நல்ல செய்தி.. எல்ஐசியின் புதிய ஜீவன் சாந்தி திட்டத்தில் அசத்தல் அறிவிப்பு! ஓய்வூதியம் விகிதம் உயர்வு
சென்னை: எல்ஐசியின் புதிய ஜீவன் சாந்தி பாலிசியில் வருடாந்திர பென்ஷன் விகிதங்கள் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளன. மட்டுமல்லாது அதிக கொள்முதல் விலைக்கான ஊக்கத்தொகையும் உயர்த்தப்பட்டிருக்கிறது.
எல்ஐசி நாட்டின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் சார்பில் அடிக்கடி சில ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டதுதான் 'ஜீவன் சாந்தி' பாலிசி. இந்த பாலிசியில் இணைவதற்கு குறைந்தபட்சம் 30 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 79 ஆகும். சுயமாக தொழில் செய்பவர்கள், சமூக பாதுகாப்பான வேலையில் இல்லாதவர்கள் ஆகியோருக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தற்போதைய சூழலில் நாடு முழுவதும் சமூக பாதுகாப்பான வேலை என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. எல்லோருக்கும் வேலை இருக்கும். ஆனால் அந்த வேலை நிச்சயமற்றதாக இருக்கும். யார் எப்போது வேலையிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பது தெரியாது. இந்நிலையில், இந்த திட்டம் அனைவருக்கும் பொருந்தும் என்றே சொல்லாம். அதேபோல இந்த திட்டத்தில் இரண்டு பேரும் சேர்ந்து முதலீடு செய்யலாம்.
மாதத்திற்கு ரூ.1,000லிருந்து முதலீட்டு தொகை தொடங்குகிறது. குறைந்தபட்சம் வாடிக்கையாளர்கள் ரூ.1.5 லட்சம் பிரிமியம் தொகையை கட்டியிருக்க வேண்டும். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் கட்டலாம். அதேபோல நீங்கள் கட்டும் மொத்த தொகைக்கு ஏற்பவாறு உங்களுக்கு கிடைக்கும் பணமும் வேறுபடும். அதாவது நீங்கள் ரூ.1.5 லட்சம் கட்டுகிறீர்கள் எனில் உங்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கிடைக்கும். அதே நீங்கள் ரூ.10 லட்சம் கட்டுகிறீர்கள் எனில் உங்களுக்கு மாதம் ரூ.11,192 கிடைக்கும். இதே நீங்கள் இணையாக இந்த திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள் எனில் மாதம் ரூ.10,576ஐ பெறாலம்.
ஆனால் இந்த தொகை அனைத்தும் நீங்கள் முதலீடு செய்யும் தொகையை பொறுத்து மாறுபடும். ஒய்வுக்கு பின்னர் உங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த தொகை உங்களுக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும். உயிருடன் இருக்கும் வரை உங்களுக்கு ஓய்வுவூதியமும், இறந்த பின்னர் இறப்புகான தொகை உங்கள் வாரிசுகளுக்கும் கிடைக்கும். இத்துடன் இந்த கணக்கு முடித்துக்கொள்ளப்படும். அதாவது பாலிசிதாரர் உயிரிழந்த பின்னரும் அவரது குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்கப்படமாட்டாது. அதே போல இந்த முதலீட்டு தொகை மாதம் மாதமும் கட்டலாம் அல்லது 3,6 மற்றும் 12 மாதத்திற்கு ஒரு முறை என்றும் கட்டலாம்.
இந்த திட்டத்தில் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில், இந்த திட்டத்தில் லோன் வேண்டும் எனில் பெற்றுக்கொள்ளலாம். அதாவது திட்டத்தில் பணம் செலுத்த தொடங்கிய மூன்று மாதங்களில் இந்த லோனை பெற்றுக்கொள்ளலாம். இப்படி வழங்கப்படும் லோன் என்பது ஒட்டுமொத்த ஆண்டு தொகையில் 50%க்கு மிகாமல் இருக்கும். அதேபோல முதலீடுக்கு வரி பிடித்தம் இருக்கும். எனவே இது குறித்து விரிவான விவரங்களை கேட்டு பெற அருகில் உள்ள எல்ஐசி அலுவலகத்தையோ அல்லது எல்ஐசி முகவரையோ அணுக வேண்டும் என்று எல்ஐசி தெரிவித்திருக்கிறது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications