புழல் சிறையில் செந்தில் பாலாஜி.. சிக்கன் முதல் கட்டில் வரை.. முதல் வகுப்பில் என்னென்ன கிடைக்கும்?
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையில் முதல் வகுப்பு கிடைக்கும். அத்துடன் அவருக்கு சிகிச்சையும் கிடைக்கும். சிறையில் முதல் வகுப்பில் உள்ள செந்தில் பாலாஜிக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்த அன்று அதிகாலையே உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சோதனை செய்த போது அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவ விஷயங்கள் ஒருபுறம் எனில் கைதான சில நாட்களிலேயே அவர் நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற காவலில் இருந்த செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க முடியாத நிலை இருந்தது. இது ஒருபுறம் எனில் அவ்வப்போது செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வந்தது.
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் வரும் ஜூலை 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 14 நாட்களுக்கு ஒருமுறை காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டார் என்று கூறி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பினை அளித்தது.
பின்னர் மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல என்றும், செந்தில் பாலாஜியை கைது செய்தது மற்றும் நீதிமன்றக் காவல் ஆகியவை சட்டப்பூர்வமானது என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில் அடுத்தகட்டமாக அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டு வருகிறது.இந்தசூழலில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று மாலை சென்னை காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், நீதிமன்ற உத்தரவுப்படி அவர் உடனடியாக புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறையில் செந்தில் பாலாஜிக்கு முதல் வகுப்பு அறை ஒதுக்கப்படுகிறது. அமைச்சர் மற்றும் எம்எல்ஏ என்பதால் அவருக்கு சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. சிறையில் செந்தில் பாலாஜிக்கு தேவையான சிகிச்சையும் வழங்கப்படும்.
A கிளாஸ் கொடுக்கப்பட்ட ஒரு கைதிக்கு சிறையில் என்ன கிடைக்குமோ அந்த வசதிகளே செந்தில் பாலாஜிக்கு கிடைக்கும். ஒரு மனிதனுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் தான் ஏ கிளாஸ் கைதிகளுக்கு கிடைக்கும். கட்டில், தலையணை, கூடுதல் லைட், படிப்பதற்குப் பத்திரிகை, மருத்துவரின் பரிந்துரைப்படி உணவு ஆகியவை கிடைக்கும். மற்ற சிறைவாசிகளுடன் ஒப்பிடுகையில் கொஞ்சம் வசதியும், பிரைவேசியும் இருக்கும். பொதுவாக சிறையில் யார் இருந்தாலும் அவர்களின் உறவினர்கள் வாரம் இரண்டு நாட்கள் போய் பார்க்கும் போது பழங்கள் மற்றும் சிறுதீனிக்களை வழங்க முடியும்.மற்றபடி சிறை சாப்பாடு என்பது எல்லாருக்கும் பொதுவானது.
சிறையில் உணவு முறை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் மாற்றப்பட்டது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சென்னையில் உள்ள புழல் மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு இந்தப் புதிய உணவு முறை மற்றும் உணவின் அளவினை மாற்றி அமைக்கும் திட்டம் கடந்த ஜூன் 5ம் தேதி அன்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.
இதன்படி, முன்பு 'பி' வகுப்பு சிறைவாசிகளுக்கு ஒரு நாளைக்கு 96.38 ரூபாய் உணவிற்காக செலவானது. இப்போது 135.26 ரூபாய் செலவில் உணவு வழங்கப்படுகிறது. அதேபோல், 'ஏ' பிரிவு சிறைவாசிகளுக்கு முன்னதாக 146.44 ரூபாய் ஆக இருந்தது. தற்போது அது 207.89 ரூபாய் உணவிற்காக செலவிடப்படுகிறது.
'பி' பிரிவு சிறைவாசிக்கு காலை 6.30 மணிக்கு தேநீர், காலை 7 மணிக்கு கோதுமை உப்புமா மற்றும் அதன் உடன் இரண்டு வகையான சட்னி, பொங்கல் உடன் சட்னி, தக்காளி சாதம் - முட்டை, லெமன் சாதம், புதினா சாதம் என பரிமாறப்படுகிறது. பின்னர், காலை 11.30 மணிக்கு சாப்பாடு, குழம்பு, ரசம், பொறியல், வாரத்தில் ஞாயிறு மற்றும் புதன்கிழமை அன்று கோழிக்கறி வழங்கப்படுகிறது. இதனையடுத்து மாலை 3 மணிக்கு தேநீர், சுண்டல் மற்றும் வேர்க்கடலை போன்றவை வழங்கப்படுகிறது.தொடர்ந்து, மாலை 4.30 மணியளவில் இரவு உணவாக சப்பாத்தி, சாப்பாடு மற்றும் சாம்பார் ஆகியவை வழங்கப்படுகிறது. ஏ பிரிவு சிறைவாசிகளுக்கு ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் கோழிக்கறி உடன் உணவு வழங்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் மருத்துவமனையில் இருந்த காலம் நீதிமன்ற காவலில் இருந்த காலமாக கருதக்கூடாது என்ற அமலாக்கத்துறையின் வாதத்தை உயர்நீதிமன்றம் ஏற்றுள்ளதால்,அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று முதல் தான் சிறையில் இருக்கும் காலமாக கருதுவார்கள்.
வழக்கமாக சிறையில் சில நாட்கள் கழிந்த பின்னர் ஜாமினுக்கு விண்ணப்பிக்கலாம். அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால், நிபந்தனைகளுடன் விடுவிக்கப்படலாம். அமலாக்கத்துறை விசாரணைகளை முடித்துவிட்டால் மட்டுமே ஜாமினில் விட அனுமதிக்கும். எனவே என்ன நடக்கும் என்பது இனிமேல் தான் தெரியும்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்!












Click it and Unblock the Notifications