அதிமுக முடிஞ்சிட்டுன்னு நினைக்காதீங்க.. என்னோட 'என்ட்ரி' ஆரம்பித்து விட்டது.. சசிகலா பரபர பேட்டி
சென்னை: அதிமுக முடிந்துவிட்டது என்று நினைத்துவிடாதீர்கள். இப்போது என்னோட என்ட்ரி ஆரம்பித்து விட்டது என சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சசிகலா பரபரப்பாக பேசினார்.
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் தமது ஆதரவாளர்களை சசிகலா இன்று சந்தித்தார். அப்போது அதிமுகவுக்கு சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என தொண்டர்கள் முழக்கமிட்டனர். லோக்சபா தேர்தலில் அதிமுக பெரும் தோல்வியை சந்தித்த நிலையில் முதல் முறையாக ஆதரவாளர்களை சந்தித்தார். அப்போது சசிகலா பேசியதாவது:-

இன்றைக்கு நிலைமை என்ன? அதிமுக 3 வது இடத்துக்கும், 4வது இடத்துக்கும் போயிட்டு.. இதற்கு எல்லாம் யார் காரணம்?.. நம் தொண்டர்கள் இருக்காங்க.. பொதுமக்கள் இருக்காங்க.. பொதுமக்களை பொறுத்தவரைக்கும் அதிமுக மீது கொஞ்சம் பிரியம் அதிகம். ஏனென்றால் நம் ஆளுங்க யாரும் போய் மக்களுக்கு தொந்தரவு செய்யமாட்டாங்க.
நம்ம கட்சிக்காரர்கள் எப்போதும் மக்களிடம் இணக்கமாக, பிரியமாக போய்டுவாங்க.. அதனால் மக்களுக்கும் நம்ம மீது பெரிய தனி பிரியம் இருக்கும். அதையெல்லாம் விட்டுட்டு இப்போ இந்த அளவிற்கு போகிறோம் என்று சொன்னால், தானும் கெட்டு கட்சியையும் கெடுத்துவிட கூடாது என்பது தான் என்னுடைய கோரிக்கையாக இருக்கு.
ஆனால் இது மாதிரியெல்லாம் பெரிதாக நிறைய பாத்தாச்சு.. ஆரம்பத்திலேயே நமக்குள்ளேயே இரண்டு அணியாய் போய் சேவல், புறால்லாம் வந்து நாம எல்லாத்தையும் பார்த்துட்டு தான் வந்துருக்கு. இப்போது நல்ல நேரம் வந்திருக்கு. இப்போது நம்முடைய நேரம் சரியாக கணிந்து வந்திருக்கு. என்னடா இது சின்னம்மா எப்போது பார்த்தாலும் இப்படி சொல்லிட்டு வற்றாங்களே என்று நினைக்க வேண்டாம். கவலைப்படாதீங்க..
நிச்சயமாக தமிழ்நாட்டு மக்கள் நம்ம பக்கம் இருக்கிறார்கள். இப்போது கூட பார்த்தீர்கள் என்றால் எந்த நாட்கள் அதிமுக முடிஞ்சி போச்சு என்று நினைக்க முடியாது. ஏனென்றால் என்னுடைய என்ட்ரி ஆரம்பிச்சுருக்கு. அதனால் நம்ம தான்.. என் பின்னாடியும் தொண்டர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் இருக்கிறார்கள். 2026 அம்மாவின் ஆட்சி அமைப்போம். அதுவும் தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைப்போம்.
நான் எப்போதும் அதிகம் பேசமாட்டேன். முக்கியமான நேரத்தில் மட்டும் தான் குரல் கொடுப்பேன். அந்த சமயம் வந்துவிட்டது. விரைவில் நான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போகிறேன். பட்டி தொட்டியெல்லாம் போய் மக்களிடம் நான் கேட்க போகிறேன். இந்த திமுகவின் சலசலப்பை எல்லாம் கேட்க போகிறேன்.
திமுகவின் இந்த கோரப்பிடியில் இருந்து தமிழ்நாட்டை காக்க வேண்டும் என்றால், நான் வந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம். என்னுடைய ஒரு கண் தொண்டர்கள். இன்னொரு கண் தமிழ்நாட்டு மக்கள். இதனால் தான் என்ன சலசலப்பு வந்தாலும் என்னுடைய பார்வை நேர்க்கோடாக தான் இருக்கும். ஒன்னும் கவலைப்படாதீங்க..
நம் தமிழ்நாட்டு மக்களுக்கும், அம்மா விட்டு சென்ற போது சில விஷயம் செய்ய வேண்டும் என்று சொன்னதையும் நான் செய்யவேண்டும் என்பதை தான் நினைத்துக் கொண்டிருகிறேன். இப்போதும் சரி.. எப்போதும் சரி.. 40 வருஷம் மக்களுக்காக வாழ்ந்திருக்கேன். மீதி உள்ள காலம், இனியும் மக்களுக்காக நான் இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications