ஆஹா ஒரு குட் நியூஸ்- தமிழகத்தில் 10 நாளுக்கு பிறகு 500 எண்ணிக்கையிலிருந்து குறைந்த கொரோனா பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 10 நாட்களுக்கு பிறகு 500 எண்ணிக்கையிலிருந்து இன்றைய தினம் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

Recommended Video

    New Rules On Quarantine And Testing In Tamilnadu

    தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை குறித்து இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். அப்போது இன்று தமிழகத்தில் கொரோனாவால், 447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் 194 பேர் பெண்கள்.

    கொரோனா பாதித்தோர்

    கொரோனா பாதித்தோர்

    இன்று 363 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 11,965 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 58 டெஸ்ட் லேப் தமிழகத்தில் உள்ளது, இந்தியாவிலேயே இதுதான் அதிகம் என தெரிவித்தார். அத்துடன் இன்று கொரோனா பாதிப்பு 9,674 பேராவர்.

    கொரோனா பாதிப்பு

    கொரோனா பாதிப்பு

    10 நாட்களுக்கு பிறகு 500 எண்ணிக்கையிலிருந்து இன்றுதான் குறைந்துள்ளது. அதாவது மே 1 ஆம் தேதி 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மே 2-ஆம் தேதி 231 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மே 3-ஆம் தேதி 266 பேருக்கும் பாதிப்பு இருந்தது.

    669 பேர்

    669 பேர்

    இதையடுத்து கடந்த மே 4 ஆம் தேதி முதல் 527 பேருக்கும் மே 5 ஆம் தேதி 508 பேருக்கும் மே 6-ஆம் தேதி 771 பேருக்கும் மே 7ஆம் தேதி 580 பேருக்கும் பரவியது. அது போல் மே 8-ஆம் தேதி 600 பேருக்கும், மே 9-ஆம் தேதி 526 பேருக்கும் மே 10ஆம் தேதி 669 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

    10 ஆயிரத்தை நெருங்கும்

    10 ஆயிரத்தை நெருங்கும்

    பின்னர் மே 11-ஆம் தேதி மிகவும் உச்சபட்சமாக 798 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மே 12 ஆம் தேதி 716 பேருக்கும் மே 13 ஆம் தேதி 509 பேருக்கும் மே 14-ஆம் தேதி 447 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் இன்னொரு வருத்தமுறும் செய்தியும் உள்ளது. அதாவது நாளை அல்லது நாளை மறுநாள் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10ஆயிரத்தை அடையும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+