பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு.. பிடிஆர் பேசுவதற்கு முன்பே அதிமுக அமளி.. சட்டசபையில் இருந்து வெளிநடப்பு
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் தாக்கலின் போது அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
Recommended Video
தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக இ பட்ஜெட்டை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இ பட்ஜெட் என்பதால் இன்று அவையில் காகிதங்கள், கோப்புகள் எதுவும் பயன்படுத்தப்படாமல் முழுக்க முழுக்க சட்டசபை கணினிமயமாக்கப்பட்டு இருந்தது.
இதற்காக அவையில் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் எல்லோருக்கும் கணினி கொடுக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொருவரின் இருக்கைக்கு முன்பு கணினிகள் பொருத்தப்பட்டு இருந்தது.

ஏற்பாடு
இன்று அவை தொடங்கியதும் முதலில் சபாநாயகர் அப்பாவு இ பட்ஜெட் குறித்த விவரங்கள் வெளியிட்டார். நிதி நிலை அறிக்கையை கணினியில் எவ்வாறு இயக்குவது என்று சபாநாயகர் விளக்கமளித்தார். பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது அதன் நகல்கள் அங்கு இருக்கும் செய்தியாளர்களுக்கு வழங்கப்படும். ஆனால் இது இ பட்ஜெட் என்பதால் இந்த முறை பட்ஜெட் விவரங்கள் பெரிய திரையில் செய்தியாளர்களுக்கு ஒளிபரப்பப்பட்டது.

திருக்குறள்
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு, என்று திருக்குறளை கூறி நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஆனால் இவர் பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்குவதற்கு முன்பே அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக அதிமுகவினரை பேச அனுமதிக்க வேண்டும். எங்களின் கருத்துக்களை சொல்ல அனுமதிக்க வேண்டும் என்று அதிமுகவினர் கோரிக்கை வைத்தனர்.

அனுமதி வேண்டும்
எங்களை பேச அனுமதித்துவிட்டு பட்ஜெட்டை தாக்கல் செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்து அதிமுகவினர் அமளியில் ஈடுப்பட்டனர். ஆனால் சபாநாயகர் அப்பாவு, நீங்கள் எல்லோரும் அமளியில் ஈடுபடாமல் அமைதியாக இருங்கள். முதலில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படட்டும். பட்ஜெட் தாக்கலுக்குப்பின் எல்லோருக்கும் பேச அனுமதிக்கிறேன்.

வெளிநடப்பு
இப்போது அமளியில் ஈடுபட வேண்டாம் என்று கூறினார். ஆனால் இதை கேட்காமல் அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் அப்பாவு தொடர்ந்து அமருங்கள், அமைதியாக இருங்கள் என்று கூறினார். ஆனால் தொடர்ந்து பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications