இன்னும் ரெண்டு வருஷம் தான் முடிஞ்சிடும்..அதள பாதாளத்தில் ஆவின்!முதல்வர் ஸ்டாலினுக்கு பறந்த கடிதம்..!
சென்னை: 1900 கோடி ரூபாய் வரை பெரும் நிதியிழப்பு எனும் கடலில் மூழ்கி, அடுத்த இரண்டாண்டுகளில் மூடுவிழா நோக்கி ஆவின் இருக்கும் நிலையில், அதிரடி நடவடிக்கை எடுத்து ஆவினை காப்பாற்றிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் நலச் சங்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளது.
சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி எழுதியுள்ள அந்த கடித்தத்தில்," முன்னணி இணையதள செய்தி ஊடகமான Oneindia tamil "250 கோடி இழப்பு? திணறும் ஆவின்! 3 ரூபாய் விலை குறைப்பு தந்த விளைவு? கால் பதிக்கிறதா அமுல்? என்கிற தலைப்பில் வெளியிட்டிருக்கும் செய்தியின் சாரம்சம் உண்மை தான்..

அந்த செய்தி தொடர்பாக விரிவான அறிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சமர்ப்பிக்க கடமைப்பட்டுள்ளது.
ஏனெனில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்த உடன் முதல் கையெழுத்தாக ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 3.00ரூபாய் விலை குறைப்பு செய்து அமுல்படுத்தியதால் ஆவின் நிறுவனத்திற்கு நாளொன்றுக்கு சுமார் 90லட்சம் ரூபாய் வீதம் (சராசரியாக 30லட்சம் லிட்டர்) ஆண்டுக்கு சுமார் 328.5கோடி ரூபாய் வீதம் கடந்த 37மாதங்களில் சுமார் 1013கோடி ரூபாய் இழப்பாகும். இந்த இழப்பை மாநில அரசு மானியமாக ஆவினுக்கு வழங்கியிருக்க வேண்டும். மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டத்தால் போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசு மானியமாக வழங்கி ஈடுசெய்யும் போது பால் விற்பனை விலை குறைப்பால் ஏற்பட்டுள்ள சுமார் 1013கோடி ரூபாய் இழப்பை ஈடுசெய்ய அரசு தரப்பிலிருந்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாகவோ அல்லது ஆவின் தரப்பிலிருந்து அரசிடம் மானியம் கோரியதாகவோ தெரியவில்லை.
அதுமட்டுமின்றி முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் நாசரின் திறனற்ற நிர்வாகத்தால் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நிறைகொழுப்பு பால் விற்பனை விலையை மட்டும் (அதுவும் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு விலை உயர்வு கிடையாது) லிட்டருக்கு 12.00ரூபாய் உயர்த்தி விட்டு பச்சை, நீல நிற பால் பாக்கெட்டுகள் விற்பனை விலையை உயர்த்தாமல் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3.00ரூபாய் உயர்த்தி வழங்கிய வகையில் தற்போது வரை 19மாதங்களில் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 81லட்சம் வீதம் (சராசரியாக பால் கொள்முதல் 27லட்சம் லிட்டர்) சுமார் 480கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு என்கிறது விபரம் அறிந்த ஆவின் வட்டாரம்.
மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பால் கொள்முதல் அளவை விட தற்போதைய திமுக ஆட்சியில் ஆவினுக்கான பால் கொள்முதலை திட்டமிட்டு குறைத்ததால் நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk), நிறைகொழுப்பு பால் (Full Gream Milk) உற்பத்திக்கு தேவையான கொழுப்பு சத்து மற்றும் திடசத்து கையிருப்பு இல்லாமல் போன காரணத்தால் வடமாநிலங்களில் இருந்து வெண்ணெய் மற்றும் பால் பவுடர் கொள்முதல் செய்து அதன் மூலம் கொழுப்பு சத்து மற்றும் திடசத்து ஈடுசெய்யப்பட்டு பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதால் ஆவின் நிறுவனத்திற்கு லிட்டருக்கு 15.00ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் இதனால் மட்டும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் சுமார் 500கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படும் நிலையில் ஆவின் நெய், வெண்ணெய் உற்பத்தி முற்றிலுமாக சரிவடைந்து அதன் மூலம் கிடைக்கக் கூடிய பல நூறு கோடி ரூபாய் வருமானமும் வராமல் நின்று போனது.
அதிலும் ஆவினில் 40ஆண்டுகளுக்கு மேலாக விற்பனையில் இருந்து வந்த பச்சை நிற பால் பாக்கெட்டுகள் விற்பனையை நிறுத்தி விட்டு அதற்கு பதிலாக அதே விற்பனை விலை கொண்ட வைலட் நிற ஆவின் டிலைட் பால் பாக்கெட்டினை பசும்பால் எனக்கூறி அதன் விநியோகத்தை சென்னையில் உள்ள பால் முகவர்களுக்கு கட்டாயப்படுத்திய போது பிரச்சினை எழுந்த சமயம் ஆவின் நிறுவனம் சுமார் 910கோடி ரூபாய் இழப்பில் செல்வதால் அதனை ஈடுசெய்ய புதிய வகை பாலினை அறிமுகம் செய்திருப்பதாக நிர்வாக இயக்குனர் திரு வினித் ஐஏஎஸ் அவர்கள் ஒரு அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தது இங்கே கவனிக்கத்தக்கது.
அதுமட்டுமின்றி கடந்த டிசம்பர் மாதம் 18ம் தேதி முதல் ஆவினுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு 3.00ரூபாய் ஊக்கத்தொகை வழங்கிய வகையில் நாளொன்றுக்கு சுமார் 81லட்சம் வீதம் (சராசரியாக பால் கொள்முதல் 27லட்சம் லிட்டர்) 5.5மாதங்களில் மட்டும் சுமார் 133கோடி ரூபாய்க்கு மேல் இழப்பாகும். இதை மாநில அரசு தரப்பிலிருந்து மானியமாக வழங்கப்படும் என கூறியிருந்த நிலையில் அது அரசு தரப்பிலிருந்து வழங்கப்பட்டதா..? அவ்வாறு அரசு தரப்பிலிருந்து வழங்கப்பட்டிருந்தால் மாவட்ட வாரியாக வழங்கப்பட்ட ஊக்கத்தொகை எவ்வளவு..? என்பதை ஆவின் நிர்வாகம் வெளிப்படைத்தன்மையோடு தெரிவிக்க வேண்டும்.
ஆக மொத்தம் தமிழ்நாட்டில் 2021ல் திமுக அரசு அமைந்த பிறகு கடந்த 37மாதங்களில் மட்டும் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் சுமார் 1900கோடி ரூபாய்க்கு மேல் இழப்பை சந்தித்து ஓட்டை விழுந்த கப்பல் நடுக்கடலில் தள்ளாடுவது போல் பால் வழங்கிய விவசாய பெருமக்களுக்கான கொள்முதல் தொகை, பால் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான வாடகை, ஊழியர்களுக்கான கொரோனா கால சிறப்பு ஊதியம், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்டவற்றை வழங்கிட முடியாமல் கடும் நிதியிழப்பில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
இதனால் தான் முறுக்கு, மிக்சர், பிஸ்கெட், நூடுல்ஸ், கேக் போன்ற பாலுக்கு தொடர்பில்லாத பொருட்களை தனியாரோடு கூட்டு சேர்ந்து ஆவின் பெயரை வைத்து வணிகம் செய்ய முயல்வதோடு அதற்காக பால் முகவர்களையும் ஆவின் நிர்வாகம் வலுக்கட்டாயப்படுத்தி வருகிறது. இதில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் மேற்கண்ட பொருட்களை விற்பனை செய்யாத ஆவின் மண்டல, வட்டார அலுவலர்களுக்கு சம்பளம் கிடையாது என மிரட்டப்படுவதாகவும், தங்களுக்குடைய சம்பளம் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே பால் முகவர்கள் அப்பொருட்களை வாங்கியாக வேண்டும் என ஆவின் மண்டல, வட்டார அலுவலர்கள் பால் முகவர்களை நிர்பந்திப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
எனவே திமுக அரசுக்கான ஆட்சி காலம் இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே மீதமுள்ள நிலையில் இனியேனும் ஆட்சியாளர்கள் உடனடியாக விழித்துக் கொண்டு ஆவினுக்கான பால் கொள்முதல் விலை, விற்பனை விலை, பால் விற்பனைக்கான கமிஷன் தொகை என மூன்றையும் ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்தக் கூடிய வகையில் சட்டமியற்றி, அதனை உடனடியாக அமுல்படுத்துவதோடு, 27 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களை போக்குவரத்து கழகங்களைப் போல் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு 5மண்டலங்களாக மாற்றி அமைத்து, அரசுக்கு தேவையற்ற வீண் விரய செலவுகளை ஏற்படுத்தும் பால்வளத்துறையையும், அத்துறையில் உள்ள மாவட்ட துணைப் பதிவாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர் இடங்களையும் ரத்து செய்து, பால் கொள்முதலை அதிகரிக்க தமிழ்நாட்டில் இதுவரை மூடப்பட்ட 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம அளவிலான பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பால் மொத்த குளிர்விப்பான் நிலையங்கள் (BMC), பால் குளிரூட்டும் நிலையங்கள் (MCC) ஆகியவற்றை மீண்டும் திறக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, ஆவின் நிர்வாகத்தை அரசியல் தலையீடு இன்றி தன்னாட்சி பெற்ற கூட்டுறவு பால் நிறுவனமாக சுதந்திரமாக செயல்பட அனுமதித்து, ஆவினில் அதிரடியாக நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொண்டால் மட்டுமே பெருந்தலைவர் கர்ம வீரர் காமராஜர் அவர்களால் தொடங்கப்பட்டு, பக்தவத்சலம், கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க முதலமைச்சர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் திராவிட மாடல் ஆட்சியில் முற்றிலுமாக அழிந்து விட்டது என்கிற பழிச் சொல்லுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆளாகமல் இருக்க முடியும் என்பதனை மிகுந்த கவலையுடனும், வருத்தத்தோடும், ஆவின் நிறுவனம் காப்பாற்றப்பட வேண்டும் என்கிற நல்லெண்ண அடிப்படையிலும், அதே சமயம் எச்சரிக்கை உணர்வோடும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் எடுத்துரைக்க கடமைப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்." என கூறப்பட்டுள்ளது. இந்த கடிதம் முதலமைச்சருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications