லியோ.. நவம்பர் 1 இல் நேரு ஸ்டேடியத்தில் வெற்றி விழா.. விஜய் கலந்து கொள்கிறார்! ரசிகர்கள் ஹேப்பி
சென்னை: லியோ பட வெற்றி விழாவை வரும் நவம்பர் 1 ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த நிலையில் இந்த படம் குறித்த அப்டேட் வரும்போதெல்லாம் ஏதாவது ஒரு பிரச்சினை நடந்து கொண்டே இருந்தது.

அதாவது படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்துவதாக இருந்தது. ஆனால் அது திடீரென ரத்தாகிவிட்டது. இந்த சம்பவத்திற்கு பின்னால் அரசியல் இருப்பதாக பேசப்பட்டது. ஆனால் வேறு ஒரு வழக்கில் காவல் துறை கூறிய போது லியோ இசை வெளியீட்டு விழாவை படதயாரிப்பு நிறுவனம்தான் ரத்து செய்தது என விளக்கமளித்தனர்.
இதைத் தொடர்ந்து அனைவரும் எதிர்பார்த்த டிரெய்லர் அண்மையில் வெளியானது. அதில் விஜய் கெட்ட வார்த்தை பேசியிருந்ததால் பலரது கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில் படம் வெளியான போது பலருக்கு டிக்கெட் கிடைப்பதில் குளறுபடி இருப்பதாக சொல்லப்பட்டது. அதன் பிறகு அது சரியாகிவிட்டது. இந்த படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து இரு மாதிரியான விமர்சனங்கள் வருகின்றன.
குறிப்பாக இந்த படத்தை வைத்து ரஜினி ரசிகர்கள் விவாதமே நடத்தி வருகிறார்கள். மேலும் லியோ திரையிடப்பட்ட சிலநாட்களிலேயே ரூ 1000 கோடி வசூல் என ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி கொண்டாடினர். பல்வேறு திரையரங்குகளில் புக் ஆகாமல் இருந்து வரும் நிலையில் எப்படி ரூ 1000 கோடி வசூலாகும் என ரஜினி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் லலித்குமார் படத்தின் வசூல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி லியோ திரைப்படம் வெளியாகி 7 நாட்களில் ரூ 461 கோடி வசூலை குவித்துள்ளது என அறிவிக்கப்பட்டது. இதை ரஜினி ரசிகர்கள் டிரென்ட்டாகினர். லியோ படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. லியோ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் கலந்து கொள்வதால் பாதுகாப்பு கோரி படத் தயாரிப்பாளர் லலித்குமார் பெரியமேடு காவல் நிலையத்தில் கடிதம் அனுப்பியுள்ளார்.
-
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
தவெகவில் கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம்.. கட்சித் தலைமை தெரிந்துதான் வசூல் நடக்கிறதா? -
TASMAC: பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் ஏன்? யார் யாருக்கு லஞ்சம் போகிறது தெரியுமா? முழு லிஸ்டடால் ஷாக் -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
விஜய்யுடன் டெல்லி பயணித்த அந்த இளைஞர் யார்? போகுமிடமெல்லாம் கூடவே இருந்தாரே.. பின்னணி












Click it and Unblock the Notifications