96 சரக்கு பாட்டில்களுடன் சிக்கிய டிரைவர்- ஜாமீனில் அழைத்து சென்ற நடிகை ரம்யா கிருஷ்ணன்
சென்னை: 96 சரக்கு பாட்டில்களை சட்டவிரோதமாக கடத்தி பிடிபட்ட தமது ஓட்டுநர் செல்வகுமாரை, கானத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரில் போய் ஜாமீனில் அழைத்து சென்றிருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.
தென்னிந்திய திரை உலகின் முன்னணி நட்சத்திரம் ரம்யா கிருஷ்ணன். ஜெயலலிதாவின் வாழ்க்கையை விவரிக்கும் குயின் என்ற வெப் சீரிஸில் நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் ரம்யா கிருஷ்ணன்.

போலீஸ் சோதனை
அவரும் அவரது சகோதரி வினயா கிருஷ்ணாவும் சென்ற காரை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் மடக்கினர். முட்டுக்காடு சோதனை சாவடியில் இவர்களது காரை போலீசார் மடக்கினர்.

மது பாட்டில்கள்
அப்போது காரில் இருந்த ரம்யா கிருஷ்ணன், வாகனத்தை சோதனையிட ஒப்புக் கொண்டார். சோதனையில் காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 96 மதுபாட்டில்களை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது லாக்டவுன் அமலில் உள்ள சூழ்நிலையில் சென்னையில் மதுபான விற்பனைக்கு தடை உள்ளது.

செல்வகுமார் கைது
இந்த நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் கடத்திச் செல்லப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து ரம்யா கிருஷ்ணனின் டிரைவர் செல்வகுமாரை போலீசார் கைது செய்தனர். செல்வகுமாரை கைது செய்த போலீசார் அவரை கானாத்தூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

ஜாமீனில் டிரைவர் விடுதலை
பின்னர் செல்வகுமாரை சொந்த ஜாமீனில் போலீசார் விடுவித்தனர். நடிகை ரம்யா கிருஷ்ணனே கானாத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரில் சென்று டிரைவர் செல்வகுமாரை ஜாமீனில் அழைத்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இச்சம்பவம் தொடர்பாக ரம்யா கிருஷ்ணன் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
-
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள்












Click it and Unblock the Notifications