"முடிச்சிட்டீங்களா" வாக்காளர் அட்டை + ஆதார் இணைப்பு? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சொன்ன முக்கிய தகவல்
சென்னை: தமிழகத்தில் மார்ச் 31 வரை, மொத்தம் 4.21 கோடி வாக்காளர்கள் தங்களின் ஆதார் எண்களை, வாக்காளர் பட்டியலுடன் இணைக்க வழங்கி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.. அத்துடன், வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், நீட்டிப்பு, குறித்து தேர்தல் ஆணையம் இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் தந்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள், இரட்டை பதிவு, இறப்பு வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றிருத்தல் ஆகியவற்றால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டு வந்தன.
இந்த குழப்பங்களை போக்கும் வகையில் நீண்ட நாள் போராட்டத்துக்குப்பிறகு, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.

ஓட்டுச்சாவடி
அந்தவகையில், கடந்த வருடம் ஆகஸ்ட் 1-ம் தேதி ஆதார் இணைப்புக்கான விண்ணப்பங்கள் பெறும் நடவடிக்கை தொடங்கப்பட்டது... வாக்காளர் பதிவு அலுவலர்கள் நேரடியாக வீடுவீடாகச் சென்று விண்ணப்பங்களைப் பெற்றனர். அத்துடன் கருடா என்ற ஆப்பிலும் ஆதார் தகவல்களைப் பதிவு செய்தனர்.. மேலும், ஆன்லைனிலும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது... ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று, வாக்காளர்களின் ஆதார் எண்களை சேகரித்தனர்.. சிறப்பு முகாம்களும்நடத்தப்பட்டன. www.nvsp.in என்ற இணையதளம் வழியாக, 'Voter Help Line' எனும் செயலி வழியாகவும் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்யலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.

லிஸ்ட் எங்கே
எனவே, இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் வாக்காளர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை இணைப்பதற்காக அவற்றை பெறும் பணி, கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதியுடன் இந்த நடவடிக்கைகள் முடிவடையும் என்று இந்திய தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்திருந்தது.. ஆனால், மத்திய சட்டத்துறையின் சார்பில் கால அவகாசத்தை மேலும் ஓராண்டுக்கு அதாவது அடுத்தாண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டித்து சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு, சோஷியல் மீடியாவில் தகவல் வெளியானது.

காலநீட்டிப்பு
இந்நிலையில், இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ நேற்றைய தினம் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் சொல்லும்போது, "காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக எந்த அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் இதுவரை வெளியிடவில்லை... இது தொடர்பாக, தேர்தல் கமிஷன் முடிவுக்காக காத்திருக்கிறோம். ஏற்கனவே கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் இணைப்புக்கான விண்ணப்பிக்கும் நடவடிக்கை முடிந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை 68.75 சதவீதம் வாக்காளர்கள் ஆதார் இணைப்புக்கு விண்ணப்பித்துள்ளனர்.

அறிவிப்பு
அதாவது மொத்தம் உள்ள 6.20 கோடி வாக்காளர்களில் 4.21 கோடி வாக்காளர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், அரியலூரில் 99 சதவீதம், கள்ளக்குறிச்சியில் 93.91 சதவீதம், நாகப்பட்டினத்தில் 87.49 சதவீதம் பேரும், குறைந்தபட்சமாக சென்னையில் 32, கோயம்புத்தூரில் 48.34, செங்கல்பட்டில் 53.50 சதவீதம் பேரும் விண்ணப்பித்துள்ளனர்.. மேலும், ஆதார் - வாக்காளர் பட்டியல் இணைப்பு பணியை தேர்தல் ஆணையம் இதுவரை தொடங்கவில்லை. இதற்கான அறிவிப்பும் வரவில்லை. அதற்கான விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன" என்றார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications