சைலண்ட் கில்லர்! இதயத்திற்கு உலை வைக்குதே நிக்கோடின் பவுச்! அமேசான் உட்பட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
சென்னை: இந்தியாவில் உரிய உரிமம் மற்றும் முறையான மருத்துவ அங்கீகாரம் இன்றி ஆன்லைன் வாயிலாக நிக்கோடின் பவுச்களை (Nicotine Pouches) விற்பனை செய்து வரும் நிறுவனங்கள் மீது மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களின் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் இத்தகைய தயாரிப்புகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ள அரசு, சட்ட விதிகளை மீறிய நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஒடிசாவில் புகையிலை மற்றும் நிகோடின் கலந்த பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு அம்மாநில அரசு அதிரடியாக முழுத் தடை விதித்து கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது..

நிக்கோடின் பவுச்
தேசிய சராசரியை விட ஒடிசாவில் புகையிலை பழக்கம் இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதால், பொதுமக்களின் உடல்நலனைப் பாதுகாக்கவும் புற்றுநோய் அபாயத்தைத் தவிர்க்கவும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பான் மசாலா மற்றும் குட்கா உள்ளிட்ட அனைத்து வகையான புகையிலை பொருட்களுக்கும் இந்தத் தடை பொருந்தும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அங்கீகரிக்கப்படாத ஓரல் நிக்கோடின் பவுச்சுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தற்போது எச்சரித்துள்ளது.
இவற்றின் பாதுகாப்பு மற்றும் மருத்துவ திறன் நிரூபிக்கப்படாததால், பொதுமக்கள் இதனை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடும் தண்டனை பாயும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதயத்துக்கு ஆபத்து
மெல்லும் வகையிலான நிக்கோடின் பவுச்களை நம் நாட்டில் பயன்படுத்த அனுமதியில்லை எனவும், அதை ஆன்லைன் மூலம் விற்பனை செய்த நிறுவனங்களுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவ கட்டுப்பாட்டு அதிகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில், "பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, நிக்கோடின் பவுச்களை (Oral Nicotine Pouches) வாங்குதல், விற்றல் மற்றும் உட்கொள்வதற்கு தடுக்கும் வகையில், இந்த எச்சரிக்கை அறிவிப்பு தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் சார்பில் வெளியிடப்படுகிறது.
வாயில் வைக்கும் இவ்வகை நிக்கோடின் பவுச்கள் நம் நாட்டில் அங்கீகரிக்கப்படவில்லை. அவற்றின் பாதுகாப்பும், தரமும் நிரூபிக்கப்படவில்லை.
அமேசான் - அரசு நோட்டீஸ்
இப்படிபட்ட சூழலில் அமேசான், வேர்ல்ட் ஆஃப் நிக்கோடின், தோலக்கியா டொபாகோ, பைடேஸ் போன்ற இணையதளங்கள் மூலம் ஸ்வாக் ஸ்லிம் ஒயிட் மிண்டோ நிக்கோடின் பவுச், டபிள்யூஜி ஒயிட் கோல்ட் ஸ்ட்ராங் மாசிவ் மிண்ட் நிக்கோடின் பவுச், டேஸ் டிராபிகல் மிஸ்ட் நிக்கோடின் பவுச் போன்ற வாயில் வைக்கும் நிக்கோடின் பவுச்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வது தொடர்பாக புகார் வந்துள்ளது. அதனடிப்படையில், தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறையால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
உரிய உரிமங்கள் இன்றி ஆன்லைன் வாயிலாக நிக்கோடின் பவுச்களை விற்றதற்காக டெல்லியைச் சேர்ந்த M/s. RR Impex, M/s. Arthian Organic (OPC) Private Limited, குஜராத்தின் M/s Dholakia Tobacco Pvt. Ltd மற்றும் உத்தரப்பிரதேசத்தின் M/s. Daze India ஆகிய நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம்-1940-ன் விதிகளை மீறி, அங்கீகரிக்கப்படாத மருந்துகளைத் தயாரித்து இறக்குமதி செய்து விற்பனை செய்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், உரிய உரிமம் இல்லாமல் இத்தகைய நிக்கோடின் பவுச்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்ததற்காக அமேசான் (M/s. Amazon Seller Services Private Limited, Bengaluru) நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம்
புகைபிடித்தல் அல்லது புகையிலை மெல்லும் பழக்கத்தை நிறுத்துவதற்கான சிகிச்சையாக இத்தகைய நிக்கோடின் பவுச்களைப் பயன்படுத்துவதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இவற்றின் பாதுகாப்பு, தரம் மற்றும் செயல்திறன் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இத்தயாரிப்புகளை வாயில் வைத்து உறிஞ்சும்போது நிக்கோடின் நேரடியாக ரத்த ஓட்டத்தில் கலந்து கடுமையான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
எனவே, உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், இணையதள சந்தை நிறுவனங்கள் மற்றும் மருந்தகங்கள் அங்கீகரிக்கப்படாத நிக்கோடின் பவுச்களைத் தயாரிப்பதையோ அல்லது விற்பனை செய்வதையோ தவிர்க்க வேண்டும் என்று மருந்து கட்டுப்பாட்டுத் துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பான சந்தேகங்கள் அல்லது புகார்களுக்குத் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்தை 94458-65400 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications