லீமா ரோஸ் செய்த டீல்? குதிரை வேகத்தில் குதிரை பேரம்? 20 கோடிக்கு 10 அதிமுக எம்எல்ஏ வர்ற போறாங்களாமே
சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்களின் திடீர் ராஜினாமா மற்றும் தவெக இணைப்பு விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன.. சட்டமன்ற வளாகத்திற்குள்ளேயே நடந்த இந்த அதிரடி அரசியல் நகர்வுகள் மற்றும் திரைமறைவில் அரங்கேறிய பேரம் குறித்த விவரங்கள் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை வரை செல்லும் சூழல் உருவாகியுள்ள நிலையில், இதற்குப் பின்னால் உள்ள திட்டமிட்ட அரசியல் வியூகங்கள் மற்றும் எதிர்கால விளைவுகள் என்னென்ன?
ஒரு சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ்,. "அதிமுக-வுல வெற்றி பெற்ற தாராபுரம் சத்தியபாமா, மரகதம் குமாரவேல், பெருந்துறை ஜெயகுமார் ஆகிய மூணு பேரும் நேரா தவெக-ல போய் சேர்ந்திருக்கிறார்கள்.. . இது எப்படின்னு தெரியுமா? அங்கேதான் செம்ம சீன்!

ஆதவ் அர்ஜுனா ஆபீஸ்
கிரவுண்ட் ஃப்ளோர்ல சபாநாயகர் ஆபீஸ் உள்ளது.. அங்கே போய் இவங்க 3 பேரும் ராஜினாமா கடிதத்தைக் கொடுக்குறாங்க. அடுத்த சில நிமிடங்களிலேயே, அதே வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள ஆதவ் அர்ஜுனாவின் அலுவலகத்திற்குச் சென்று தங்களை தவெக-வில் இணைத்துக்கொண்டுள்ளனர்..
இவர்கள் அங்கு சென்றடைந்த போதே இவர்களுக்கான தவெக உறுப்பினர் அட்டைகள் ஏற்கனவே தயாராக இருந்தன.. இது ஏதோ தற்செயலாக நடந்த நிகழ்வு அல்ல, முன்பே தீர்மானிக்கப்பட்ட ஒரு திட்டமிட்ட செயல் இவர்கள் 3 பேரும் சென்றது எந்த அளவுக்கு பிளானிங் பாருங்க.. இவங்க உள்ள நுழைந்ததுமே அவங்களுக்கு உறுப்பினர் அட்டை அடிச்சு தயாராக வைக்கப்பட்டிருந்தது.. இது திட்டமிட்ட விஷயம் இல்லாம வேற என்ன?
குதிரை வேகத்தில் குதிரை பேரம்
இதைத்தான் குதிரை வேகத்தில் குதிரை பேரம் என்று ஸ்டாலின் சொல்கிறார்.. ஆனால் விஜய், 'குதிரை வேகத்துல செயல்படுறோம்'னு சட்டமன்றத்தில் சொல்கிறார், ஆனா இது உண்மையிலேயே குதிரை வேகத்துல செய்ற குதிரை பேரம்! சட்டமன்ற வளாகத்துல இந்த அளவுக்கு இதுவரை பகிரங்கமா நடந்ததே கிடையாது.
ஆற்காடு சுகுமார், அந்தியூர் அரிபாஸ்கர், பண்ருட்டி மோகன், சங்கரன்கோவில் திலீபன் மற்றும் காங்கேயம் எம்.எஸ்.என். நடராஜன் என 5 பேரும் தவெக-வின் பேரம் பேசும் சூழலில் நேரடியாகப் பங்கேற்றவர்கள். இவர்கள்தான் சிபிஐ விசாரணையில் முக்கியச் சாட்சிகளாக மாறப்போகிறார்கள்.
இவங்க சிபிஐ-ல சாட்சியா சொன்னால் மட்டும்தான், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் எம்.எல்.ஏக்களின் பதவி பறிக்கப்படும். இதனாலதான் பதவியைப் பறிகொடுக்கும் முன்னாடியே, இவங்க முன்கூட்டியே ராஜினாமா செஞ்சுட்டு மறுபடியும் தேர்தலில் நிக்கப் போறாங்க.
சிபிஐக்கு போகும் விசாரணை
இது இந்த மூன்று பேருடன் இது நிக்காது. மொத்தம் ஒரு 10 எம்.எல்.ஏக்களை இவங்க ரெடி பண்ணி வச்சிருக்காங்க. ஒவ்வொருத்தருக்கும் 20 கோடி ரூபாய்.. இதுபோக வாரியத் தலைவர் பதவியும் பேசப்பட்டுள்ளது.. இதனால திருச்சி கிழக்கு தொகுதியோட சேர்த்து மொத்தம் 11 இடங்களில் இடைத்தேர்தல் வரப்போகுது. இடைத்தேர்தல் என்பதால் வெற்றி பெற்று விடலாம் என்று ஆதவ் அர்ஜு.னா கணக்கு போட்டு வருகிறார்..
இப்போது இந்த 11 தொகுதியிலயும் தவெகவில் வெற்றி பெற்று வர முடியுமா? ஒருவேளை மக்கள் இந்தத் தேர்தல்ல இவர்களை ரிஜெக்ட் செய்துவிட்டால், அந்த எம்.எல்.ஏக்களோட கதி என்ன? தவெக ஆட்சியோட நிலைமை என்ன? இதையெல்லாம் கணக்கு பண்ணிதான் ஆதவ் அர்ஜுனா ஒவ்வொரு காயையும் நகர்த்திக்கிட்டு இருக்கார்.
இந்த குதிரை பேரத்துக்கு சிபிஐ-ல புகார் கொடுக்கப்போறாங்க. அந்த சிபிஐ விசாரணைக்கு சாட்சியா யார் வரப்போறாங்கன்னு தெரியுமா? ஆற்காடு சுகுமார், அந்தியூர் அரிபாஸ்கர், பண்ருட்டி மோகன், சங்கரன்கோவில் திலீபன், காங்கேயம் எம்.எஸ்.என். நடராஜன்.. இந்த 5 பேரும் எடப்பாடியை சந்தித்து பேசிவிட்டார்கள்.
லீமா ரோஸ் பேரம் பேசினாரா?
வேலுமணிக்கு ஆசை காட்டி, லீமா ரோஸ் மூலமா எல்லா வேலையும் பார்த்தாங்க. இப்ப அந்த லீமா ரோஸையே கட்சிய விட்டு கட்டம் கட்ட எடப்பாடி ரெடியாகிட்டாரு.
லீமா ரோஸும், அவரது டீமும் எப்படியெல்லாம் தங்களிடம் பேரம் பேசினார்கள் என்பதை சிபிஐ-ல இந்த 5 பேரும் சாட்சியாக சொல்லப்போறாங்க. இவங்க 5 பேரும் சாட்சி சொன்னால் மட்டும்தான், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்ய முடியும். அப்படி தங்களுக்கு பதவி பறிபோகும் என்று தெரிந்துதான், இன்று 3 பேரும் முன்கூட்டியே ராஜினாமா செய்துவிட்டார்கள். .
ஆனால் இதில் குதிரை பேரம் நடந்ததா? என்பது விரைவில் தெரியவரும்.. அப்படி தெரியவந்தால் அதுவே இவங்களுக்கு பெரிய ஆபத்துல போய் முடியும் என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
"கரண்ட் போனால் என்ன? விஜய்யை கேட்டா வந்துருமா?" என் வீட்டுல இருக்கு! வினோதமாக பேசிய மாஸ்டர் மகேந்திரன் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications