பத்திரம் தொலைந்து போயிடுச்சு.. சர்வே நம்பர் மட்டுமே தெரியும்.. பத்திர நகலை வாங்க முடியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிலர், தங்களது சொத்து பத்திரத்தை தொலைத்திருப்பார்கள்.. அப்படி சொத்து பத்திரத்தை தொலைத்தவர்களிடம் சர்வே நம்பர் மற்றும் பட்டா பதிவு செய்த ஆண்டு மட்டும் தெரிந்திருக்கும். ஆன்லைன் இசி அவர்களிடம் இருக்காது. அதேபோல் சிலரது தாத்தா, பாட்டி பெயரில் சொத்து இருக்கும். பத்திரம் தொலைந்திருக்கும். அவர்களால் பத்திர நகல் வாங்க முடியுமா என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

சொத்து பத்திரம் தொலைந்தாலும் பத்திர நகலை உங்களால் நிச்சயம் வாங்க முடியும். சர்வே நம்பர் தெரிந்தாலே, உங்களால் ஆன்லைனில் ஈசிபோட்டு யார் பெயரில் பத்திரம் உள்ளது என்பதை அறியலாம். அது உங்கள் பெயரிலோ அல்லது உங்கள் பாட்டி, தாத்தா பெயரிலோ இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க முடியும்.

deed patta registration

பத்திரம் தொலைந்து போனால் பதற்றப்பட வேண்டாம். காவல் நிலையத்தில் சொத்து பத்திரம் தொலைந்தது தொடர்பாக நீங்கள் முறைப்படி புகார் அளிக்க வேண்டும். அந்த புகார் எப்படி இருக்க வேண்டும் என்றால், மிகச்சரியான தகவல்களுடன் இருக்க வேண்டும். அதன்பின்னர் நீங்கள் புகார் அளித்ததை விசாரிக்கும் காவல் துறை அதிகாரிகள், புகார் மனுவுக்கான எப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை) நகலை உங்களுக்கு அளிப்பார்கள். அந்த முதல் தகவல் அறிக்கை நகலை தமிழ்நாட்டில் உள்ள முன்னணி நாளிதழ் ஒன்றில் பத்திரம் காணவில்லை என்ற அறிவிப்பு கொடுக்க வேணடும். பின்னர் 60 நாட்கள் கழித்து காவல்நிலையம் சென்று பத்திரம் குறித்து முறையிட வேண்டும். காவல்துறை அதிகாரிகள் நாளிதழ் விளம்பரம் வெளியிட்டதில் இருந்து 60 நாட்கள் கழித்து, பத்திரம் காணவில்லை தொடர்பாக "பத்திரம் கண்டுபிடிக்க முடியவில்லை அல்லது தொலைந்தது உறுதி" போன்று ஓர் சான்று அளிப்பார்கள் அதை பெற வேண்டும்

அந்த சான்றிதழுடன் சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டும். அந்த சான்று காட்டி டூப்ளிகேட் பத்திரம் வேண்டும் என்று சார்பதிவாளரிடம் மனு அளிக்க வேண்டும். அந்த நகலை அதிகாரிகள் உங்களிடம் தருவார்கள். பின்னர் சார் பதிவாளர் காவல்துறை அளித்த சான்றிதழின் அடிப்படையில், நகல் பத்திரத்தில் கையொப்பமிட்டு இன்று முதல் இதுதான் அசல் பத்திரம் என்று அதில் முத்திரை குத்தி தருவார். அதுதான் அடுத்து அசல் பத்திரமாகும். இதற்கு கட்டணம் உண்டு. உரிய கட்டணத்தைச் செலுத்தி,பத்திர நகலை பெற்று கொள்ளலாம்.

அதேபோல் இறந்துபோன பாட்டி, தாத்தா, அப்பா, அம்மா பெயரில் சொத்து பத்திரம் இருந்து அது தொலைந்து போனாலும் வாங்க முடியும். பத்திரம் இல்லை என்று விட்டுவிட வேண்டாம். சொத்து பதிவு செய்யப்பட்ட சார்பதிவாளர் அலுவலகம்/ சொத்து உள்ள கிராமம்/ வார்டு/ பிளாக் ஆகியவற்றை கண்டுபிடியுங்கள். பின்னர் சொத்து இருக்கின்ற இடத்தில், அக்கம் பக்கத்தில் உள்ள சொத்தின் உரிமையாளர்களிடம் விசாரித்து,அவர்களது சொத்துக்களின் சர்வே எண்ணை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். பக்கத்தில் உள்ள சர்வே எண் உங்களுடையதாக இருக்கும். எனவே அந்த சர்வே எண்களின் முன்/பின் தொடர்ச்சி சர்வே எண்களை tnreginet என்கின்ற இணையதளத்தில் போய் எந்த மாவட்டம்/ எந்த சார்பதிவாளர் அலுவலகம் என்பதை குறிப்பிட்டு, கிராமம்/வார்டு/பிளாக் ஆகியவற்றை உள்ளீடு செய்து வில்லங்க சான்றிதழ்களை தேடுங்கள்.

அங்கு நீங்கள் எதிர்பார்த்தது போலவே, உங்கள் அப்பா, அம்மா, பாட்டி அல்லது தாத்தா பெயரில் உள்ள தொலைந்து போன சொத்து விபரங்கள் இருக்கும். அப்படி இல்லாவிட்டால் பக்கத்தில் உள்ள சொத்து உரிமையாளர்களின் ஆவணத்தை ஒரு நகல் கேட்டுப் பெறுங்கள். இதன் மூலம் சொத்து ஆவண எண்ணையும்/ வருடத்தையும் கண்டுபிடித்துவிட்டால் சார்பதிவாளர் அலுவலகம் சென்று ஆவண எண்ணையும்/வருடத்தையும் அங்குள்ள பத்திர எழுத்தாளர்களிடம் சொல்லி அந்த சொத்து ஆவணத்தின் நகலை தருவார்கள். பெரிய அளவில் எல்லாம் பணம் செலவாகாது. ஆனால் கொஞ்சம் அலைய வேண்டியதிருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+