“நான் இருக்குற வரைக்கும் நடக்காது.. வந்து தொடச் சொல்லுங்க பார்ப்போம்”.. சீமான் ஆவேசம்!
சென்னை : "மத்திய அரசு அனுமதி கொடுக்கட்டும், நிலக்கரியை யார் எடுக்கிறார்கள் என்று பார்ப்போம். நான் இருக்கும்வரை அது நடக்காது" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கூறியுள்ளார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் 5 புதிய நிலக்கரி சுரங்கங்களும், காவிரிப் டெல்டாவையொட்டி ஒரு சுரங்கமும் அமைப்பதற்கான தொடக்க கட்ட பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளதாக தகவல் வெளியானது.
இதற்கு தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், டெல்டா மாவட்ட விவசாயிகளும் கடுமையாக எதிர்த்து தெரிவித்து வருகின்றனர்.

சீமான் ஆவேசம்
சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் திருவாரூர் மாவட்டத்தில் 11 இடங்களில் மத்திய அரசு நிலக்கரி எடுக்க அனுமதி வழங்கியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், "நான் இருக்கும்வரை அது நடக்காது. மத்திய அரசு அனுமதி கொடுக்கட்டும், நிலக்கரியை யார் எடுக்கிறார்கள் என்று பார்ப்போம்." என ஆவேசமாக சவால் விட்டுள்ளார்.

யாராவது தொடட்டும்
மேலும் பேசிய சீமான், "நெய்வேலியில் நிலத்தை ஆக்கிரமிப்பது, திருவாரூர் மாவட்டத்தில் மீத்தேன், ஈத்தேனுக்காக பூமியைத் தோண்டுவது, நிலக்கரி எடுப்பது போன்ற வேலைகளைச் செய்வது என திராவிடர்கள் ஆட்சி இருக்கும் வரைதான் இந்த ஆட்டம் நடக்கும். இன்னும் ஒரு 4 ஆண்டுகள் பொறுங்கள், அதன்பிறகு யாராவது தொடட்டும் பார்த்துக் கொள்கிறேன்" எனப் பேசினார்.

நான்தான் முன்னால் நிற்பேன்
நிலக்கரி சுரங்கங்கள் தோண்டுவதற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் அறிவித்திருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், "அந்தப் போராட்டத்தில் நான்தான் முன்னால் நிற்பேன். போராட வேண்டிய பொறுப்பும் கடமையும் எனக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் உள்ளது. எங்களுடைய கோட்பாடு, என் நிலத்தை இழந்தால், நான் பலத்தை இழப்பேன். பலத்தை இழந்தால் என் இனத்தை இழப்பேன். அதனால் நான் என் தாய் நிலத்தை பேரன்பு கொண்டு காதலிக்கிறேன்.

யார் கேட்கப்போறது?
அரசு தீர்ந்துபோகிற வளங்களையே கைவைக்கிறது. நிலக்கரி, மீத்தேன், ஈத்தேன் இவை எல்லாவற்றையும் ஒரு குறிப்பிட்ட காலம்தான் எடுக்க முடியும். தீராத வளங்களை அரசு தேர்வு செய்ய வேண்டும். மின் உற்பத்திக்கு சூரிய ஒளி, காற்றாலைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறேன். உலக நாடுகள் சாலை முழுக்க சூரியஒளி மின் தகடைப் பதிக்கின்றன, கடலில் மிதக்க வைத்து மின் உற்பத்தி செய்கின்றன. இதுபோல திட்டங்களை அரசு செயல்படுத்தினால் யார் கேட்கப்போகிறார்கள்.

எங்கும் நடக்காது
நிலக்கரியை அரசு எவ்வளவு காலத்திற்குத்தான் எடுக்கும்? ஓர் அடிப்படை அறிவற்ற கூட்டத்தின் கையில் இந்த நாட்டை கொடுத்ததால், அவர்கள் பூமியை தோண்டிக் கொண்டே இருக்கின்றனர். இதுபோல வேறு எந்த மாநிலத்திலும் நடக்கவில்லை. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துவிட்டு, அதில் வந்து நிலக்கரி எடுப்பதா?" என காட்டமாகப் பேசியுள்ளார் சீமான்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications