Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவங்க மொத்தம் “4 பேரு”.. மொத்த காங்கிரஸும் “சவுத் இந்தியா” கன்ட்ரோல்தான்! ஒரு கூஸ்பம்ப் ரீவைண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தென்னிந்தியர்களான சசி தரூர் அல்லது அல்லது மல்லிகார்ஜுன கார்கே தேர்வாகவது உறுதியான நிலையில் இதற்கு முன் இந்த பதவியை அலங்கரித்த தென்னிந்திய தலைவர்கள் பட்டியலை பார்ப்போம்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்து வந்த ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து பதவி விலகினார். அதன் பின்னர் புதிய தலைவராக யாரும் தேர்வு செய்யப்படவில்லை.

இந்த நிலையில் அக்டோபர் 17 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அக்டோபர் 19 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் நேருக்கு நேர் மோதுகின்றனர்.

 தென்னிந்தியர் கையில்

தென்னிந்தியர் கையில்

இந்த தேர்தல் மூலமாக காங்கிரஸ் கட்சியின் தலைமை காலத்துக்கு பிறகு மீண்டும் தென்னியர் கைக்கு வர இருக்கிறது. இதற்கு காரணம் வேட்பாளர்களான சசி தரூர், மல்லிகார்ஜுன கார்கே ஆகிய இருவரும் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள். மல்லிகார்ஜுன கார்கே கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். அம்மாநில அமைச்சராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்தவர். மற்றொரு வேட்பாளரான சசிதரூர் கேரள மாநில எம்பியாக உள்ளார்.

 நீலம் சஞ்சீவன ரெட்டி

நீலம் சஞ்சீவன ரெட்டி

இந்திய விடுதலை போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுத்துக் கொண்ட நீலம் சஞ்சீவன ரெட்டி கடந்த 1960 முதல் 1963 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்தவர். ஆந்திர பிரதேசத்தின் முதல் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட நீலம், லோக் சபா சபாநாயகராகவும், மத்திய அமைச்சராகவும், 1977 முதல் 1982 வரை இந்திய குடியரசுத் தலைவராகவும் பதவி வகித்தவர்.

காமராஜர்

காமராஜர்

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், முன்னணி தலைவர்களில் ஒருவராகவும் மதிக்கப்படும் கர்மவீரர் காமராஜர் 1964 ஆம் ஆண்டு முதல் 1967 ஆம் ஆண்டு வரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்துள்ளார். 1954 ஆம் ஆண்டு முதல் 1963 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த காமராஜரை இன்றளவும் தமிழ்நாடு மக்கள் போற்றி புகழ்ந்து வருகின்றனர்.

எஸ்.நிஜலிங்கப்பா

எஸ்.நிஜலிங்கப்பா

ஆந்திராவை சேர்ந்த நீலம் சஞ்சீவன ரெட்டி மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த காமராஜருக்கு பிறகு கடந்த 1968 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவரானவரும் தென்னிந்தியாவை சேர்ந்தவரே. அவர் பெயர் எஸ்.நிஜலிங்கப்பா. வழக்கறிஞரும் சுதந்திர போராட்ட வீரருமான இவர், கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராகவும் பதவி வகித்து இருக்கிறார்.

 பி.வி.நரசிம்மராவ்

பி.வி.நரசிம்மராவ்

பமுலபரதி வெங்கட நரசிம்மராவ் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்தார். வழக்கறிஞரான இவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த காலக்கட்டத்திலேயே (1991-1996) இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர். இந்திய பொருளாதார சீர்திருத்தம் இவரது காலத்தில்தான் கொண்டுவரப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+