தென்னிந்தியர்கள் பணம் வேண்டாமா அப்போ? முழுவதுமாக இந்தியில் LIC வலைத்தள பக்கம்.. அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: LIC வலைத்தள பக்கம் முழுவதுமாய் இந்திக்கு (Default) மாற்றப்பட்டு உள்ளது. भाषा
என்பதை அழுத்தினால் மட்டுமே LIC பக்கம் ஆங்கிலத்துக்கு மாறும்படி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் இடையே இந்த விவகாரம் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் எல்ஐசி ஆகும். லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி) மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. எல்ஐசி என்பது.. பலருக்கு பாதுகாப்பு முதலீடாக.. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செய்யப்படும் முதலீடாக பார்க்கப்படுகிறது.

lic hindi

இதன் காரணமாகவே மார்ச் 2024 நிலவரப்படி ₹52.52 டிரில்லியன் (US$630 பில்லியன்) மதிப்பிலான சொத்துக்களை இந்த நிறுவனம் கொண்டு உள்ளது. இது இந்திய பன்னாட்டு பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமாகும்.

பொதுவாக தென்னிந்தியர்கள்.. வடஇந்தியர்களை விட சேமிக்கும் பழக்கம் அதிகம் கொண்டவர்கள். அது இயல்பாகவே தென்னிந்தியர்களிடம் உள்ளது. அதோடு பொருளாதார ரீதியாக தென்னிந்தியர்கள் முன்னேற்றம் அடைந்து உள்ளதால் சேமிப்பு பழக்கம் அதிகம் உள்ளது. அதேபோல் காப்பீட்டு திட்டங்களிலும் தென்னிந்தியர்களின் எண்ணிக்கையே அதிகம்.

பங்குச்சந்தை எப்படி வடஇந்தியர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறதோ அதேபோல் காப்பீட்டு திட்டங்கள் தென்னிந்தியர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாக இது இருப்பதால்தான் 245 க்கும் மேற்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் வருங்கால வைப்பு சங்கங்கள் இதில் இணைக்கப்பட்டு உள்ளன. எல்ஐசி 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி 290 மில்லியன் பாலிசிதாரர்களை கொண்டு உள்ளது. இதன் மொத்த ஆயுள் நிதி ₹28.3 டிரில்லியன் மற்றும் 2018-19 ஆம் ஆண்டில் விற்கப்பட்ட பாலிசிகளின் மொத்த மதிப்பு ₹21.4 மில்லியன் ஆகும்.

உலகில் ஒரு நிறுவனம் இவ்வளவு பாலிசிதாரர்களை கொண்டு உள்ளது இதுவே முதல்முறை. இப்படிப்பட்ட நிலையில்தான் LIC வலைத்தள பக்கம் முழுவதுமாய் இந்திக்கு (Default) மாற்றப்பட்டு உள்ளது. अंग्रेज़ी
என்பதை அழுத்தினால் மட்டுமே LIC பக்கம் ஆங்கிலத்துக்கு மாறும்படி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் இடையே இந்த விவகாரம் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்னிந்தியர்கள் பல ஆயிரங்களை மாதம் மாதம் முதலீடு செய்தும்.. இந்த பக்கம் முழுவதையும் இந்திக்கு மாற்றி உள்ளது எல்ஐசி. சமூக வலைத்தளங்களில் இதை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

எல்ஐசி அவர்களின் இணையதளத்தை புதுப்பித்து, அனைத்தையும் ஹிந்தியாக்கி உள்ளது. உங்களுக்கு ஹிந்தி படிக்கத் தெரியாவிட்டால், இந்த இணையதளத்தைப் பயன்படுத்த முடியாது. ஆங்கிலத்திற்கு மாறுவதற்கான விருப்பம் கொடுக்கப்பட்டிருந்தாலும், அது ஏதோ ஒரு மூலையில் மறைக்கப்பட்டுள்ளது, அதைக் கண்டுபிடிக்க இந்தியில் "भाषा" என்று உள்ளதை கிளிக் செய்ய வேண்டும். ஆனால் அதற்கும் இந்தி தெரிந்திருக்க வேண்டும்.

ஆங்கிலம் இயல்பு மொழியாக இருந்த பழைய இணையதளத்தில் என்ன நடந்தது? இந்தி பேசாத மாநிலங்களின் குடிமக்களுக்கு நீங்கள் சேவை செய்ய விரும்பவில்லையா? என்று கேரளா காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது, அதேபோல் நெட்டிசன்கள் பலரும் உங்களுக்கு தென்னிந்தியர்கள் பணம் வேண்டாமா அப்போது ? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதுவரை இது தொடர்பாக எல்ஐசி எதுவும் விளக்கம் அளிக்கவில்லை. பல தென்னிந்தியர்கள் கணக்கு வைத்துள்ள எல்ஐசி இப்படி இந்திக்கு மாற்றப்பட்டதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று கமெண்ட் செய்யுங்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+