எம்ஜிஆர், சிவாஜியுடன் நடித்த.. பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்.! திரைத்துறையினர் அஞ்சலி
சென்னை: 1960 மற்றும் 1970களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை புஷ்பலதா. 87 வயதான இவர், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் சிகிச்சையும் எடுத்து வந்த சூழலில் திடீரென இன்று மாலை அவர் காலமானார். அவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் 1960, 70களில் கோலோச்சிய முக்கிய நடிகைகளில் ஒருவர் புஷ்பலதா.. இவர் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், ஜெமினி கணேசன் எனப் பல முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள மொழிகளிலும் கூட அவர் பல படங்களில் கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்துள்ளார். 1958ம் ஆண்டு செங்கோட்டைச் சிங்கம் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
1963ம் ஆண்டு ஏ. வி. எம். ராஜன் நடிப்பில் வெளியான நானும் ஒரு பெண் திரைப்படத்தில் இவரும் நடித்திருந்தார். படத்தின் ஷூட்டிங்கில் இருவரும் காதலித்த நிலையில், அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். 1960களில் மற்றும் 1970களில் படுபிஸியாக இருந்த புஷ்பலதா, ஏகப்பட்ட படங்களில் நடித்திருந்தார். 1980களில் அவர் படங்களில் நடிப்பதைக் குறைத்திருந்தார்.
அவர் கடைசியாக 1999ம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீபாரதி இயக்கத்தில் முரளி, நளினி உள்ளிட்டோர் நடித்திருந்த பூ வாசம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகியே இருந்தார். அவர் பிறகு மத ரீதியான நலப்பணிகளையும் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே நடிகை புஷ்பலதாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் சிகிச்சையும் எடுத்து வந்தார். இந்தச் சூழலில் சிகிச்சை பலனில்லாமல் அவர் இன்று மாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 87. பழம்பெரும் நடிகையான புஷ்பலதா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications