ஆட்டம்.. பாட்டம்.. LGBTQ+ மக்கள் உற்சாகம்.. சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற வானவில் சுயமரியாதை பேரணி!
சென்னை: LGBTIQA+ மக்கள் 'பிரைட்' மாதமாக கடைபிடிக்கும் ஜூன் மாதத்தையொட்டி, சென்னையில் இன்று 15வது தமிழ்நாடு சுயமரியாதை வானவில் பேரணி கோலாகலமாக நடைபெற்றது. இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
LGBTIQA+ மக்கள் தங்கள் பெருமைமிகு மாதமாக கருதும் ஜூன் மாதத்தில் பிரமாண்ட பேரணியினை உலகெங்கும் நடத்தி வருகின்றனர். LGBTIQA+ மக்கள் 'வானவில் கூட்டணி' என்ற பெயரில் அமைப்பு நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்களுடைய உரிமைகளை வலியுறுத்தி சென்னையில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானவில் சுயமரியாதை பேரணியை நடத்தி வருகின்றனர்.

அதன்படி இந்த ஆண்டுக்கான வானவில் சுயமரியாதை பேரணி சென்னையில் நடைபெற்றது. தங்களது உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி இந்தப் பேரணியை நடத்தினர். எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தொடங்கிய இந்தப் பேரணி சிந்தாதிரிப்பேட்டை லேங்க்ஸ் தோட்ட சாலை சந்திப்பில் நிறைவடைந்தது.
சென்னை மட்டுமின்றி, பிற மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் பலரும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். குறிப்பாக இந்த ஆண்டு இளம்பெண்கள் அதிகளவில் வந்திருந்தனர். ஏராளமான திருநங்கைகளும் ஆர்வத்துடன் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர். LGBTIQA+ மக்களின் பெற்றோர் சிலரும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.

ஆண் பெண் என்ற பாலின வேறுபாடுகளை விடுத்து தம் உணர்வுகளுக்கு தகுந்தாற்போல பல வண்ண ஆடை அணிந்து, சிகை அலங்காரம், முக அலங்காரம் செய்து பேரணியில் நடனமாடி மகிழ்ந்தனர். மேளம், தப்பு தாளம் முழங்க, ஆடிப்பாடி உற்சாகத்தில் திளைத்தனர்.
LGBTQ+ மக்கள் மட்டுமின்றி அவர்களின் உரிமைகளுக்காக போராடும் சமூக செயற்பாட்டாளர்களும் இதில் கலந்துகொண்டனர். 'எங்கள் பாலினம் எங்கள் உரிமை', 'எனது உடல் எனது உரிமை' போன்ற கோஷங்களை எழுப்பியவாறும், பதாகைகளை ஏந்தியவாறும் அவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

இந்தப் பேரணியில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. தங்கள் இருப்பை அங்கீகரித்து, உரிமையை நிலைநாட்ட அரசு பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications