இப்படி ஒரு ஃப்ரண்ட் வேணும்.. லாட்டரியில் 61 கோடி ஜெயித்த கேரள நபர் செய்த காரியம்! புல்லரிக்க வச்சிட்டாரே
சென்னை: இப்படி ஒரு ஃப்ரண்ட் நமக்கு இல்லையே என ஏங்க வைக்கும் அளவுக்கு கேரள நபர் செய்த செயல் பலரையும் புல்லரிக்க வைத்துள்ளது. அதாவது ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கி வேலை பார்த்து வரும் கேரளாவை சேர்ந்த ராஜன் என்பவருக்கு தான் லாட்டரியில் ரூ.61 கோடி பரிசு அடித்துள்ளது. இந்த பரிசை நண்பர்களுக்கு பகிர்ந்து அளிக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ஏராளமானவர்கள் வேலை நிமித்தமாக செல்கிறார்கள். குறிப்பாக கேரளா, தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவில் துபாய் உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

ரூ 61 கோடி லாட்டரியில் பரிசு
இந்தியாவில் கேரள உள்ளிட்ட லாட்டரிகள் பிரபலமாக இருப்பது போல அபுதாபியில் பிக் டிக்கெட் லாட்டரிகள் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்தியாவில் இருந்து அமீரகம் சென்று அங்கேயே தங்கி பணியாற்றுபவர்கள், நமக்கும் அதிர்ஷ்டம் அடிக்காதா? என்ற ஆசையில் லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குவதை பார்க்க முடிகிறது.
அப்படி டிக்கெட் வாங்கும் சிலருக்கு லாட்டரிகளில் நினைத்துபார்க்க முடியாத அளவுக்கு பெரும் தொகை பரிசாக அடித்துவிடுகிறது. அந்த வகையில், சவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் கேரளாவை சேர்ந்த ராஜன் என்பவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. 282824 - என்ற டிக்கெட் எண்ணுக்கு ரூ 61 கோடி பரிசாக அடித்துள்ளது.
நண்பர்களுக்கு பகிர்ந்து அளிக்க உள்ளார்
இந்த பரிசை கேரளாவின் ராஜன் என்பவர் தட்டி தூக்கியுள்ளார். கடந்த 15 வருடங்களாக லாட்டரி டிக்கெட் வாங்கி வரும் ராஜனுக்கு இப்போதுதான் முதல் முறையாக பரிசு அடித்துள்ளது. இந்த முறை தனது நண்பர்கள் 15 பேருடன் சேர்ந்து இந்த டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். பரிசு விழுந்ததும் தனது நண்பர்களை மறக்காமல் அவர்களுக்கும் சரிசமமாக பரிசை பகிர்ந்து அளிக்க முடிவு செய்துள்ளார் ராஜன்.
சவுதி அரேபியாவில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார் ராஜன். வேலை தேடி போன இடத்தில் அடித்த இந்த ஜாக்பாட்டால் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார் பி.வி. ராஜன். இந்த பிக் டிக்கெட் லாட்டரியின் டிசம்பர் வெற்றியாளரும் இந்தியாவை சேர்ந்தவர்தான். அபுதாபியில் வசித்து வரும் சரவணன் வெங்கடாசலம் என்ற இந்தியருக்கு கடந்த மாதம் பரிசு அடித்து இருந்தது.
வங்க தேசத்தை சேர்ந்தவருக்கும் அதிர்ஷ்டம்
கடந்த புதன்கிழமை நடைபெற்ற பிக் டிக்கெட் டிராவில், முதல் பரிசாக கார் கிடைக்கும் டிக்கெட் குலுக்கலும் நடைபெற்றது. இதில், வங்கதேசத்தை சேர்ந்த முகம்மது ருபேல் சித்திக் அகமது என்பவருக்கு கார் பரிசாக கிடைத்துள்ளது. 020002 என்ற எண் கொண்ட டிக்கெட்டை நவம்பர் 17 ஆம் தேதி அவர் வாங்கியுள்ளார். அபுதாபியில் தங்கி சித்திக் பணியாற்றி வருகிறார்.
ரூ.226 கோடி பரிசு
கடந்த அக்டோபர் மாதம், தெலுங்கானாவை சேர்ந்த அனில் குமார் பெல்லா என்ற 29 வயது இளைஞருக்கு 100 மில்லியன் திர்ஹாம் தொகை பரிசாக அடித்தது. அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 226 கோடியாகும். ஐக்கிய அரபு அமீரகத்தில் வழங்கப்பட்ட மிகப்பெரும் தொகையை வென்ற அனில் குமார் பெல்லா, பரிசு அடித்த பிறகு சில தொகையை தொண்டு நிறுவனத்திற்கு அளிக்க உள்ளதாகவும், ஏனைய தொகையை வைத்து தனது வாழ்க்கை தரத்தை உயர்த்த உள்ளதாகவும் கூறினார். மேலும், ஐக்கிய அரபு அமீரகத்திலேயே தொடர்ந்து வசிக்க இருப்பதாகவும் கூறியிருந்தார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications