லியோ vs ஹைனா.. டிரைலரில் விஜய் மோதும் Hyena என்ன விலங்கு? சிங்கமே மிரண்டு ஓடுமாமே.. தெரியாத பின்னணி
சென்னை: காடுன்னு இருந்தா சிங்கம்னு இருக்கும்.. புலின்னு இருக்கும்.. மானுன்னு இருக்கும் விக்ரம் படத்தில் டிரைலரில் ஒரு வசனம் வரும். அதில் சொல்லாத விலங்கு ஹைனா. தற்போது அதே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் லியோ படத்தில் ஹைனா என்ற அந்த விலங்கு வருகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக உள்ள லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டு உள்ளது. நேரு அரங்கில் நடக்க இருந்த விழா அதிக டிக்கெட் விற்பனை, போலி டிக்கெட் விற்பனை உள்ளிட்ட காரணங்களால் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இதன் ட்ரைலர் நேற்று வெளியானது. இரட்டை கதாபாத்திரம் அல்லது ஒரே கதாபாத்திரம் தன்னை மறந்து.. தனது பின்னணியை மறந்து செயல்படும் அல்டர் ஈகோ பாணியில் இந்த கதை தயாரிக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலும் இது ரிவெஞ்ச் கதையாகவும், ஒன்றிரண்டு பிளாஷ்பேக் கொண்ட கதையாகவும் இருக்கும் வாய்ப்புகள் உள்ளன.

விஜய் ட்ரைலரில் கெட்ட வார்த்தை பேசியது, படத்தில் விஜய் இரண்டு கெட்டப்பில் வருவது, கோரமாக சண்டை போடுவது என்று படத்தின் டிரைலர் இப்போதே எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. முக்கியமாக விஜயின் வயதான தோற்றத்தின் புகைப்படங்கள், அவரின் காட்சிகள் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளன. பனி படர்ந்த காட்டில் விஜய் ஹைனா ஒன்றுடன் சண்டை போடுவது போலவும் காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.
ஹைனாவுடன் விஜய் சண்டை போடும் காட்சிகள் கிராபிக்சில் செய்யப்பட்டு உள்ளது. இந்த அனிமேஷன் மிக சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது. இதை வைத்து நெட்டிசன்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றன. முக்கியமாக அனிமேஷன் நன்றாக உள்ளது என்று நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
( எனக்கு ஓகேங்க.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை.. லியோ ஆடியோ வெளியீட்டு விழா ரத்தான உண்மையான காரணம் )
என்ன விலங்கு இது?: ஹைனா என்பது இந்தியாவில் காஷ்மீர் உள்ளிட்ட குளிரான மலைப்பிரதேசங்களில் உள்ள விலங்கு ஆகும். இது பார்க்க கொடூரமாக இருந்தால் சிங்கத்தின் குணத்தை கொண்ட வேட்டை விலங்கு ஆகும். இதை தமிழில் கழுதைப்புலி என்று அழைப்பார்கள். இது புதர் மற்றும் முட்காடுகளில் தனியாக அலைந்து திரிந்து செல்லும் விலங்கு ஆகும்.
பார்க்க நரி போல இருக்கும். ஆனால் நரி போல கூட்டமாக குழுவாக வாழாது. இது தனியாகவே வாழும். இது வேட்டையாடி இரை உண்ணும் ஓர் அனைத்துண்ணி விலங்காகும். இவ்விலங்கு இந்தியாவில் குளிர காஷ்மீர் பகுதியில் உள்ள காடுகளில் காணப்படும். ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் பாகிஸ்தான் உட்பட பல நாடுகளில் கூட ஹைனா காணப்படுகிறது.
( லியோ பாடல் பார்த்தீங்களா.. ஐயோ.. போதை தடுப்பு சட்டத்தில் விஜய் மீது நடவடிக்கை.. போலீசில் பரபர புகார் )
சிங்கம் போன்ற குணம் கொண்டவை என்றால் கூட இவை சிங்கம் போல ஒரு இடத்தில் வாசிக்கது. இவ்விலங்குகள் ஒரே இடத்தில் வசிக்காதவை; நீர் தேடி ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகர்ந்து கொண்டே இருக்கும். சில வேட்டை சம்பவங்களில் சிங்கத்தை கூட எளிதாக ஹைனா வீழ்த்தி வென்றுவிடும். நீண்ட பற்கள் மூலம் கீறி கொலை செய்யும் குணம் கொண்டது இது. கழுதைப்புலி் உடலின் மேற்பகுதி சாம்பல் நிறத்திலான மயிற்போர்வையை கொண்டிருக்கும். பார்க்க மிகவும் குட்டையாக இருந்தாலும் மிக வேகமாக தாக்கும் , ஓடும் திறன் கொண்ட விலங்கு ஆகும்.












Click it and Unblock the Notifications