காத ஆதவ் அர்ஜுனா நிற்கும் தொகுதியில் தோற்பது நிச்சயம்" என்றெல்லாம் சரமாரியாக விமர்சித்துள்ளார்.

இப்படியொரு பிரச்சாரமா?

ஜோஸ் முன்வைத்துள்ள இந்த அடுக்கடுக்கான விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகின்றன.

பொதுவாக, தேர்தல் களத்தில் அரசியல் கொள்கைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டியது அவசியம்.. ஆனால், அதற்கு பதிலாக ஒருவரின் கேரக்டரை டேமேஜ் செய்யும் வகையில் தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைப்பது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல என்பதை இங்கே நாம் கட்டாயம் பதிவு செய்ய வேண்டியுள்ளது-

அதுவும் ரத்த உறவுகளுக்குள்ளேயே இத்தகைய குற்றச்சாட்டுகளை கூறிக்கொள்வது மக்கள் மத்தியில் வேட்பாளர்களின் மீதான மதிப்பை வெகுவாக குறைத்துவிடும்..

மக்கள் என்ன நினைப்பார்கள்?

இதே போன்ற நிலைமைதான் பாமகவிலும் நிலவி கொண்டிருக்கிறது.. ஸ்ரீகாந்தி என்பவர் தனது சகோதரர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது மனைவி சௌமியா குறித்து சொந்த வீட்டு ரகசியங்களையும், தனிப்பட்ட விஷயங்களையும் பொதுவெளியில் பேசி வருகிறார்.. சொந்த குடும்ப விஷயங்களை இப்படியெல்லாம் பொதுமக்கள் முன்பு, இந்த தேர்தல் நேரத்தில் முன்வைத்தால் மக்கள் என்ன நினைப்பார்கள்?

தேர்தல் நேரத்தில் வாக்குகளை பெறுவதற்காக கண்ணியத்தை மறந்து, சொந்த குடும்பத்தையே பொதுவெளியில் அவமானப்படுத்துவது என்பது மிகவும் தரம் தாழ்ந்த அரசியலாகும்..

இதுபோன்ற தனிமனித ஒழுக்கத்தை சிதைக்கும் பேச்சுகள் பொதுமக்களிடையே வேட்பாளர்கள் மீதுள்ள மரியாதையைச் சுத்தமாகக் குறைத்து, ஒட்டுமொத்த ஜனநாயகத்தின் மீதே ஒருவித வெறுப்பை உண்டாக்கிவிடும், அத்துடன் இத்தகைய போக்குகள் வாக்காளர்கள் மத்தியில் ஒருவித சலிப்பையே உண்டாக்கும் என்பதை இங்கே நாம் அழுத்தமாக நினைவுபடுத்த வேண்டி உள்ளது...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+