கீழடி உள்ளிட்ட அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு.. உடனே அனுமதி வழங்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: கீழடி உள்ளிட்ட 8 இடங்களுக்கான அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு, மத்திய அரசு உடனே அனுமதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "கீழடி பேசட்டும்! வரலாறு எழட்டும்! கீழடி, ஆதிச்சநல்லூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட 8 இடங்களுக்கான அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்கு, ஒன்றிய பாஜக அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு கோரியுள்ளது.

இதற்கான முன்மொழிவுகள் 2025ம் ஆண்டு ஜூலை மாதமே சமர்ப்பிக்கப்பட்டு, நவம்பர் மாதம் இந்தியத் தொல்லியல் துறையின் (ASI) தலைமை இயக்குநரின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இருப்பினும், 8 மாதங்களாக இந்த அனுமதி நிலுவையிலேயே உள்ளது. மீண்டும் மீண்டும் நாங்கள் இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறோம், ஆனால் மீண்டும் மீண்டும் அது புறக்கணிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஜனவரி முதல் ஜூலை வரை மட்டுமே நடைபெறும். இந்த கால இடைவெளியைத் தவறவிட்டால், பருவமழைக் காலம் களப்பணிகளைத் தடுத்துவிடும்; இது முக்கியமான ஆய்வுகளைத் தாமதப்படுத்துவதோடு, 2025-2026 ஆம் ஆண்டிற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியையும் வீணடிக்கும்.
நான் கேட்க விரும்புவது ஒன்றுதான், ஏன் இந்தத் தயக்கம்? தமிழ நாகரிகத்தின் தொன்மை இந்தியாவைக் குறைத்து மதிப்பிடாது. அது இந்தியாவின் நாகரிகப் பெருமையையே கூட்டும். பாஜக அரசு எதைக் கண்டு பயப்படுகிறது? அகழ்வாராய்ச்சிகளுக்கு உடனே அனுமதி வழங்குங்கள்; வரலாறு பேசட்டும்!" என பதிவிட்டிருக்கிறார்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications