எனக்கு ஓகேங்க.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை.. லியோ ஆடியோ வெளியீட்டு விழா ரத்தான உண்மையான காரணம்
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது ஏன் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக உள்ள லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டு உள்ளது. நேரு அரங்கில் நடக்க இருந்த விழா அதிக டிக்கெட் விற்பனை, போலி டிக்கெட் விற்பனை உள்ளிட்ட காரணங்களால் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

அதே சமயம் அவரின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு அரசியல் ரீதியாகவே அனுமதி கொடுக்கவில்லை. திமுக அரசுதான் இதை செய்கிறது என்று விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதற்காக #DMKFearsThalapathyVIJAY என்ற டேக்கையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
நடிகர் விஜய் நடித்து அக்டோபரில் வெளியாகவிருக்கும் படம் லியோ பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி 30-ந்தேதி நடக்கவிருந்தது. அந்த நிகழ்ச்சி திடீரென்று ரத்து செய்யப்பட்டதால் நேற்று நடக்கவில்லை.
சோஷியல் மீடியா: இந்த சம்பவம் விஜய் ரசிகர்களை ஆத்திரப்பட வைத்தது. திமுகவின் மிரட்டல் அரசியல்தான் காரணம் என சோசியல் மீடியாக்களில் கொந்தளித்தனர் விஜய் மக்கள் இயக்கத்தினர். இந்த நிகழ்ச்சியை ரத்து செய்வதற்கு முன்பு, நடிகர் விஜய்யை சந்தித்த தயாரிப்பாளர், காவல்துறை தரப்பிலிருந்து தனக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தை விவரித்து, நான் முடிவு எடுக்கலாமா என்று கேட்டிருக்கிறார்.
அதாவது டிக்கெட் பிரச்சனை ஒரு பக்கம் இருக்கிறது. பலர் டிக்கெட்டை வாங்கி இருக்கிறார்கள் . சிலர் பொய்யாக டிக்கெட் அடித்து உள்ளனர். நாம் எதிர்பார்ப்பதை விட 5 மடங்கு கூட்டம் வரலாம் என்கிறார்கள். அப்படி நடந்தால் அது பெரிய பிரச்சனை ஆகும். மிகப்பெரிய அளவில் பாதுகாப்பு குறைபாடு ஏற்படும். அதனால் போலீசார் இது தொடர்பாக தகவல் அனுப்பியபடி இருக்கிறார்கள். என்ன செய்வது என்று கேட்டுள்ளார்.
அதற்கு விஜய்,''எது சரியானது என நினைக்கிறீர்களோ அதை எடுங்கள். எந்த முடிவாக இருந்தாலும் எனக்கு ஓ.கே.தான்'' என்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்தே ரத்து செய்யும் முடிவை எடுத்தாராம் தயாரிப்பாளர்.

இதில் அரசியல் அழுத்தம் எதுவும் நேரடியாக இல்லை. பாதுகாப்பு பிரச்சனைதான் காரணம் என்கிறார்கள். ஆனாலும் திமுகவுடன் அரசியல் செய்ய அல்லது மோதிப்பார்க்க விஜய் விரும்பாததால் தான், " எந்த முடிவாக இருந்தாலும் எடுத்துக் கொள்ளுங்கள் ; எனக்கு ஆட்சேபனை இல்லை என சொல்லியிருக்கிறார்" என்கிறார்கள் விஜய் மக்கள் இயக்கத்தினர்.
அரசியல் இல்லை: அரசியல் ரீதியதாக இதற்கு அழுத்தம் இல்லை. சமீபத்தில் நடிகர் விஜய் பள்ளி மாணவ மாணவியருடன் சந்திப்பு நடத்தினார். 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு சிறப்பு பரிசுகளை நடிகர் விஜய் வழங்கினார். 1,500 மாணவர்களை சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு பரிசுகளை நடிகர் விஜய் அளித்தார்.
காலை 9 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி இரவு 11.30 மணி வரை நடந்தது. நிகழ்ச்சியில் 1,500 மாணவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் சந்தித்து விஜய் போட்டோ எடுத்தார். வெறுமனே அப்படியே போட்டோ எடுத்துவிட்டு அனுப்பிவிடாமல் எல்லோரிடமும் அமைதியாக பேசினார்.
இந்த நிகழ்ச்சிக்கு போலி டிக்கெட் பிரச்சனை, அதீத ரசிகர் பிரச்சனை இல்லை என்பதால் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இசை வெளியீட்டு விழாவிற்கு பாதுகாப்பு பிரச்சனை இருந்ததாலேயே அனுமதி வழங்க போலீசார் யோசித்ததாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
