எந்த சின்னத்துல ஓட்டு போட்டாலும் “தாமரை”க்கு லைட் எரியுதா? பரபரத்த சென்னை.. ஆய்வு செய்த அதிகாரிகள்!
சென்னை: சென்னை வியாசர்பாடியில் எந்த சின்னத்திற்கு வாக்களித்தாலும் பாஜகவின் தாமரை சின்னத்திற்கு நேராக லைட் எரிவதாக புகார் எழுந்தது. இதனால் அங்கு எதிர்க்கட்சிகள் தர்ணாவில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. நடந்தது என்ன?
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஒரேகட்டமாக 39 தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையில் இருந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகள் சிறிய அளவில் இருந்தாலும், பெரும்பாலும் வாக்குப்பதிவு தடைபடாமல் நடந்தது. இந்நிலையில், வடசென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடியில் புதிய பிரச்சனை எழுந்துள்ளது.
வியாசர்பாடி எம்.கே.பி நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த சின்னத்துக்கு நேராக உள்ள பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்துக்கு அருகில் உள்ள லைட் எரிவதாக எழுந்த புகாரையடுத்து திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்காளர்கள் சிலர் தாங்கள் வேறு சின்னத்துக்கு வாக்களித்தாலும் தாமரை சின்னத்திற்கு நேராக லைட் எரிவதாக கூறியதை அடுத்து, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வாக்குச்சாவடி பாக முகவர்கள், பரிசோதிக்கும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விரைந்து வந்த தேர்தல் அதிகாரிகள் திமுக அதிமுக பூத் முகவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அதனை ஏற்காமல் திமுக, அதிமுக பூத் முகவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டு, வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.
ஏற்கனவே, கேரளாவில் காசர்கோடு தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவின்போது, பாஜகவுக்கு ஒரு முறை பட்டன் அழுத்தினால் 2 வாக்குகள் விழுவதாக சர்ச்சை எழுந்து, உச்ச நீதிமன்றம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.
திமுக, அதிமுக பூத் ஏஜெண்டுகளின் தர்ணாவை தொடர்ந்து, தேர்தல் அதிகாரிகள், அந்த வாக்குச்சாவடியில் உள்ள இயந்திரத்தை ஆய்வு செய்தனர். அதிகாரிகளின் ஆய்வுக்குப் பின், அப்படி எதுவும் தவறு நடக்கவில்லை என உறுதி செய்தனர். தொடர்ந்து, 150வது எண் வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications