சமூக நீதிக்கான உலகின் முதல் OTT தளம் "PERIYAR VISION" தொடக்கம்- முதல்வர் ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து
சென்னை: திராவிடர் இயக்க வரலாற்றில் புதிய முயற்சியாக சமூக நீதிக்கான உலகின் முதல் OTT தளம் "PERIYAR VISION-Everything for everyone" சென்னையில் தொடங்கப்பட்டது. சென்னையில் திராவிடர் கழகத் தலைமையகமான பெரியார் திடலில் தி.க. தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் "PERIYAR VISION-Everything for everyone என்கிற OTT தளம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த OTT தளத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
திரைப்படங்களுக்கா OTT தளத்தை நாம் அறிவோம். சமூக நீதிக்கான OTT தளத்தையும் இனி தெரிந்து கொள்வோம். "PERIYAR VISION- Everything for everyone" என்ற இந்த OTT தளம்தான் உலகின் முதல் சமூக நீதிக்கான தளமாகும்.

தி.க. தலைவர் கி.வீரமணி, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் இந்த OTT தளத்தைத் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் கனிமொழி எம்பி பேசுகையில், லிபர்ட்டி இன்று இந்த நாட்டில் யாருக்கும் இல்லாத சூழலில் இந்த திடலில்தான் அதை உருவாக்க முடியும் என்று நிரூபித்து உள்ளோம். அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் யாருக்கும் பேச்சுரிமை கிடையாது. சிந்தனை உரிமை கிடையாது எந்த லிபர்ட்டியும் கிடையாது. எல்லாருடைய லிபர்ட்டிக்காகவும் பாடுபட்ட பெரியார் கருத்துக்களை பதிவு செய்ய OTT தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது உலகத்திற்கே வழிகாட்டியாக இருக்கும் அற்புதமான செயல்.
மனிதர்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும், தலைமுறை தலைமுறையாக அடிமையாக இருந்த மனிதனை மனித நேயத்துடன் பார்த்த தலைவர் நிச்சயம் அறிவியலை நேசிக்கதான் செய்வார். இன்று வரை நகைச்சுவை என்ற பெயரில் பெண்களுக்கு சமைக்க தெரியுமா? என்பார்கள். என்னை, அருள்மொழியை பார்த்து கேட்பார்கள்.
பெண் என்றால் சமைக்க தெரிய வேண்டும் என்று இப்பொழுதும் உள்ளது. குழந்தைகள் வேண்டுமென்றால் பெற்றுக் கொள்வோம், எத்தனையோ குழந்தைகள் தாய், தந்தை இல்லாமல் உள்ளனர் என்று இப்போது சொல்லும் கருத்துகளை, எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் சிந்தித்து நமக்காக சொல்லித் தந்திருக்கக் கூடியவர் லட்சியங்கள் அடைய எதிர் தடையாக வந்தாலும் அதை உடைக்க சொன்னவர். மக்களிடையே இருந்த மூடநம்பிக்கைகளை உடைத்தெறிந்தவர் பெரியார் என்றார் கனிமொழி எம்பி.
மேலும் இன்றைய காலத்தின் தேவையான OTT தளமாக இந்த தளம் தொடங்கப்பட்டுள்ளது. கொள்கைக்காக உலகில் தொடங்கப்படும் முதல் ஓடிடி தளம் "PERIYAR VISION - (Everything for everyone)" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications