Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீட்டுக்கடன் வாங்குவது லாபமா.. நஷ்டமா.. பொதுமக்களின் கருத்துக்கள் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டுக்கடன் வாங்குவது லாபம் இல்லை.. என்பது சில பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது. வீட்டுக்கடன் வாங்குவது லாபமா.. நஷ்டமா.. பொதுமக்களின் கருத்துக்கள் என்ன என்பதை பார்ப்போம்.

வீட்டுக்கடன் வாங்குவது லாபம் இல்லை.. வங்கிகள் முதல் ஐந்து வருடத்திலேயே நிறைய வட்டியை வசூலித்துவிடுவார்கள். அதன்பிறகே அசல் கழியும் என்றும் பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள். வீட்டுக்கடனில் போடும் பணத்தை மியூட்சுவல் பண்டில் போட்டு வைத்தால் குறிப்பிட்ட சில ஆண்டுகளிலேயே வீடுகள் கட்டலாம் என்றும் பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள்.

Lets see what the publics opinion is about whether buying a home loan is a profit or a loss

ஆனால் யதார்த்தம் என்ன என்பது குறித்து பொதுமக்கள் பலர் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்களின் கருத்துக்களை சிலவற்றை பார்ப்போம்.

டீக்கடை என்ற பெயரில் ட்விட்டர்வாசி வெளியிட்டுள்ள பதிவில், "வங்கி கடன் இல்லாமல் வீடு கட்ட முடியுமா? என்று கேட்கிறார்கள். முன்னர் அப்படித்தான் கட்டினார்கள். கொஞ்சம் பணம் சேர்த்து, 15-20 ஆண்டு கழித்து, எங்கு நகரமாகுமோ அங்கே விலை மலிவாக 10-12 சென்ட் வாங்கி, அங்கே கொஞ்சம் மரங்கள் வளர்க்க வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் முடிந்த அளவு கொஞ்சம் பணம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

15-20 வருடம் கழித்து, நாலு சென்ட் நமக்கு வைத்துக் கொண்டு, மீதத்தை விற்று விட வேண்டும். அப்போது நல்ல விலைக்குப் போகும். அந்த பணம் வீடு கட்ட போதும். மரங்களையும் உபயோகப்படுத்தி கொள்ளலாம்." என்றார்.

சக்திவேல் கவுண்டர் என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், 2005 நான் சென்னையில் அப்பார்ட்மெண்ட் வாங்கும் போது விலை 25 லட்சம். Fresher LPA 2 to 2.5 இருந்தது. இப்போது அதன் விலை 80 லட்சம். Fresher LPA 3 to 4 ஆக உள்ளது. இன்றைய நிலையில் உயர் நடுத்தர வர்க்கத்தினருக்கோ அல்லது பணக்காரர்களுக்கோ மட்டுமே வீட்டுவசதி கிடைக்கும்!! அரசுகள் சிந்திக்க வேண்டிய ஒன்று. TNHB மலிவு விலை வீடுகளுக்கு தனியாருடன் இணைந்து திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றார்.

கோபாலகிருஷ்ணன் என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், 35+ல் வீட்டு கடன் எடுத்தால், குழந்தைகள் கல்விக்கான சேமிப்பு குறைந்துவிடும். வாழ் நாள் முழுக்க கடன் கட்டுவது போன்று , சலிப்பு வந்துவிடும். குறைந்தபட்சம் 25-30 லே வீட்டுக்கடன் தொடங்கிடவேண்டும். 35 வயதில் வீட்டுக்கடன் வாங்குவது பெரிய ரிஸ்க் ஆக இருக்கும் என்றார்.

வெங்கட் என்பவர் கூறுகையில், கடன் வாங்கி முதல் வீடு / ஃப்ளாட் நிச்சயம் நல்லதுதான். ஃபைனான்ஸ் பேசுறது எல்லாம் அடுத்தது, மிடில் க்ளாஸ்க்கு சொந்த வீடு தர்ற மன நிம்மதி வேற எதுலயும் வராது, அந்த வீட்டை விட இருமடங்கு அதிக பேங்க் பேலன்ஸ் கூட.. என்று கூறியுள்ளார்.

பிரம்மச்சாரி என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், வீட்டுக்கடன் வாங்கி வீடு கட்றது நல்லது. யாருக்கு? அவ்வளவு பணம் கைவசம் இல்லாதவர்களுக்கு.ஆனா, 20-30 வருசம் எடுக்கக்கூடாது. 7-8 வருசத்துக்குள்ள அட்வான்ஸா கட்டி முடிச்சா லாபம். 20-30 வருசம் கடனை கட்டினா , நீங்க வாங்கின லோனை விட இன்னொருமடங்கு வட்டி கட்டனும் என்று கூறியுள்ளார்.

ஜீயர் என்பவர் கூறுகையில், 30 வருடங்கள் தவணையில் வீடு கட்டியிருக்கிறோம். மாத தவணை 30000 ரூ, வீட்டு வாடகை 15000 ரூ
கடனால் வருமானம் வரி குறைவு மாதம் 10000 ரூபாய்..அதனால் லாபம் என்று தெரிவித்துள்ளார்.

தப்புக்கணக்கு என்ற பெயரில் உள்ளவர் கூறுகையில், 30 வருஷ லோன 40% மக்கள் 10 வருசத்துக்குள்ளாகவும் மீதி பெரும்பாலான மக்கள் 15-20 வருசத்துக்குள்ள கட்டிடுறாங்க.. வெகு சிலரே 30 வருஷம் கட்றாங்க.. லோன் வாங்கும் போது இருக்க பொருளாதார நிலை வருடங்கள் ஓட ஓட கண்டிப்பா மேலோங்கும்.. தெரிஞ்ச பலர் ரெண்டாவது வீடு எல்லாம் வாங்கிட்டாங்க..என்று கூறியுள்ளார்.

தண்டபாணி என்பவர் கூறுகையில், "முதல் வீடு வீட்டுக் கடன் வாங்கி கட்டலாம். எவ்வளவு சீக்கிரம் அடைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அடைத்து விடுவது நல்லது. வீட்டு வாடகைக்கு ஆசைப்பட்டு கடன் வாங்கி இரண்டாவது வீடு கட்டுவது தவறு. மொத்தமாகப் பார்த்தால் அதில் பெரிய இலாபம் இருக்காது" என்று கூறியுள்ளார்.

அசோகன் என்பவர் கூறுகையில், எவ்வளவு கடன் வாங்கினாலும் மாதாமாதம் கட்ட வேண்டிய தவணைத் தொகையை விட 10% அதிகம் கட்டுங்கள். 15000 இஎம்ஐ என்றால் 16500 கட்டுங்கள். வீட்டுக்கடன் ஒரு சுமையாகவே இருக்காது என்று தெரிவித்துள்ளார். இதேபோல் பல நெட்டிசன்கள் கருத்து என்னவென்றால், சொந்து வீடு வாங்க வேண்டும்என்பதற்காக கடன் வாங்குவது தவறு இல்லை... ஆனால் கடன் வாங்கி வீடுவாங்கிஅதனை வாடகைக்கு விடலாம் என்று நினைத்தால் அது தவறாக முடியுமாம்..

அதேபோல் வீட்டுக்கடனில் பணத்தை முதலீடு செய்தால் வீடு கிடைக்கும். ஆனால் இது மட்டும் இல்லை என்றால் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கண்ட இடங்களில் வாழ்க்கையை தொலைத்து விடுவார்கள்.. எனவே வீட்டுக்கடன்விஷயத்தில் தவறான பார்வையை ஏற்படுத்த வேண்டாம் என்பதே பல மக்களின் கருத்தாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+