கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிய இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக பதவி விலகி விட்டு தன்னை வந்து நேரில் சந்திக்க வேண்டும் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Recommended Video
தேசிய அரசியலில் முதல்வர் Stalin? அச்சாரம் போட்ட அண்ணா அறிவாலயம்
தமிழ்நாட்டில் கடந்த 22ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று வெளி வந்தன. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணிதான் கைப்பற்றி உள்ளது. இதில் 20 மாநகராட்சி மேயர் வேட்பாளர்களின் பெயர்களை நேற்று திமுக வெளியிட்டது. கும்பகோணம் மாநகராட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வென்றவர்கள் நேற்று முதல்நாள் பதவி ஏற்ற நிலையில் இன்று மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. வார்டு உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் மேயர், துணை மேயர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பொதுவாக இன்று போட்டியிடும் வேட்பாளர்கள் எதிர்ப்பு இன்றி தேர்வு செய்யப்படவே வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனாலும் சில நகராட்சிகளில் இரண்டு பேர் நகரமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டால் வாக்கெடுப்பு முறையில் அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
Mar 04, 2022, 6:05 pm IST
கூட்டணிக்கு எதிராகத் தேர்வானவர்கள் பதவி விலக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு. தலைமை அறிவித்ததை மீறி வென்றவர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் ஆணை. பதவியை ராஜினாமா செய்து விட்டு தன்னை நேரில் வந்து சந்திக்கவும் ஸ்டாலின் உத்தரவு
Mar 04, 2022, 5:17 pm IST
நெய்வேலி எம்எல்ஏ வீட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
கடலூர் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றியது.
அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றதற்கு எதிர்ப்பு
Mar 04, 2022, 4:43 pm IST
பெரியபாளையம் ஆரணி பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தலில் 3 பெண் கவுன்சிலர்கள் கடத்தல்.
ஆரணி பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தலில 3 பெண் கவுன்சிலர்கள் கடத்தல்.
சுயேச்சை வேட்பாளர், திமுக, அதிமுக பெண் கவுன்சிலர்கள் காரில் கடத்தல்
கூட்டணி கட்சியினருக்கு எதிராக திமுக வேட்பாளர்களை நிறுத்தியது வருந்தத்தக்கது - சிபிஎம் பாலகிருஷ்ணன் பேட்டி.
திருமுருகன் பூண்டி நகராட்சியில் திமுக வெற்றி பெற்றுள்ளது வருந்தத்தக்கது.
தலைமையினால் அறிவிக்கப்பட்ட பின்னர் திமுகவினர் கட்சிக்கட்டுப்பாட்டை மீறலாமா என பாலகிருஷ்ணன் கேள்வி
Mar 04, 2022, 4:26 pm IST
திருச்செங்கோடு நகராட்சித்துணைத்தலைவர் தேர்தலில் 21 வாக்குகள் பெற்று கார்த்தி வெற்றி.
நகராட்சித்தலைவர் பதவிக்கான தேர்தலில் தோல்வியடைந்த கார்த்தி துணைத்தலைவர் தேர்தலில் வெற்றி
Mar 04, 2022, 4:04 pm IST
திருத்துறைப்பூண்டி நகர்மன்றத்தை கைப்பற்றிய கணவன் மனைவி
திருத்துறைப்பூண்டி நகரமன்றத் தலைவராக கவிதா பாண்டியன் தேர்வு.
நகர மன்ற துணைத் தலைவராக கவிதாவின் கணவர் ஆர் எஸ் பாண்டியன் வெற்றி பெற்றுள்ளார்
Mar 04, 2022, 3:56 pm IST
திருவாரூர் நீடாமங்கலம் பேரூராட்சித் துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு.
ராமநாதபுரம் காயல்குடியில் யாருமே வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
காயல்குடியில் துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு.
தஞ்சை பட்டுக்கோட்டை துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது
Mar 04, 2022, 3:45 pm IST
ஓசூர் மாநகராட்சியின் துணை மேயர் தேர்தலில் திமுகவின் ஆனந்தைய்யா வெற்றி.
அதிமுக வேட்பாளர் ஜெயப்பிரகாஷை விட 6 வாக்குகள் வித்தியாசத்தில் ஆனந்தைய்யா வெற்றி பெற்றுள்ளார்
Mar 04, 2022, 3:45 pm IST
வேலூர் மாநகராட்சியின் துணை மேயராக சுனில்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் போட்டியின்றி தேர்வு
Mar 04, 2022, 3:39 pm IST
அதிமுக கவுன்சிலர்கள் 7 பேர் கட்சியில் இருந்து நீக்கம்
தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக கவுன்சிலர்கள் 7 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டறிக்கை
Mar 04, 2022, 3:35 pm IST
நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயராக மேரி பிரின்சி வெற்றி
நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயராக திமுகவைச் சேர்ந்த மேரி பிரின்சி தேர்வு செய்யப்பட்டார். துணை மேயருக்கான தேர்தலில் திமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் 28 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
Mar 04, 2022, 3:35 pm IST
பட்டுக்கோட்டை நகராட்சி துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு
பெரும்பான்மையான உறுப்பினர்கள் அவைக்கு வராத காரணத்தால் தேர்தல் ஒத்திவைப்பு
Mar 04, 2022, 3:34 pm IST
கடலூர் நெல்லிக்குப்பம் துணைத்தலைவர் தேர்தலில் விசிக வேட்பாளர் தோல்வி.
விசிக வேட்பாளரை தோற்கடித்து திமுக வேட்பாளர் வெற்றி பெறறார்.
நகராட்சித்தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் விசிகவை தோற்கடித்தது திமுக
Mar 04, 2022, 3:24 pm IST
குலுக்கல் மூலம் சங்கரன்கோவிலை கைப்பற்றிய திமுக
சங்கரன்கோவில் நகராட்சி நகர் மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த உமாமகேஸ்வரி குலுக்கல் மூலம் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வசமிருந்த சங்கரன்கோவில் நகராட்சி 15 ஆண்டுகள் பின் திமுக வசமானது
Mar 04, 2022, 3:24 pm IST
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய பதவியிடங்களை திமுகவினர் சில இடங்களில் தட்டிப் பறித்தது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் திமுக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சியின் சீனியர்கள், அமைச்சர்கள், மா.செ.க்கள் உள்ளிட்டவர்களோடு அவசர ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார். கட்டுப்பாட்டை மீறியவர்கள் மீது கடும் நடவடிக்கை காத்திருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Mar 04, 2022, 3:19 pm IST
தஞ்சாவூர் மாநகராட்சியின் துணை மேயராக அஞ்சுகம் பூபதி தேர்வு
Mar 04, 2022, 3:18 pm IST
நெல்லை மாநகராட்சி மேயராக திமுகவின் பி.எம். சரவணன் வெற்றி பெற்றார்.
நெல்லை மாநகராட்சி துணைமேயராக திமுகவின் கே.ஆர் ராஜூ தேர்வு செய்யப்பட்டுள்ளார்
Mar 04, 2022, 3:18 pm IST
சென்னை மாநகராட்சி துணைமேயராக திமுகவின் மகேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாநகராட்சியின் துணை மேயராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தாமரைச்செல்வம் தேர்வு
Mar 04, 2022, 3:18 pm IST
தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயராக ஜெனிட்டா தேர்வு.
தம்பரம் மாநகராட்சியின் துணைமேயர் காமராஜ் தேர்வு.
சிவகாசி மாநகராட்சியின் துணை மேயராக விக்னேஷ் பிரியா தேர்வு.
ஈரோடு மாநகராட்சி துணைமேயராக திமுகவைச் சேர்ந்த செல்வராஜ் தேர்வு.
மதுரை மாநகராட்சி துணை மேயராக நாகராஜன் பதவியேற்பு
Mar 04, 2022, 3:17 pm IST
கோவை மோப்பிரிபாளையம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் சசிகுமார் வெற்றி
Mar 04, 2022, 3:17 pm IST
கூட்டணி கட்சிகளின் இடத்தில் வென்ற திமுக வேட்பாளர்களை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் - விசிக திருமாவளவன்.
வெற்றிப் பெற்றவர்களை ராஜினாமா' செய்ய வைத்து 'கூட்டணி அறத்தைக்' காத்திட வேண்டும் - திருமா.
முதல்வர் ஸ்டாலினுக்கு விசிக தலைவர் எம்பி திருமாவளவன் வேண்டுகோள்
Mar 04, 2022, 3:17 pm IST
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியில் அதிமுக ஆதரவு வேட்பாளர் ராமலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிப்பு
Mar 04, 2022, 3:17 pm IST
தேவகோட்டை நகராட்சியை அமமுக ஆதரவுடன் அதிமுக கைப்பற்றியது.
அதிமுக சார்பில் சுந்தரலிங்கம் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வானார்.
தேவகோட்டை நகராட்சியை மீண்டும் அதிமுக கைப்பற்றி உள்ளது.
திமுக , காங்கிரஸ் உறுப்பினர்கள் யாரும் மறைமுக தேர்தலில் பங்கேற்கவில்லை
Mar 04, 2022, 2:07 pm IST
சிவகங்கை நகராட்சியை அதிமுக கைப்பற்றியது
அமமுக உறுப்பினர்கள் 5 பேர் ஆதரவுடன் நகராட்சித்தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது
Mar 04, 2022, 1:26 pm IST
அன்னூர் நகராட்சித்தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு
திமுகவினரிடையே ஏற்பட்ட மோதலால் தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
Mar 04, 2022, 1:13 pm IST
திமுகவினரிடையே மோதலால் பூந்தமல்லியில் தேர்தல் ஒத்திவைப்பு
பூந்தமல்லியில் நகராட்சித்தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு.
அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து போட்டி திமுக வேட்பாளர் மனு தாக்கல்.
திமுகவினரிடையே ஏற்பட்ட மோதலால் தேர்தல் தேதிக்குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
Mar 04, 2022, 1:12 pm IST
அறிவாலயத்தில் மு.க ஸ்டாலின் ஆலோசனை
கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் போட்டியிட்டதால் மு.க ஸ்டாலின் ஆலோசனை.
விசிக, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் வெற்றி பெற்றுள்ளனர்.
அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆலோசனை.
தேனி, ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்
Mar 04, 2022, 1:05 pm IST
கரூர் மாநகராட்சியின் மேயர் தேர்தலில் திமுகவை சேர்ந்த கவிதா கணேசன் முதல் பெண் மேயராக போட்டியின்றித் தேர்வு .
மறைமுகத் தேர்தலை 2 அதிமுக உறுப்பினர்கள் புறக்கணித்தனர்
Mar 04, 2022, 12:56 pm IST
மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் தேர்தலில் திமுக இடையே கடும் போட்டி.
அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தின் மைத்துனரான லிங்கராஜன் திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டி.
2 வாக்குகள் வித்தியாசத்தில் குண்டாமணி என்கின்ற செல்வராஜ் நகரமன்றத் தலைவராக வெற்றி
Mar 04, 2022, 12:56 pm IST
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி திமுக வேட்பாளர் வெற்றி.
திமுகவை சேர்ந்தவர் வென்ற நிலையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி சேர்மன் பதவி காங்கிரஸ் கட்சிக்கு திமுக மூலம் ஒதுக்கப்பட்டது.
காங். வேட்பாளர் செல்வமேரி அருள்ராஜ் இங்கு போட்டியிட்டார்.
இவரை எதிர்த்து திமுக வேட்பாளர் சாந்தி போட்டியிட்டு வெற்றிபெற்றார்
READ MORE
8:52 AM, 4 Mar
வார்டு உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் மேயர், துணை மேயர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்
8:52 AM, 4 Mar
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வென்றவர்கள் நேற்று முதல்நாள் பதவி ஏற்ற நிலையில் இன்று மறைமுக தேர்தல்
8:52 AM, 4 Mar
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மேயர், துணை மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது
9:10 AM, 4 Mar
கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர்- தமிழழகன். இங்கு மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் கே.சரவணன் மேயராக போட்டியிடுகிறார்
9:12 AM, 4 Mar
ஈரோடு மாநகராட்சி மேயர் - நாகரத்தினம்; துணை மேயர் - செல்வராஜ்
9:12 AM, 4 Mar
சேலம் மாநகராட்சி மேயர் - ஏ. இராமச்சந்திரன் திருப்பூர் மாநகராட்சி மேயர் - தினேஷ் குமார்
9:12 AM, 4 Mar
கோவை மாநகராட்சி மேயர் - கல்பனா; துணை மேயர் - வெற்றிச்செல்வன்
9:12 AM, 4 Mar
கடலூர் மாநகராட்சி மேயர் - சுந்தரி;
9:12 AM, 4 Mar
வேலூர் மாநகராட்சி மேயர் - சுஜாதா அனந்தகுமார்; துணை மேயர் - சுனில்
9:12 AM, 4 Mar
திண்டுக்கல் மாநகராட்சி மேயர் - இளமதி; துணை மேயர் - இராஜப்பா
9:13 AM, 4 Mar
ஒசூர் மாநகராட்சி மேயர் - எஸ்.ஏ.சத்யா; துணை மேயர் - சி.ஆனந்தைய்யா
9:13 AM, 4 Mar
கரூர் மாநகராட்சி மேயர் - கவிதா கணேசன்; துணை மேயர் - தாரணி
9:13 AM, 4 Mar
தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் - சண். இராமநாதன்; தஞ்சாவூர் துணை மேயர் - அஞ்சுகம் பூபதி;
9:13 AM, 4 Mar
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் - மகாலட்சுமி யுவராஜ்
9:14 AM, 4 Mar
தாம்பரம் மாநகராட்சி மேயர் - வசந்தகுமாரி தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் - ஜி. காமராஜ்
9:14 AM, 4 Mar
ஆவடி மாநகராட்சி மேயர் - ஜி. உதயகுமார்;
9:14 AM, 4 Mar
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் - என்.பி.ஜெகன்; துணை மேயர் - ஜெனிட்டா செல்வராஜ்
9:14 AM, 4 Mar
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் - மகேஷ் துணை மேயர் - மேரி பிரின்சி
9:14 AM, 4 Mar
சிவகாசி மாநகராட்சி மேயர் - சங்கீதா இன்பம்; துணை மேயர் - விக்னேஷ் பிரியா
9:15 AM, 4 Mar
நெல்லை மாநகராட்சி மேயர் - பி.எம்.சரவணன்; துணை மேயர் - கே.ஆர்.ராஜூ
9:15 AM, 4 Mar
திருச்சி மாநகராட்சி மேயர் - மு. அன்பழகன்; துணை மேயர் - திவ்யா தனக்கோடி
9:15 AM, 4 Mar
மதுரை மாநகராட்சி மேயர் - இந்திராணி
9:15 AM, 4 Mar
சென்னை மாநகராட்சி மேயர் - ஆர். பிரியா; துணை மேயர் - மகேஷ் குமார்
9:15 AM, 4 Mar
திமுகவின் மேயர், துணை மேயர் வேட்பாளர்கள் முழுமையான பட்டியல்:
9:40 AM, 4 Mar
மறைமுக தேர்தலுக்கான கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் 13 பேரும் பங்கேற்கவிலலை
9:41 AM, 4 Mar
சென்னை மேயராக போட்டியின்றித் தேர்வானார் திமுகவின் ஆர் பிரியா
9:44 AM, 4 Mar
சென்னை மேயராக போட்டியின்றித் தேர்வானார் திமுகவின் ஆர் பிரியா.
மறைமுக தேர்தலுக்கான கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் 13 பேரும் பங்கேற்கவிலலை
10:03 AM, 4 Mar
அமைச்சர்கள் சேகர்பாபு, மா சுப்பிரமணியன் ஆகியோர் பிரியா ராஜனை மேயர் நாற்காலியில் அமர வைத்தனர்
10:03 AM, 4 Mar
சென்னை மேயர் பிரியா ராஜனுக்கு மேயருக்கான செங்கோலை வழங்கிய அமைச்சர்கள்
10:15 AM, 4 Mar
வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் ஒத்திவைப்பு