மாணவர்களை விளையாட விடுங்க சார்..வேறு வகுப்புகள் வேண்டாமே..அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் 24 வகையான விளையாட்டில் 208 வகையான போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தை இந்தியாவின் விளையாட்டு தலைநகராக மாற்ற அறிவித்துள்ளார். அத்துறையுடன் இணைந்து மேலும் விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். விளையாட்டு நேரத்தில் மாணவர்களுக்கு மற்ற வகுப்புகள் எடுக்க கூடாது என்று வலியுறுத்தப்படும் என்றும் கூறினார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

பள்ளிகளில் மாணவர்களுக்கு கால அட்டவணை கொடுத்து பாடங்கள் நடந்துவது அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் வழக்கம். அந்த வகுப்புகள் வாரத்தில் 2 அல்லது 3 விளையாட்டு துறைக்கான பீரியட் இடம்பெறும்.

பல பள்ளிகளில் விளையாட விடுவதில்லை. ஏதேனும் ஒருசிலபாடங்கள் இன்னும் முடிக்கவே இல்ல. நீங்க விளையாட போகவேண்டாம் நான் பாடம் நடத்த வேண்டும் என்று கூறும் ஆசிரியர்களே அதிகம்.

Let the students play in PET period School Education Minister Anbil Mahesh Poiyamozhi

உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு வந்தார். அப்போது மாணவி ஒருவர் உடற்கல்வி வகுப்பில் வேறு வகுப்புகள் எடுப்பதை தவிர்த்து விட்டு விளையாட மட்டும் விட வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஈரோட்டில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வல ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடக்க விழா திண்டல் வேளாளர் கல்லூரி வளாக கலையரங்கில் இன்று நடைபெற்றது.

விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். புதிய கல்விக் கொள்கை குறித்த ஆய்வு தமிழகம் முழுவதும் முடிவடைந்துள்ளது. இப்பொழுது தனியார் பள்ளி சங்கங்கள் போன்ற துறை சார்ந்த கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன. டிசம்பரில் இது முடிவடையும். ஜனவரியில் முதல்வரிடம் இந்த ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு முதல்வர் அதை ஆய்வு செய்து ஆணை வெளியிடுவார்.

நடப்பாண்டு தமிழகம் முழுவதும் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 4.8 லட்சம் பேருக்கு எழுத்தறிவு கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மாவட்டத்தின் இலக்கு 23 ஆயிரத்து 598. கடந்த ஆண்டு 3.10 லட்சம் பேருக்கு திட்டம் பயன் தந்தது. இலக்கை விஞ்சி 5 லட்சம் பேர் வரை இத்திட்டத்தில் பயன் அடைவார்கள்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் 24 வகையான விளையாட்டில் 208 வகையான போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தை இந்தியாவின் விளையாட்டு தலைநகராக மாற்ற அறிவித்துள்ளார். அத்துறையுடன் இணைந்து மேலும் விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுப்போம்.

விளையாட்டு நேரத்தில் மாணவர்களுக்கு மற்ற வகுப்புகள் எடுக்க கூடாது என்று வலியுறுத்தப்படும். பள்ளிகளில் குழந்தைகள் கஞ்சா போன்ற தீய பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது என்று முதல்வர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். ஐஏஎஸ் அதிகாரிகள் கூட்டத்தில் கூட போதை பொருள் இல்லா மாநிலத்தை உருவாக்குவதை அவர் வலியுறுத்தி உள்ளார். எனவே காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+