ஜம்மு காஷ்மீர் மட்டுமல்ல.. குஜராத்துக்கும் சிறப்பு சட்டம் இருக்கு! லிஸ்ட்ல இத்தனை மாநிலங்கள் வருதா?
சென்னை: ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கும் நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு மட்டும்தான் சிறப்பு சட்டம் உள்ளதா? வேறு எந்தெந்த மாநிலங்களில் சிறப்பு சட்டங்கள் உள்ள? என்று பார்ப்போம்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு லடாக்கை உள்ளடக்கிய ஜம்மு காஷ்மீர் பகுதி இந்தியாவுடன் இணையும்போது 370 என்ற சிறப்பு சட்டம், இறையான்மை, சிறப்பு அரசியல் பிரிவுகளை கொண்டு வரப்பட்டது. இதன்படி வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் அங்கு நிலம் வாங்க முடியாது, ஜம்மு காஷ்மீருக்கு என தனி குடியுரிமை, தனி கொடி என பல்வேறு சிறப்பு அந்தஸ்துக்கள் இருந்து வந்தன. இந்த நிலையில்தான் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டத்தை நீக்கியது மத்திய அரசு.

அத்துடன் லடாக்கையும், ஜம்மு காஷ்மீரையும் பிரித்து யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதனை கண்டித்து ஜம்மு காஷ்மீர் முழுவதும் போராட்டங்கள் வழுத்தன. உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி போன்ற தலைவர்கள் மாதக் கணக்கில் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு வழங்கியது. அதில் 370 சிறப்பு சட்டம் என்பது தற்காலிகமானது என்று கூறி அதை நீக்கியது செல்லும் என்று தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் சிலர், ஒரே நாடாக இருக்கும்போது ஜம்மு காஷ்மீருக்கு மட்டும் ஏன் சிறப்பு சட்டம் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஜம்மு காஷ்மீருக்கு ஏன் சிறப்பு சட்டம் வழங்கப்பட்டது என்பதற்கு வரலாற்று அடிப்படையில் பல்வேறு காரணங்கள் இருக்கின்றனர். ஆனால், ஜம்மு காஷ்மீருக்கு மட்டும்தான் சிறப்பு சட்டம் உள்ளதா என்று பார்த்தால் அதுதான் இல்லை. நமது அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவுக்கு கூட சிறப்பு சட்டங்கள் உள்ளன. இப்படி எந்தெந்த மாநிலங்களுக்கு சிறப்பு சட்டங்கள் உள்ளன என்று பார்ப்போம்.
2019 ஆம் ஆண்டு நீக்கப்பட்ட பிரிவு 370 ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு விதியாகும்.
இதற்கு அடுத்து இருக்கும் சிறப்பு பிரிவு 371 என்பது மகாராஷ்டிராவின் விதர்பா மற்றும் மராத்வாடா பகுதிகள் மற்றும் குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளுக்கான சிறப்பு சட்டங்கள்.
பிரிவு 371A: நாகாலாந்து மாநிலத்திற்கான நாகா மலைகள், டுயூசாங் பகுதி சிறப்பு விதி 1962 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.
பிரிவு 371B: அசாம் மாநிலத்தில் போடோலாந்து பிரதேச பகுதி நிர்வாக சிறப்பு சட்டங்கள்.
பிரிவு 371C: மணிப்பூர் மாநிலத்திற்கான நிர்வாக சிறப்பு விதி.
பிரிவு 371D: ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கான சிறப்பு சட்டங்கள்.
பிரிவு 371E: ஆந்திரப் பிரதேசத்தில் மத்திய பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான சிறப்பு விதி.
பிரிவு 371F: சிக்கிம் மாநிலத்திற்கான சிறப்பு சட்டங்கள்.
பிரிவு 371G: மிசோரம் மாநிலத்திற்கான சிறப்பு விதி.
பிரிவு 371H: அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கான சட்ட ஒழுங்கு சிறப்பு விதிகள்
பிரிவு 371I: கோவா மாநிலத்திற்கான போர்த்துகீசிய கலாச்சார சிறப்பு விதி
பிரிவு 371J: கர்நாடகா மாநிலத்திற்கான சிறப்பு சட்டங்கள்.
பல்வேறு இன, மொழி, மதம், பண்பாடுகளை கொண்ட இந்தியாவின் அடிநாதமே வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரம்தான். இந்த பண்முகத்தன்மையை பாதுகாக்கும் விதமாகவே ஒவ்வொரு மாநிலங்களுக்கு ஏற்ப சிறப்பு விதிகள் கொண்டு வரப்பட்டன. அதில் முதன்மையானதாக இருக்கும் ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டத்தில்தான் மத்திய அரசு கை வைத்தது குறிப்பிடத்தக்கது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications