அறிவித்து 2 வாரம் கூட ஆகல.. பாதிக்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள் விஆர்எஸ் கேட்டு விண்ணப்பம்!
Recommended Video
சென்னை: விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்த இரண்டு வாரத்துக்குள்ளாகவே பாதிக்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள் விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த நவம்பர் 4ம் தேதி இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக பிஎஸ்என்எல் நிதிசிக்கலை சமாளிக்க 50 வயதை கடந்த ஊழியர்கள் விருப்ப ஓய்வு கோரி ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது.
இதன்படி மொத்தம் உள்ள 1.50 லட்சம் பிஎஸ்என்எல் ஊழியர்களில், சுமார் ஒரு லட்சம் ஊழியர்கள் வரும் டிசம்பர் 3ம் தேதிக்க விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பிக்கலாம் என்றும் பிஎஸ்என்எல் அறிவித்தது.

75 ஆயிரம் பேர்
சுமார் 75 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு கேட்பாளர்கள் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் எதிர்பார்த்தது. இந்நிலையில் விருப்ப ஓய்வுக்கான அறிவிப்பு வெளியான முதல் இரண்டு வாரத்திற்கு உள்ளாகவே 75 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இது மொத்தம் உள்ள ஊழியர்களில் சுமார் பாதி அளவு ஆகும். இந்த தகவலை பிஎஸ்என்எல் தலைவர் பிகே புர்வார் தெரிவித்துள்ளார்.

விருப்ப ஓய்வு
இந்நிலையில் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணபித்துள்ள ஊழியர்களுக்கு வரும் 2020ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுவார்கள்.

அதிகம் பேர் விண்ணப்பம்
70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்தால் சுமார் 7000 கோடி சம்பள பில் மிச்சமாகும் என பிஎஸ்என்எல் நினைத்தது. ஆனால் அதற்கும் மேலாகவே ஊழியர்கள் விருப்ப ஓய்வு கேட்பார்கள் என்பது தெரியவருகிறது.

ஏன் விண்ணப்பம்
விருப்ப ஓய்வு பெறுவோருக்கு மிகப்பெரிய அளவில் கணிசமான ஊக்கத்தொகையும் ஓய்வுத்தொகையும் கிடைக்கும் என்று அரசு அறிவித்துள்ளால் பலரும் விஆர்எஸ் கேட்டு விண்ணப்பித்து இருப்பது தெரியவந்துள்ளது.

அச்சத்தில் முடிவு
இதேபோல் மாத ஊதியங்கள் பிஎஸ்என்எல்லில் தாமதமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் வேலை குறித்த அச்சம் மற்றும் பீதி காரணமாக பலரும் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது இப்போதைக்கு ஊழியர்களுக்கு உடனடி நன்மைஎன்றாலும் நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு நஷ்டம் என்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications