LIC யின் இந்தி.. இதெல்லாம் டெக்னிக்கல் கோளாறு இல்லை, அரசியல் கோளாறு.. பாஜகவை சாடிய சு. வெங்கடேசன்
சென்னை: எல்.ஐ.சி.யின் இணையதள மொழித் தெரிவில் இந்தி ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக மராத்தி சொருகப்பட்டுள்ளது. இது, மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்காக மராத்தியை நுழைக்க நடந்துள்ள ஏற்பாடு என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் காட்டமாக கூறியிருக்கிறார்.
இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. நிறுவனத்தின் வெப்சைட் பக்கம் கடந்த சில தினங்களுக்கு முன்பு, இந்தி மொழியில் செயல்பட்டு வந்தது.

ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி இணையதளம் முழுவதுமாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்டதால் வாடிக்கையாளர்கள் கடும் குழப்பமும், அதிருப்தியும் அடைந்தனர். எல்ஐசி இணைய பக்கத்தை பயன்படுத்த பயனாளர்கள் சிரமத்துக்கும் ஆளானார்கள்.
கடும் கண்டனம்: இதையடுத்து, இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். மறைமுகமாக இந்தி திணிப்பில் மத்திய அரசு ஈடுபடுவதாக தமிழக தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்..
பிறகு, அன்றைய தினம் மாலையில் தொழில்நுட்ப தவறு காரணமாக இந்தி மொழிக்கு இணையப்பக்கம் மாறியதா எல்ஐசி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.. "தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளம் இந்தியில் மாற்றப்பட்டுள்ளதாகவும், மறுபடியும் ஆங்கில மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும்" எல்.ஐ.சி. நிறுவனம் விளக்கம் ஒன்றை தந்திருந்தது.
மதுரை எம்பி: இந்த விளக்கத்தை தந்திருந்த போதிலும் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை விடவில்லை.. அதிலும், மதுரை எம்பி சு வெங்கடேசன், எல்ஐசி முகப்பு பக்கம் இந்திக்கு மாற்றப்பட்டதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று காட்டமாக கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தன்னுடைய எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எல்.ஐ.சி இணைய தள இந்தி பிரச்சனையில், 'தொழில்நுட்பக் கோளாறு' என்று எல்ஐசி விளக்கம் அளித்தது.
அரசியல் கோளாறு: எல்.ஐ.சி.யின் இணையதள மொழித் தெரிவில் இந்தி ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக மராத்தி சொருகப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்காக மராத்தியை நுழைக்க நடந்துள்ள ஏற்பாடு. இதனால் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை. இது தொழில்நுட்பக் கோளாறில்லை. ஒன்றிய அரசின் நிர்ப்பந்தத்தால் ஏற்பட்ட அரசியல் கோளாறு" என்று பதிவிட்டுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications