எல்ஐசி இன்சூரன்ஸ்.. LIC பாலிசிதாரர்கள் கவனிங்க.. இதை பற்றி இப்பவே புகார் தரணுமாம்.. எல்.ஐ.சி. அதிரடி
சென்னை: சமூக ஊடக தளங்களில் மோசடியான விளம்பர நடைமுறைகளில் ஈடுபடும் சில தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் எனப்படும் எல்ஐசி நிறுவனம் பொதுமக்களை எச்சரித்திருக்கிறது.. இது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.
அரசின் பொதுத்துறை நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (Life Insurance Corporation - LIC) நிறுவனம், பொதுமக்களின் நன்மை கருதி, பல்வேறு காப்பீடுகளை வழங்கி கொண்டிருக்கிறது.. அத்துடன், பல பல திட்டங்களுக்கு, புதுபுது சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு தந்து வருகிறது.

எல்ஐசி நிறுவனம்: இந்நிலையில், நேற்யை தினம், எல்ஐசி நிறுவனத்தின் பெயரில், "போலி விளம்பரங்கள்" இணையத்தில் வெளியாகி, பொதுமக்களை மோசடியில் ஏமாற்றும் வேலையும் நடப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தது.
எல்ஐசியின் பெயர், அதன் இலச்சினை போன்றவற்றை சமூக ஊடகங்களில் அச்சுஅசலாக பதிவிட்டு, "எல்ஐசி நிறுவனம்" தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரம் போலவே, போலியான விளம்பரங்கள் பரப்பப்படுகிறதாம். இதையடுத்து, எல்ஐசி நிறுவனம் அந்த போலி நிறுவனங்களையும் கடுமையாக எச்சரித்திருந்தது.
மூத்த அதிகாரிகள்: "எல்ஐசி பாலிசிதாரர்களும் மக்களும் இதுபோன்ற போலியான விளம்பரங்களின் உண்மை தன்மையை பரிசோதித்துவிட்டு அதன்பின் செயல்பட வேண்டும்.. எல்ஐசி நிறுவன மூத்த அதிகாரிகளின் பெயர்களும் இந்த மோசடி விளம்பரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே மக்கள் யாரும் இவற்றை நம்பி ஏமாற வேண்டாம். இத்தகைய மோசடி நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எல்ஐசி அறிவித்திருந்தது.
இதனிடையே மற்றொரு அறிவிப்பையும் எல்ஐசி அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது. அதில் உள்ளதாவது: "சில தனிநபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள், எங்கள் மூத்த அதிகாரிகள் மற்றும் முன்னாள் அதிகாரிகளின் படத்தையும், எங்கள் பிராண்ட் லோகோ மற்றும் எங்கள் பிராண்ட் பெயரையும் எல்ஐசியின் அனுமதி இன்றி தவறாகப் பயன்படுத்தி பல்வேறு சமூக ஊடக தளங்களில் மோசடியான விளம்பர நடைமுறைகளில் ஈடுபடுகிறார்கள்.
நிறுவனம்: இவை தொடர்பான புகார்கள் எங்கள் கவனத்திற்கு தொடர்ச்சியாக வந்துள்ளன. இவை முற்றிலும் மோசடியானவை. எல்ஐசி நிறுவனம் எவருக்கும் இது போன்ற அங்கீகாரத்தை வழங்கவில்லை. இந்த ஏமாற்று நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களை எச்சரிக்கவும் விரும்புகிறோம்.
எல்ஐசியின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகளில் இதுபோன்ற மோசடியான விளம்பரங்களின் இணைய இணைப்புகளைப் புகாரளிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம். அங்கீகாரம் இன்றி எங்கள் பிராண்டைப் பயன்படுத்தி மோசடி செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நாங்கள் உரிய சட்ட நடவடிக்கை எடுப்போம்.
கோரிக்கை: இவற்றுடன் பாலிசிதாரர்கள் மற்றும் பொதுமக்கள் இது போன்ற ஏமாற்றும் நடைமுறைகளால் தவறாக வழிநடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளுமாறும் எல்ஐசி கோரிக்கை விடுத்துள்ளது" என்றும் எல்ஐசியின் அதிகாரபூர்வ பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications